Jio, BSNL மற்றும் Vi யின் ஒரே மாதுரியான ரூ,666 திட்டத்தில் எது அதிக நன்மை தருகிறது

Updated on 16-Dec-2024

Jio, BSNL மற்றும் Vi ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்ட பல திட்டட்ன்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில், மேலும் ஜூலை மாதத்தில் Airtel, Jio மற்றும் Vi அதன் திட்டத்தின் விலையை உயர்த்திய பிறகு பல கஸ்டமர் BSNL பக்கம் சாய ஆரம்பித்தனர் மேலும் BSNL தனது திட்டத்தின் விலையை எப்பொழுதும் உயர்த்தாது உருதி கூறியுள்ளது

அதாவது Jio, BSNL மற்றும் Vi ஒரே மாதுரியான திட்டத்தை வைத்துள்ளனர் மேலும் இந்த மூன்று நிறுவங்களின் திட்டத்தை ஒப்பிட்டு எது சிறந்த நன்மையை தருகிறது என்று பார்க்கலாம் Jio, BSNL மற்றும் Vi 666ரூபாயில் திட்டத்தை கொண்டுள்ளது இந்த மூன்று திட்டத்தையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Jio ரூ,666 கொண்ட திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், 666ரூபாயில் வருகிறது இதன் வேலிடிட்டி 70 நாட்களுக்கு இருக்கிறது இந்த திட்டத்தின் மற்ற நன்மைகள் பற்றி பேசினால், இந்த ரீசார்ஜ் பேக்கில், தினசரி 1.5ஜிபி டேட்டா, அதாவது மொத்தம் 105ஜிபி டேட்டா கிடைக்கும். இதிலும், பயனர்கள் தினமும் 100 எஸ்.எம்.எஸ். இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் நன்மைகளுடன் வருகிறது. தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, ஸ்பீட் 64 kbps ஆக குறைகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் JioTV, Jio Cloud மற்றும் JioCinema போன்ற அக்சஸ் வழங்கப்படுகிறது.

Jio 666

VI ரூ,666 திட்டம்.

VI யின் அதன் போர்ட்போலியோ திட்டத்தை பற்றி பேசினால், 666ரூபாயில் வருகிறது, இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 SMS யின் நன்மை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 64 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் தினமும் 1.5GB டேட்டா உடன் ஆகமொத்தம் 96GB டேட்டா வழங்கப்படுகிறது தினசரி டேட்டா தீர்ந்த பிறகு 64 kbpsஆக குறைக்கப்படுகிறது.

VI 666 plan

Vi அதன் கஸ்டமர்களுக்கு Binge ஆல் நைட் மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பலன்களை வழங்குகிறது. முந்தையது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச இன்டர்நெட் வழங்குகிறது, அதாவது பயன்படுத்தப்படும் டேட்டா பயனரின் தினசரி ஒதுக்கீட்டில் இருந்து கழிக்கப்படாது. இரண்டாவதாக, வார இறுதியில் மீதமுள்ள டேட்டா அடுத்த நாட்களில் சேர்க்கப்படும். நிறுவனம் 2ஜிபி டேட்டா பெக்கபை வழங்குகிறது, அவசரகாலத்தில் பயனர் ViApp மூலம் ரேக்வஸ்ட் பேர்லாம.

BSNL ரூ,666 திட்டம்.

பிஎஸ்என்எல்லின் ரூ.666 திட்டமானது அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில், தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும், ஒதுக்கீடு முடிந்த பிறகு, ஸ்பீட் 40 கேபிபிஎஸ் ஆக குறைகிறது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய USP அதன் வேலிடிட்டி இந்த திட்டத்தின் பலன்கள் முழு 105 நாட்களுக்கு. இந்த திட்டத்தில் PRBT+ (இலவச காலர் ட்யூன்), ஆஸ்ட்ரோடெல்+ மற்றும் கேமன் சேவைகள் இலவசமாகக் கிடைக்கும்.

bsnl 666

Jio VS VI VS BSNL ரூ,666 திட்டத்தில் எது பெஸ்ட் ?

Jio, BSNL மற்றும் Vi இந்த மூன்று நிறுவனங்களும் ஒரே மாதுரியான ரூ,666 கொண்ட திட்டத்தை வைத்துள்ளது, இருப்பினும் இந்த திட்டங்களின் நன்மைகள் வேறுபாடுகள் இருக்கிறது முதலில் ஜியோவில் 70 நாட்கள் வேலிடிட்டி தினமும் 1.5 டேட்டா வழங்கப்படுகிறது, அதுவே VI யில் 64 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 1.5 டேட்டா வழங்குகிறது அதுவே BSNL திட்டத்தை பற்றி பேசினால் தினமும் இதில் 2GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 105 நாட்களுக்கு இருக்கிறது எனவே அதிக வேலிடிட்டி விரும்புவோர்களுக்கு BSNL யின் இந்த திட்டம் சிறந்ததாக இருக்கலாம். இதை தவிர இந்த மூன்று நிறுவனங்களும் அன்லிமிடெட் காலிங் வழங்குகிறது மற்றும் Vi அதன் கஸ்டமர்களுக்கு Binge ஆல் நைட் மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பலன்களை வழங்குகிறது

இதையும் படிங்க:Jio VS Airtel VS VI: ரூ.449 யில் வரும் ஒரே மாதுரி விலை தினமும் 3GB டேட்டா எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :