Jio மற்றும் airtel போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய டெலிகாம் ஆபரேட்டர்களும் சமீபத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர். இந்த நிறுவனங்களின் கட்டணத் திட்டங்கள் சராசரியாக 15 சதவீதம் உயர்ந்துள்ளன. இதன் கீழ் பல கஸ்டமர் அரசு நடத்தி வரும் BSNL மாறியுள்ளனர் மற்றும் இது குறைந்த விலையில் பல ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது
மேலும் இதன் காரணமாக தங்கள் கஸ்டமரை தக்க வைத்து கொள்ள jio மற்றும் airtel குறைந்த விலையில் பல திட்டடங்கள் கொண்டு வந்துள்ளது உதரணமாக அன்லிமிடெட் வொயிஸ் காலிங் இலவச SMS மற்றும் ஒரு ஆண்டு முழுவதும் அதிவேக டேட்டாவை வெறும் ரூ.3599க்கு வழங்கும் மேலும் இதே போன்ற திட்டம் airtel இருப்பதால் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
ஜியோவின் இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது மேலும் இந்த ரீச்சார்ஜ் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. டேட்டாவை பொறுத்தவரை 365 நாட்களுக்கும் தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் இலவசமாக அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது
தற்போது, ஜியோவின் 8வது ஆண்டு நிறைவையொட்டி, இந்த திட்டத்தில் ஒரு சிறப்பு சலுகையும் இயங்குகிறது, இதன் கீழ் கஸ்டமர்களுக்கு பின்வரும் நன்மைகள் இலவசமாக வழங்கப்படும்:
ஏர்டெல்லின் இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 SMS அனுபவிக்க முடியும். டேட்டாவைப் பொறுத்தவரை, இந்த திட்டம் 365 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் கஸ்டம்ர்களுக்குஎந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் வரம்பற்ற 5G இன்டர்நெட் அக்சஸ் வழங்கப்படுகிறது.
நன்மைகளைப் பார்த்த பிறகு, ஜியோ அதன் ரூ.3599 ரீசார்ஜ் திட்டத்தில் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. இரண்டு நிறுவனங்களின் திட்டங்களின் விலையும் வெளிடிட்டியும் ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் ஜியோ பயனர்கள் ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு நாளும் 500 எம்பி கூடுதல் டேட்டாவைப் பெறலாம். இது மட்டுமல்லாமல், ஜியோ திட்டத்தின் ஒரு பெரிய அம்சம் என்னவென்றால், தற்போதைய ஜியோ 8வது ஆண்டு விழா சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களும் வழங்கப்படுகின்றன