Airtel VS Jio வின் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா

Updated on 09-Jun-2023
HIGHLIGHTS

90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம்

இதில் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும்

Airtel மற்றும் Jio வின் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட்

ஒரு மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், மக்கள் நீண்ட வேலிடிட்டியாகும் ரீசார்ஜ் திட்டங்களை விரும்பினால். அதாவது ஒரு முறை ரீச்சார்ஜ் செய்துவிட்டு ஒரு சில மாதங்களுக்கு நிம்மதியாக இருக்க விரும்பிலான் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம் இதில் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும் , இதில்  Airtel மற்றும் Jio வின் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்.

Airtel 779,ரூபாய் பிளான்

முதலில் ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டம் 779 ரூபாய்க்கு வருகிறது, இந்த திட்டத்தில் மொத்தம் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது தவிர, ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங் கிடைக்கிறது, இதில் லோக்கல் மற்றும் STD கால்களும் அடங்கும்.

ஏர்டெலின் இந்த 779 ரூபாய் கொண்ட ரீச்சார்ஜ்  திட்டத்தில் இனமும் 1.5GB ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது, தினசரி  டேட்டா லிமிட் முடிந்த பிறகு இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps  ஆக குறைக்கப்படுகிறது, மேலும் ஏர்டெலின் இந்த திட்டத்தில் தினமும் 100SMS  வழங்கப்படுகிறது,  ஏர்டெலின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட்  5G  டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் Wynk ம்யூசிக் சபஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது.

Jio 749 ரூபாய் பிளான்.

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் Jio வின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இதன் விலை 749 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் ஏர்டெல்லை விட டேட்டாவும் அதிகம். ஜியோவின் ரூ.749 திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கு வழங்குகிறது.

இதை தவிர இந்த திட்டத்தில்  அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டம் அனைத்து நெட்வர்க்கிலும்  அன்லிமிடெட்  காலிங் நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இதில் தினமும் 100SMS  வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜியோவின் அனைத்து ஆப் வசதியும் வழங்கப்படுகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :