முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நாட்டின் 8 மெட்ரோ நகரங்களில் ஜியோ ஏர் ஃபைபரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபருக்கு போட்டியாக ஜியோ ஏர் ஃபைபர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகள், அவை பிளக் அண்ட்-ப்ளே சாதனங்களின் உதவியுடன் இணைப்பை வழங்குகின்றன.ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு இல்லாத இடங்களில் இந்த இன்டர்நெட் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். அதாவது கிராமப்புற இந்தியாவில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதன் பொருள் பயனர்கள் வீட்டிலேயே இன்டர்நெட்டை அணுக பாரம்பரிய ரவுட்டர்கள் மற்றும் ஃபைபர் கேபிள்களை நம்ப வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஏர்டெல் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் தொழில்நுட்பத்தின் உதவியுடன், செட்டப் இல்லாமல் இன்டர்நெட்டை அனுபவிக்க முடியும்.
ஜியோ ஏர்ஃபைபர் ஆரம்பத்தில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய எட்டு நகரங்களில் கிடைக்கிறது. அதேசமயம் ஏர்டெல் 5ஜி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சேவை தற்போது கிடைக்கிறது. வரும் மாதங்களில் இதை மேலும் பல நகரங்களில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Airtel Xtraeam திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,799 ஆக வைக்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் ஸ்பீட் பற்றி பஐகையில் இதில் 100Mbps ஆக இருக்கும், மற்றும் இதில் உள்ள ஒரே திட்டம் 6 மாதங்களுக்கு 4794 ரூபாய், இருப்பினும் நீங்கள் இதை மாதம் 799 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, தள்ளுபடிக்குப் பிறகு, இந்த திட்டத்தின் விலை ரூ.4435 ஆக குறைகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கான செக்யுரிட்டி தொகையையும் நீங்கள் செலுத்த வேண்டும், இது தோராயமாக ரூ.2500 ஆகும். அதாவது இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் ரூ.7733 செலவழிக்க வேண்டும்.
அதே சமயம் ஜியோவின் Airfiber பற்றி பேசினால், இது ஜியோ ஏர் ஃபைபர் மற்றும் ஏர் ஃபைபர் மேக்ஸ் என்ற இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர் ஃபைபர் திட்டத்தில், வாடிக்கையாளர் இரண்டு வகையான ஸ்பீட் திட்டங்களைப் பெறுவார், அவை 30 Mbps மற்றும் 100 Mbps ஸ்பீடில் வரக்கூடிய இரண்டு திட்டங்களிலும், வாடிக்கையாளர் 550 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்கள் மற்றும் 14 என்டர்டைன்மென்ட் ஆப்களை பெறுவார். ஜியோவின் AirFiber Max திட்டத்தில், 300 Mbps, 500 Mbps மற்றும் 1000 Mbps வரை ஸ்பீட் கிடைக்கிறது. 550 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்கள், 14 என்டர்டைன்மென்ட் ஆப்கள் மற்றும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் மற்றும் ஜியோ சினிமா போன்ற பிரீமியம் பயன்பாடுகளும் அனைத்து திட்டங்களுடனும் கிடைக்கும்.
Airtel Xstream AirFiber உங்கள் நகரங்கள் இருக்கும் Airtel ஸ்டோர் மூலம் இதை வாங்கலாம், இதை நீங்களே தனியாக stream AirFiber app மூலம் இந்த டிவைசை இன்ஸ்டால் செய்ய முடியும்
அதேவே இதன் மறுபக்கம் Jio AirFiber பயனர்கள் 60008-60008 நம்பரில் மிஸ்ட் கால் செய்வதன் மூலம் இதை நீங்கள் இதை whatsApp மூலம் புக் செய்ய முடியும், இதை தவிர www.jio.com அல்லது அருகில் இருக்கும் jio ஸ்டோர் மூலம் இந்த சாதனத்தை வாங்க முடியும். இதை தவிர வாடிக்கையாளர்கள் Jio AirFiber சேவை ரெஜிஸ்டர் செய்பதன் மூலம் நிறுவனம் உங்களிடம் தொடர்பு கொண்டு உங்களுக்கு வழங்குகும்.