Jio VS Airtel VS VI: ரூ.449 யில் வரும் ஒரே மாதுரி விலை தினமும் 3GB டேட்டா எது பெஸ்ட்?
தனியார் டெலிகாம் நிறுவனங்களான Jio, Airtel மற்றும் Vodafone Idea இந்த மூன்று நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு பல திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது , நீங்கள் அதிக டேட்டா பெற விரும்பினால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் , உங்களின் மற்ற மாதாந்திர டெலிகாம் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது,
நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. தினசரி 3ஜிபி டேட்டாவுடன் இந்த மூன்று நிறுவனங்களும் 449ரூபாயில் வருகிறது இந்த திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Jio ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இது மொத்தம் 84ஜிபி. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வொயிஸ் காலிங் விஷயத்தில், இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் வசதியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், தினமும் 100 இலவச SMS கிடைக்கும். அதிவேக டேட்டா லிமிட் அடைந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறைகிறது. அதன்படி, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், முறையான பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் வழங்குகிறது. மற்ற நன்மைகளில் ஜியோ ஆப்களுக்க்ன இலவச அக்சஸ் அடங்கும். இருப்பினும், ஜியோ சினிமா பிரீமியம் ஜியோ சினிமா சந்தாவில் ஆகியவை இதில் அடங்கும்.
Airtel ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்லின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 28 நாட்களுக்கு இயங்கும். வொயிஸ் காலிங் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி காலிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மற்ற நன்மைகளில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்தின் நன்மையும் அடங்கும், இது 21 OTT ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. இது தவிர, Wynk இலவச Hello Tunes மற்றும் 3 மாதங்களுக்கு Apollo 24/7 Circle அக்சஸ் கொண்டுள்ளது.
Vodafone Idea யின் ரூ, 449 ப்ரீபெய்ட் திட்டம்.
வோடபோன் ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற இரவு டேட்டாவை வழங்குகிறது.
அதேசமயம் வார இறுதி டேட்டா பரிமாற்றத்தின் கீழ், திங்கள் முதல் வெள்ளி வரை மீதமுள்ள தரவு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தப்படலாம். இந்த திட்டத்தில், எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி பேக்கப் டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா ஒதுக்கீட்டை முடித்த பிறகு, டேட்டா ஸ்பீட் 64Kbps ஆக குறைகிறது. மற்ற நன்மைகள் பற்றி பேசினால், ZEE5, Sony LIV, Fancode, Atrangi, Klikk, Chaupal, Manorama MAX, NammaFlix, PlayFlix, Distro TV, Shemaroo ME, Hungama, YuppTV, NexGTv, Pocket Films போன்ற 15 OTT ஆப்கள் அடங்கியுள்ளது.
இதையும் படிங்க: BSNL வெறும் ரூ,400க்குள் அதிக வேலிடிட்டி உடன் வரும் சூப்பர் திட்டங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile