Facebook அறிமுக செய்த புதிய Link History அம்சம், இது எப்படி வேலை செய்யும் ?

Updated on 05-Jan-2024
HIGHLIGHTS

நீங்கள் Facebook பயன்படுத்துகிறர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்

உங்கள் ஹிஸ்டரி 30 நாட்களுக்கு Facebook யில் இருக்கும்.

ஃபேஸ்புக் மொபைல் ஆப்களுக்காக லிங்க் ஹிஸ்டரி என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

நீங்கள் Facebook பயன்படுத்துகிறர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும். பேஸ்புக்கில் உள்ள லிங்கை கிளிக் செய்து பலமுறை சில தகவல்களைப் படிக்கிறோம் ஆனால் மீண்டும் தேடியபோது அந்த லிங்க் கிடைக்காமல் போகும், தற்போது இந்த பிரச்சனைக்கு பேஸ்புக் தீர்வு கண்டுள்ளது. உங்கள் ஹிஸ்டரி 30 நாட்களுக்கு Facebook யில் இருக்கும்.

ஃபேஸ்புக் மொபைல் ஆப்களுக்காக லிங்க் ஹிஸ்டரி என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் நீங்கள் பார்வையிட்ட அனைத்து வெப்சைட் லிசடையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும். Facebook யின் இந்த புதிய அம்சம் iOS மற்றும் Android ஆகிய இரண்டிற்கும் வெளியிடப்பட்டுள்ளது.

Facebook ‘Link History’

Facebook யின் இந்த லிங்க் ஹிஸ்டரி டீஃபால்ட் வடிவில் ஆன் ஆக இருக்கும் நீங்கள் விரும்பினால், அதை அணைக்கவும். இந்த அம்சம் பயனுள்ளதாக இருந்தாலும் ப்ரைவசி கண்ணோட்டத்தில் இது நல்லதல்ல, ஏனெனில் நீங்கள் இதுவரை பார்வையிட்ட அனைத்து வெப்சைட்டின் பேக்கப் தயாராகும்

இதையும் படிங்க :Airtel 1 நம்பரில் ரீச்சார்ஜ் செய்தால் 3 நபருக்கு கிடைக்கும் Unlimited Calling,Data!

மெசஞ்சரில் உள்ள லிங்களுடன் லிங்க் ஹிஸ்டரி அம்சம் இயங்காது, அதாவது மெசஞ்சரில் யாரேனும் லிங்கை ஷேர் செய்தால் அதன் ஹிஸ்டரி உருவாக்கப்படாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல பயனர்கள் அதன் பாப்அப் நோட்டிபிகேசன் பெற்றுள்ளனர்.

Facebook ‘Link History’
  • டீஃபால்ட் வடிவில் லிங்க் ஹிஸ்டரி ஆன் ஆக இருக்கும், ஆனால் நீங்கள் செட்டிங்கில் சென்று இதை ஆஃப் செய்யலாம்.
  • ஆஃப் செய்வதற்க்கு ப்ரோபைலில் க்ளிக் செய்ய வேண்டும்
  • இப்பொழுது ஆப் Setting and Privacy யில் செல்லவும்
  • அங்கு உங்களுக்கு link history ஆப்சன் தெரியும்.
  • அதை க்ளிக் செய்து இதை ஆஃப் செய்யலாம்.

நீங்கள் லிங்க் ஹிஸ்டரியை டெலிட் செய்யலாம், ஆனால் அதை டெலிட் செய்த பிறகு, அது 90 நாட்களுக்கு சேமிக்கப்படும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :