BSNL VS Jio: ஒரே விலை ரேன்ஜ் கொண்ட திட்டத்தில் BSNL இந்த திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி

BSNL VS Jio: ஒரே விலை ரேன்ஜ் கொண்ட திட்டத்தில் BSNL இந்த திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி

BSNL(பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் பல குறைந்த வ்பிலை திட்டத்தை அறிமுகம் செய்து வருகிறது அதாவது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது, தனியார் டெலிகாம் நிறுவனமான Jio, Airtel மற்றும் Vodafone Idea அதன் திட்டத்தின் விலையில் அதிகரிப்பத்ர்க்கு பிறகு இதன் காரணமாக பயனர்கள் பிற விருப்பங்களைத் தேடத் தொடங்கினர். தற்போது, ​​BSNL குறைந்த கட்டண திட்டங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதன் நெட்வொர்க் கவரேஜையும் மேம்படுத்தவும் செயல்படுகிறது. பிஎஸ்என்எல்லின் குறைந்த விலை மற்றும் அதிக வேலிடிட்டியாகும் திட்டங்களைப் பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம். அந்த வகையில் BSNL 999ரூபாய் கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை jio 999ரூபாய் கொண்ட திட்டத்துடன் ஒப்பிட்டு எது அதிக நன்மை தருகிறது என்று பார்க்கலாம் வாங்க.

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனம் சமிபத்தில் இந்தியாவில் 50 ஆயிரம் புதிய 4G மொபைல் டவர் கொண்டு வந்துள்ளது. அதில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது செயல்பட்டு வருகின்றனர். வரும் மாதங்களில் மேலும் 50 ஆயிரம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாடு முழுவதும் தனது 4ஜி சேவையை தொடங்க தயாராகி வருவதாக தகவல் டெலிகாம் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிப்படுத்தியுள்ளார்.

BSNL யின் 999ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் பட்ஜெட் ரீசார்ஜ் திட்டத்தின் விலை 999ரூபாய்க்கு வருகிறது, இதன் வேலிடிட்டி 200 நாட்களுக்கு இருக்கிறது, இந்தத் திட்டம் நாட்டில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியை வழங்குகிறது, இது காலிங்க்கு இந்த போனில் தேவைப்படும் பயனர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் இலவச டேட்டா சேர்க்கப்படவில்லை.

jio யின் 999ரூபாய் கொண்ட திட்டம்

Jio யின் 999ரூபாய் கொண்ட திட்டத்தில் வேலிடிட்டி 98 நாட்களுக்கு வழங்குகிறது, ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 196 GB டேட்டா அதாவது இந்த திட்டத்தில் தினமும் 2 GB டேட்டா வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் JioTV,JioCinema மற்றும் JioCloud போன்ற பல வசதிகள் வழங்கப்படுகிறது. இதன் ஸ்பீட் லிமிட் குறைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது, இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது.

BSNL VS Jio இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் ?

BSNL மற்றும் jio யின் 999ரூபாய் கொண்ட திட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி விசயத்தில் பி.எஸ்.என்.எல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி படி 200 நாட்கள் வேலிடிட்டி ஆனால், ஜியோவில் வெறும் 98 நாட்களுக்கு தான் வழங்குகிறது ஆனால் பி.எஸ்.என்.எல் இந்த திட்டத்தில் டேட்டா வசதி ஏதும் சேர்க்கவில்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo