BSNL யின் இந்த திட்டத்தில் 395 நாட்கள் வேலிடிட்டி, ஆனால் jio வெறும் 365 நாட்கள் மட்டுமே

Updated on 23-Oct-2024

BSNL நாடு முழுவதும் பல இடங்களில் அதன் 4G சேவையை அறிமுகம் செய்துள்ளது மற்றும் இது இப்பொழுது 5G கொண்டுவர தயார் செய்து வருகிறது தனியார் டெலிகாம் நிறுவனத்தின் அதிகரித்து வரும் மொபைல் கட்டணத் திட்டங்களின் விளைவாக, BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) யின் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களால் பல பயனர்கள் இந்த அரசு டெலிகாம் ஆபரேட்டருக்கு மாறினர். BSNL நாட்டில் மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டட்ன்களை கொண்டு வந்துள்ளது, மேலும் இப்பொழுது இது தனது சேவையில் நல்ல குவாலிட்டி வழங்க அயராமல் பாடுபட்டு வருகிறது

BSNL தனியார் டெலிகாம நிறுவனமான் Airtel, Jio மற்றும் Vi போன்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாக பல திட்டத்தை கொண்டு வருகிறது இருப்பினும் BSNL இந்த திட்டத்தில் 395 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ஆனால் jio வெறும் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்குகிறது சரி வாங்க இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL யின் 395 நாட்கள் வேலிடிட்டி திட்டம்

பிஎஸ்என்எல்லின் 395 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.2399க்கு வருகிறது, இதன் சராசரி தினசரி செலவு ரூ.6.57 ஆகும். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் 2ஜிபி அதிவேக தினசரி டேட்டாவை வழங்குகிறது. தினசரி லிமிட்டை அடைந்த பிறகும், பயனர்கள் 40 Kbps வேகத்தில் இன்டர்நெட் தொடர்ந்து அணுகலாம்.

BSNL 395 Days Prepaid Plan

இதை தவிர இதில் தினமும் 100 SMS வழங்குகிறது இதனுடன் இதில் வேல்யு ஏடாட் சேவை Hardy Games, Arena Games, Zing Music, Wow Entertainment, மற்றும் BSNL Tunes சப்ச்க்ரிப்சன் போன்ற சேவை வழங்கப்படுகிறது.

Jio யின் 365 நாள் கொண்ட வேலிடிட்டி.

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தின் விலை 3599ரூபாயில் வருகிறது மற்றும் இதில் தினமும் 2.5GB யின் ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இதில் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மற்றும் இந்த திட்டமானது அனைத்து நெட்வார்க்கிலும் இயங்கும்.

jio 3599

இந்த திட்டத்தில் எது பெஸ்ட் ?

Jio யின் இந்த திட்டத்துடன் BSNL யின் திட்டத்தை ஒப்பிடும்போது ஜியோவின் இந்த திட்டமானது bsnl யின் இந்த திட்டத்தை விடை விலை உயர்வாக இருக்கும் இருப்பினும் BSNL 4G சேவை அனைவருக்கும் இன்னும் கிடைக்கவில்லை மற்றும் இப்பொழுது 5G டெஸ்டிங் நிலையில் தான் இருக்கிறது மேலும் jio அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது.

இதையும் படிங்க BSNL யின் லோகோ மாற்றத்துடன் 7 புதிய சேவை அறிவிப்பு இனி குஷி படுத்த வந்தாச்சு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :