BSNL வெறும் ரூ,400க்குள் அதிக வேலிடிட்டி உடன் வரும் சூப்பர் திட்டங்கள்
BSNL ஒன்றுக்கு பிறகு ஒன்று பல புதிய ரீச்சார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் குறைந்த விலை மட்டுமல்லாமல் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதிக பணம் கொடுத்து தரமுடியாததை BSNL குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி மற்றும் பல நன்மை வழங்குகிறது, மேலும் BSNL 4G சேவை நாடு முழுதும் பல இடங்களில் கொண்டு வந்துள்ளது அதுபோல தற்பொழுது ரூ,400க்குள் வரும் மூன்று சூப்பர் திட்டங்கள் இருக்கிறது சரி வாங்க இந்த லிஸ்ட்டில் குறைந்த விலையில் வரும் மூன்று திட்டங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் ரூ,319 கொண்ட திட்டம்.
BSNL யின் ரூ,319 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதன் வேலிடிட்டி 65 நாட்களுக்கு இருக்கிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் (Local/STD) எந்த ஒரு நெட்வொர்க்கிலும் பயன்படுத்தலாம் மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 300 SMSமற்றும் 10 GB டேட்டா வழங்கப்படுகிறது
BSNL 345ரூபாய் கொண்ட திட்டம்.
BSNL யின் இந்த திட்டத்தில் முழுமையாக 60 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, டேட்டாவைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் பயனர் தினமும் 1 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, பயனருக்கு 40kbps இணைய வேகம் வழங்கப்படும். BSNL யின் இந்த திட்டத்தில், அன்லிமிடெட் காலிங் உடன் , ஒரு நாளைக்கு 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது
BSNL ரூ.347 கொண்ட திட்டம்.
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ.347க்கு, வருகிறது, இந்த திட்டத்தில் 54 நாட்கள் வேலிடிட்டி ஆகும். இதை தவிர இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது . தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, பயனருக்கு 40kbps இன்டர்நெட் ஸ்பீட் வழங்கப்படும். BSNL யின் இந்த திட்டத்தில், அன்லிமிடெட் காலின்குடன், ஒரு நாளைக்கு 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர, ஜிங் மியூசிக் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்களுக்கான இலவச அக்சஸ் WOW என்டர்டைன்மென்ட் ஆகியவை வழங்குகிறது இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
BSNL யின் ரூ,397 கொண்ட திட்டம்.
BSNL யின் 397ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் அதிகபட்சமாக 150 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் தினசரி லிமிட் முடிந்த பிறகு 40kbps வரை இன்டர்நெட் ஸ்பீட் குறைக்கப்படுகிறது.இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் தினமும் 100 SMS வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தில் வரும் அனைத்து இலவச நன்மையும் 30 நாட்களுக்கு மட்டும் தான் இருக்கும் இருப்பினும் இதன் வேலிடிட்டி 150 நாட்களுக்கு இருக்கும். அதாவது நீங்கள் உங்கள் சிம்மை ஒரு 4 மாதங்களுக்கு ரீசார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெற விரும்பினால் இது சிறந்ததாக இருக்கும்.
இதையும் படிங்க:BSNL VS Jio: ரூ,2 அதிகம் இருந்தும் 1 மாதம் கூட முழுசா வேலிடிட்டி தரமுடியாத jio, அதிக வேலிடிட்டி உடன் கெத்து காட்டும் BSNL
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile