அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது அந்த வகையில் தற்பொழுது BSNL வருடம் முழுதும் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை வழங்கி வருகிறது அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் அந்த வருடம் முழுதும் நிம்மதியா இருக்கலாம் அதாவது ஜனவரி 2025 யில் ரீச்சார்ஜ் செய்து அந்த வருடம் முழுதும் நிம்மதியா இருக்கலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் எத்தனை வருடாந்திர திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.
நாம் பேசும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,198. இதன் வேலிடிட்டி 365 நாட்கள். ஒரு நாளுக்கான செலவைக் கணக்கிட்டால், உங்களுக்கு தோராயமாக ரூ.3.50 செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 3.50 ரூபாய்க்கு அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
இதன் வேலிடிட்டி 365 நாட்கள். அதே நேரத்தில், பயனர்களுக்கு 3ஜிபி அதிவேக 3ஜி/4ஜி டேட்டாவை ஒரு வருடத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் வழங்குகிறது. இதுமட்டுமின்றி, மாதந்தோறும் 30 SMS அனுப்பும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது.
இது தவிர, ஒவ்வொரு மாதமும் 300 இலவச காலிங் நிமிடங்கள் போன்ற பலன்களும் இந்த திட்டத்தில் கிடைக்கும். கூடுதலாக, இந்த திட்டத்தில் இலவச தேசிய ரோமிங் உள்ளது, இது பயனர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்யும் போது இன்கம்மிங் கால்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது.
BSNL யின் ரூ.1,499 ரீசார்ஜ் திட்டம் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலுடன் வருகிறது. பேக் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் முழு வேலிடிட்டியாகும் காலத்திற்கு 24 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியாகும்.
BSNL யின் ரூ.1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் கிடைக்கிறது. கூடுதலாக, ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வசதியும் உள்ளது. லிமிட்டை அடைந்ததும், பயனர்கள் 80Kbps வேகத்தில் வெப்சைட்டில் பிரவுசிங் செய்யலாம். ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் பாடல் மாற்றம், லோக்துன் கன்டென்ட் மற்றும் ஈரோஸ் நவ் சந்தாவுடன் ஆண்டு முழுவதும் இலவச PRBT ஆகியவற்றை வழங்குகிறது.
நிறுவனத்தின் இந்த ரீசார்ஜ் திட்டம் 395 நாதிட்டம்.ட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பேக் வரம்பற்ற டேட்டாவுடன் உள்ளூர்/எஸ்டிடி கால்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. இந்த பேக் 30 நாட்களுக்கு இலவச PRBT மற்றும் இலவச ஈரோஸ் நவ் சேவைகள் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் ஆகியவற்றை வழங்குகிறது.
BSNL இன் புதிய திட்ட வவுச்சர் அன்லிமிடெட் வொயிஸ் கால்களுடன் வருகிறது மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. பேக் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது.
இதையும் படிங்க:Jio VS Airtel VS VI: ரூ.449 யில் வரும் ஒரே மாதுரி விலை தினமும் 3GB டேட்டா எது பெஸ்ட்?