இதில், உங்களை ஒருவர் ப்ளாக் செய்துவிட்டால் அந்நபருடன் மீண்டும் 'சாட்’ செய்வதற்கு ட்ரிக்ஸ் இருக்கிறது. அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம்:
வாட்ஸ்அப் பாதுகாப்பு அம்சம் பல வந்து விட்டது உதாரணத்துக்கு ஒருவரிடம் சண்டை போட்டு அந்த நபரை ப்லோக் செய்து விட்டால், எப்படி அவர்களிடம் பேசுவது உதாரணத்துக்கு அந்த நபர் காதலி, நண்பர் மற்றும் உறவினர் என இருக்கலாம் இது போல ஒருவர் ப்லோக் செய்தாலும் அவரிடம் நாம் எப்படி பேசுவது என்பதை பற்றி தான் இங்க கூற வந்துள்ளோம்
முதலில், நீங்கள் ப்ளாக் செய்யப்பட்டால், நீங்களாகவே அந்த ப்ளாக் லிஸ்டில் இருந்து வெளியேறவே முடியாது. ஆனால், உங்களை ப்ளாக் செய்தவரும் நீங்களும் ஒரு க்ரூப் சாட்-ல் இருந்தால் அதன் மூலமாக நீங்கள் பழையபடி உங்கள் உரையாடல்களைத் தொடரலாம்.
அல்லது, நீங்களாகவே ஒரு க்ரூப் ஆரம்பித்து உங்களை ப்ளாக் செய்தவரையும் ஒரு மூன்றாவது நண்பர் மூலம் சேர்த்து சாட் செய்யலாம். ஆனால், உங்களுடன் எந்த க்ரூப்-லும் இல்லாத ஒரு நண்பர் உங்களை ‘ப்ளாக்’ செய்தால் வேறு வழி ஏதும் இல்லை.
நீங்கள் காலத்துக்கும் ‘ப்ளாக்’ லிஸ்ட் தான். அதேபோல், உங்களை ப்ளாக் செய்த நண்பர் நீங்கள் இருக்கும் க்ரூப்களில் இருந்து வெளியேறிவிட்டாலும் நீங்கள் நிரந்தர ப்ளாக் லிஸ்ட் தான் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்
உதாரணத்துக்கு..
A – நீங்கள்
B – உங்களை பிளாக் செய்தவர்
C – உங்கள் இருவருக்குமான பொதுவான நண்பர்
A ஆகிய நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி C ஐ சேர்த்து கொள்ளுங்கள். C ஐ குரூப் அட்மின் ஆக்குங்கள். பின்னர் அவரிடம் Bயின் நம்பரை கொடுத்து குரூப்பில் சேர்த்து விட சொல்லுங்கள். சேர்த்ததும் C ஐ குரூப்பில் இருந்து விலகிட சொல்லுங்கள்.. இப்போது யாருமற்ற குரூப்பில் Aவும், Bயும் பேசிக்கொள்ளலாம்..