Provident Fund நிறைய நிறுவனத்தில் ஊழியர்களுக்கு நன்மையை வழங்குகிறது, ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர் சம்பள பணத்திலிருந்து மாதாந்திரம் பிடிக்கப்படுவது தான் PF. இந்த பணம் ஒரு ஊழியர் இறுதியில் அந்த வேலையை விட்டு செல்லும்போது அந்த பணம் மொத்த தொகையாக சேர்த்து கிடைக்கும். இதில் சில பேருக்கும் நமக்கு வரும் PF பணம் இது வரை அக்கவுண்டில் எவ்வளவு இருக்கிறது, வருகிறதா இல்லை என்பதை பற்றி இப்பொழுது நீங்கள் வெறும் உங்கள் போனின் மூலமாகவே எளிதாக தெரிந்து கொள்ளலாம்
அது எப்படி என்ற கேள்வி நம்முள் நிறைய பேருக்கு இருக்கும் இது மிகவும் எளிதானது வாருங்கள் பார்ப்போம்
உமங் (Umang ) ஆப் பயன்படுத்தி இதை செய்யலாம்
உமங் (Umang ) ஆப் கடந்த ஆண்டு அரசு இதை வேளியிட்டது, இந்த ஆப் மூலம் பயனர்கள் அரசு சார்ந்த தகவலை அறிந்து கொள்ளவும் இதனுடன் இதில் பயனர்களின் குறையை இங்கே பதிவு செய்யலாம் மற்றும் EPF Passbook திறந்து பார்க்கவும் மற்றும் பல வேலைகளுக்கு இது உதவுகிறது. பயனர் இதை டவுன்லோடு செய்ய ஒரு முறை ரெஜிஸ்ட்ரேஷன் மூலம் அதாவது பயனர்களின் மொபைலில் வரும் OTP வைத்து இதை நிறுவி பயன்படுத்த வேண்டும்.
1 உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆப் ஸ்டோரில் இருந்து இதை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
2 இந்த ஆப் திறக்க உங்களது ரெஜிஸ்டர் போன் நம்பர் மூலம் லொகின் செய்து வர வேண்டும்.
3 மேல் இடது மூலையில் இருந்து மூன்று horizontal பார்கள் மீது தட்டவும்.
4 மேலே இருக்கும் சர்விஸ் டேரக்டரியில் (survice Directory) யில் சென்று EPFO ஆப்ஷனை சர்ச் செய்யவும்.
5 இப்பொழுது கீழே நகர்ந்து வருவதன் மூலம் View Passbook’ என்பதை க்ளிக் செய்து உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் பணத்தை சரி பார்க்கலாம்.
2. EPFO portal பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்
நம்முள் நிறைய பேர் இது போன்ற ஆப் பயன்படுத்த விரும்புவதில்லை, அவற்றுள் சில பேர் EPFO போர்டல் பயன்படுத்துவதன் மூலம் இதை எளிதாக அறியலாம், அதற்க்கு என்ன செய்வது வாருங்கள் பார்ப்போம்.
1 உங்கள் லேப்டாப் அல்லது PC யில் சென்று www.epfindia.gov.in திறக்கவும்.
2 Employees கீழ் இருக்கும் our service section யில் க்ளிக் செய்ய வேண்டும்.
3 இப்பொழுது service section யில் இருக்கும் மெம்பர் பாஸ்புக் பார்க்க வேண்டும்
4 இப்பொழுது அது இன்னொரு portal பகுதிக்கு செல்லும்.
5 இப்பொழுது உங்களின் UAN நம்பர் என்டர் செய்வதுடன் உங்கள் பாஸ்வர்ட் மற்றும் Captcha கோட் போடவும்
6 அதை சித்து முடித்ததற்கு பிறகு இப்பொழுது நீங்கள் PF அக்கவுண்ட் பாஸ்புக் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு: உங்கள் UAN சரிபார்க்கப்பட்டு, employee செயல்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தவும்
3 SMS மூலமும் இதனை தெரிந்து கொள்ளலாம் அது எப்படி வாங்க பாப்போம்
உங்களது UAN நம்பர் EPFO வில் ரெஜிஸ்டர் செய்து வைத்து இருந்தால் உங்களது ரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பரிலிருந்து EPFOHO UAN ENG’ என்று டைப் செய்து 7738299899 இந்த நம்பருக்கு அனுப்ப வேண்டும். இதனுடன் நீங்கள் உங்களின் PF அக்கவுண்ட் சமீபத்திய பரிமாற்றம் (TRANSACTION ) என்று அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த சேவை வெவேறு மொழிகளில் இருக்கிறது உதாரணத்துக்கு ஆஙகிலம், ஹிந்தி, கன்னடா,தமிழ், தெலுங்கு , மலையாளம், குஜராத்தி, மற்றும் மராத்தி எண்று 10 மொழிகள் இந்த சேவை அடங்கியுள்ளது
4 ஒரு மிஸ் கால் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம் அது எப்படி வாருங்கள் பார்ப்போம்
SMS சேவையை போலவே தான் இது உங்களின் ரெஜிஸ்டர் மொபில் நம்பர் மூலம் 011-22901406 என்ற நம்பருக்கு மிஸ் கால் கொடுப்பதன் மூலம் னைத்து தகவலையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்