Jio VS Airtel:ஒரே மாதுரியன விலை குழப்பத்தில் மக்கள் எது சிறந்த நன்மை தருகிறது
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Jio மற்றும் Airtel ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுகொண்டு தினசரி ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது, தனியார் டெலிகாம் நிறுவங்களின் விலை உயர்வுக்கு பிறகு மக்கள் BSNL பக்கம் சாய ஆரம்பித்தார்கள் இதன் மூலம் தங்கள் கஸ்டமர்கள் இழந்து வருவதன் காரணமாக பல புதிய புது திட்டங்களை கொண்டுவந்தது அந்த வகையில் ஒரே மாதுரியான ரூ,3599 விலையில் Airtel மற்றும் jio கொண்டு வந்துள்ளது இந்த இரு திட்டத்தையும் ஒப்பிடு இதிலிருக்கும் வித்தியாசம் என்ன என்று பார்க்கலாம்.
ரூ.3,599 திட்டத்தில், நிறுவனம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , இலவச SMS மற்றும் அதிவேக டேட்டாவை வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ.3,599 ரீசார்ஜ் திட்டத்தை உங்களுக்காக இங்கே ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம், இந்த விலையில் நீங்கள் எந்த நிறுவனத்தின் திட்டத்தைப் பயன்படுத்தலாம் என்ற குழப்பத்திற்க்கான தீர்வு கிடைக்கும்.
Jio யின் ரூ,3599 திட்டம்
ஜியோவின் ரூ,3599 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5 GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது மேலும் அதன் ஸ்பீட் குறைந்த பிறகு @ 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இதை தவிர இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது
ஆனால் இதில் சிறப்பு என்ன்வேட்றல், தற்போது இந்த திட்டத்துடன் தீபாவளி தமாகா ஆபர் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் என்ன கூடுதலாகப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அதே விலையில் வரும் Airtel திட்டத்தின் விலையை பற்றி பார்க்கலாம்.
Airtel ரூ,3599 பிளான்
இந்த 3599ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இது பாரதி ஏர்டெலின் மிகவும் விலை உயர்ந்த திட்டத்தில் ஒன்றாகும், எப்பொழுதும் அவுட்கொயில் இருக்கும் மற்றும் அதிவேக நெட்வொர்க்கில் இணைந்திருக்க விரும்பும் அதிக மொபைல் டேட்டா நுகர்வோருக்கு இந்தத் திட்டம் ஏற்றது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் 365 நாட்கள் என்பதால், பயனர்கள் மொத்தம் 730ஜிபி டேட்டாவைப் பெறலாம்.
ஒரே மாதுரியான விலை மற்றும் நன்மை தரும் airtel மற்றும் jioயில் எது பெஸ்ட்?
இந்த இரு திட்டத்தையும் ஒப்பிடும்போது ஜியோவின் 3,599ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் அதிக நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது மற்றும் இதில் கஸ்டமர்களுக்கு தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் புதுசாக அதிகபட்சமான Diwali Dhamaka Offer நன்மை வழங்கப்படுகிறது.ஆனால் இதன் மறுபக்கம் airtel நன்மை பற்றி பேசினால், இதில் தினமும் 2GB டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும் மற்ற நன்மைகள் அப்படியே இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், அதிக விலை இருந்தபோதிலும், ஜியோ இந்த திட்டத்தில் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஜியோவின் திட்டத்தில் ஏர்டெல் திட்டத்தின் அதே விலையில் அதிக நன்மைகளைப் பெறலாம் மேலும் இதில் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் என்பது தெரிந்து இருக்கும் என நம்புகிறோம்.
இதையும் படிங்க:Airtel யின் சூப்பர் டூப்பர் திட்டம் ஒரு முறை ரீசார்ஜ் வருடம் முழுதும் நோ டென்ஷன்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile