நீங்க நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட ரீச்சார்ஜ் திட்டத்தை தேடுகிரிர்களா அன்லிமிடெட் காலிங் டேட்டா மற்றும் SMS போன்ற சிறந்த பலன்களை எது வழங்குகிறது? நீங்கள் Jio அல்லது Airtel வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். ஏனெனில் இன்று நாங்கள் உங்களுக்காக இந்த இரண்டு நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம், இது உங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
jio மற்றும் Airtel இரண்டும் ஒரே மாதுரியான 666ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்குகிறது இருப்பினும், அவை இரண்டும் நன்மைகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டவை. இங்கே நாம் இந்த இரு திட்டத்தில் இருக்கும், நன்மைகள் என்ன என்ன இதன் மூலம் நீங்கள் வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு உங்களுக்கான சரியான திட்டம் எது என்று பார்க்கலாம்..
ஜியோவின் இந்த திட்டம் 84 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் இதன் கீழ் நீங்கள் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 100 SMS வழங்கப்படுகிறது கூடுதலாக, முழு வேலிடிட்டியாகும் போது அன்லிமிடெட் காளிங்கை நீங்கள் அனுபவிக்க முடியும். கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் பயனர்களுக்கு JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச அக்சஸ் வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், தகுதியான சந்தாதாரர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
மறுபுறம், ஏர்டெல்லின் ரூ.666 திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. ஆனால் இந்த பலன்கள் 77 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது தவிர, சந்தாக்களைப் பொருத்தவரை, இந்த பேக்கில் நீங்கள் Apollo 24|7 Circle, Free HelloTunes மற்றும் Wynk Music ஆகியவற்றைப் வழங்குகிறது
இதையும் படிங்க: Aadhaar ஆன்லைன் பேமன்ட் புதிய விதி விரைவில் அதனால் கிடைக்கும் நன்மை என்ன ?
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் இடையே வேலிடிட்டியாகும் வேறுபாடு உள்ளது. ஜியோ பயனர்களுக்கு 84 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் போது, ஏர்டெல் 77 நாட்களுக்கு மட்டுமே நன்மைகளை வழங்குகிறது, இது 7 நாட்கள் குறைவாக உள்ளது. இதன் மூலம் திட்டத்தில் கிடைக்கும் டேட்டா அளவும் குறைகிறது. இருப்பினும், மற்ற அனைத்து நன்மைகளும் அப்படியே இருக்கும். இப்போது நீங்கள் எந்த திட்டத்தை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களுடையது.