BSNL மற்றும் Vodafone-Idea வின் இந்த ஒரு வருட வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

BSNL மற்றும் Vodafone-Idea வின் இந்த ஒரு வருட வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?
HIGHLIGHTS

BSNL மற்றும் Vodafone-Idea இரண்டும் போட்டித் திட்டங்களை வழங்குகின்றன

BSNL இந்த திட்டத்தில் சுமார் 600ஜிபி டேட்டா நன்மையைப் வழங்குகிறது .

இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கினாலும், அவற்றின் அம்சங்கள் மற்றும் நன்மைகளில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன

அதிக நாட்கள்  ப்ரீபெய்ட் திட்டங்களைப் பொறுத்தவரை, BSNL மற்றும் Vodafone-Idea இரண்டும் போட்டித் திட்டங்களை வழங்குகின்றன. இந்த இரண்டு டெலிகாம் ஆபரேட்டர்களின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டங்களின் அம்சங்கள் மற்றும் பலன்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இரு நிறுவனங்களும் சந்தாதாரர்களை அதிகரிக்க சிரமங்களை எதிர்கொள்கின்றன. Vi யின் ரூ 1999 திட்டம் BSNL  உடன் ஒப்பிடும்போது எது பெஸ்ட் என்று பாப்போம்.

BSNL ரூ 1999 ப்ரீபெய்டு திட்டம்.

 BSNL   இந்த திட்டத்தில் சுமார் 600ஜிபி டேட்டா நன்மையைப் வழங்குகிறது . இது தவிர, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொய்ஸ் கால் உள்ளது, இதில் பயனர்கள் இந்தியாவில் லோக்கல் மற்றும் STD கால்களை செய்யலாம். இதனுடன், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. கூடுதல் நன்மைகளில் PRBT (தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன்), 30 நாட்களுக்கு அன்லிமிடெட் பாடல் மாற்ற விருப்பம், Lokdhun அக்சஸ் , EROS NOW என்டர்டைன்மெண்ட் சேவை ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள். ஆகும்..

Vodafone Idea ரூ 1999  ப்ரீபெய்டு திட்டம்.

Vodafone-Idea வின் இந்தகிய திட்டத்தின் வேலிடிட்டி 250  நாட்களுக்கு கிடைக்கிறது, மேலும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு  தினமும் 1.5GBடேட்டா   மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இது தவிர, சந்தாதாரர்கள் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வொய்ஸ் காலை பெறலாம்.

இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கினாலும், அவற்றின் அம்சங்கள் மற்றும் நன்மைகளில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. BSNL திட்டம் வோடபோன் ஐடியாவின் தினசரி டேட்டா லிமிட்டை விட அதிகமாக 600ஜிபி டேட்டாவுடன் வருகிறது. அதிக இன்டர்நெட் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாகும். அதே நேரத்தில், BSNL வேலிடிட்டி வகையில் மிகவும் சிறப்பாக உள்ளது.

BSNL யின் இந்த திட்டங்களில் பயனர்களுக்கு அதிக என்டர்டைன்மெண்ட் விருப்பங்களை வழங்கும்  இதை தவிர இதில் கூடுதல் நன்மைகளும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். அதே நேரத்தில், இந்த கூடுதல் நன்மைகள் வோடபோன் ஐடியாவின் திட்டத்தில் இல்லை. எதுவும் இல்லை இந்த ஒப்பீட்டின் மூலம் உங்களுக்கே  தெரிந்து இருக்கும் இதில் எது சிறந்தது என்று.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo