Airtel VS Jio 90 நாட்கள் இருக்கும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்? எது அதிக நன்மை தருகிறது

Airtel VS Jio 90 நாட்கள் இருக்கும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்? எது அதிக நன்மை தருகிறது
HIGHLIGHTS

நீங்கள் மாதாந்திர ரீசார்ஜ் செய்வதில் சோர்வாக இருந்தால், குறைந்த விலையில் ஒரே நேரத்தில் நீண்ட ரீசார்ஜ் திட்டத்தை பெற விரும்பினால், இந்த செய்தி குறிப்பாக உங்களுக்கானது. ரிலையன்ஸ்  Airtel மற்றும் Jio இரண்டும் 90 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளன, ஆனால் அவற்றின் விலைகள் மற்றும் நன்மைகள் முற்றிலும் வேறுபட்டவை. அத்தகைய சூழ்நிலையில், குறைந்த விலையில் அதிக சலுகைகளை மற்றும் சிறந்த நன்மைகளை எது வழங்குகிறது என்று பார்க்கலாம்.

Jio 90 நாட்கள் கொண்ட திட்டம்

ஜியோவின் இந்த திட்டம் ரூ.749க்கு வருகிறது. 90 நாட்கள் வேலிடிட்டியில், 2ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் வழங்குகிறது இது தவிர, கூடுதல் பலன்களாக, வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆப்ஸின் இலவச சந்தாவையும் வழங்குகிறது

Airtel 90 கொண்ட திட்டம்.

இதன் மறுபுறம், ஏர்டெல்லின் 90 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.779 ஆகும். இந்த விலையில், நிறுவனம் உங்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்களை வழங்குகிறது, இது இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் இயங்கும். மேலும், இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இது தவிர, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் ஆகியவற்றையும் இலவசமாக அனுபவிக்க முடியும்.

Jio Vs Airtel யின் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் ?

ஜியோவின் இந்த திட்டம் ஏர்டெல்லை விட ரூ 30 குறைவாக இருக்கிறது `இதில் ஏர்டெல்லை விட பயனர்களுக்கு 500 எம்பி கூடுதல் இணைய டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், SMS விஷயத்தில், இரண்டும் சமமான பலன்களை வழங்குகின்றன. இது தவிர, இரு நிறுவனங்களும் தங்களுடைய தனித்துவமான நன்மைகளைக் கொண்ட கூடுதல் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகின்றன. இந்த வகையில் பார்த்தால், ஒட்டுமொத்த ஜியோவின் திட்டம் ஏர்டெல்லை விட விலை மற்றும் டேட்டா அடிப்படையில் சிறப்பாக உள்ளது.

இதையும் படிங்க:Whatsapp 71 லட்ச மக்களின் அக்கவுண்ட் லோக் செய்யப்பட்டது காரணம் என்ன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo