இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Jio மற்றும் Airtel போட்டி போட்டுகொண்டு குறைந்த விலையில் பல திட்டங்களை கொண்டு வருகின்றன, இருவரும் தங்கள் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோக்களில் பல அற்புதமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கினாலும், தற்பொழுது அவர்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம் அதில் , விலை சமமாக இருந்தாலும், ஏர்டெல் ஜியோவை தோற்கடித்துள்ளது.
இந்த திட்டத்தில் அனைத்து நன்மையும் ஒரே மாதுரி தான் இருக்கிறது ஆனால் ஒரு சில விசயங்களில் airtel மிக சிறப்பாக இருக்கிறது அவர்களின் OTT நன்மைகளில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இப்போது அந்த வித்தியாசம் என்ன, என்பதை தெளிவாக பார்க்கலாம்.
ஜியோவின் இந்த திட்டம் பயனர்களுக்கு அன்லிமிட்டட் வொயிஸ் காலிங் அன்லிமிடெட் இன்டர்நெட் தேட்ட அனைத்து நெட்வொர்க்குகளிலும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறலாம். முதன்முறையாக ஜியோவின் போஸ்ட்பெய்டு கனெக்சன் பெறுபவர்களும் ரூ.750 செக்யூரிட்டி டெபாசிட் செய்ய வேண்டும். இது தவிர, பேமிலி எட் ஆன் செயல்படுத்தும் போது ரூ.99/சிம் எக்டிவேசன் டெப்பாசிட் வசூலிக்கப்படும்.
இப்பொழுது ஏர்டெளின் 599 ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இது ஒரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும் இதில், வாடிக்கையாளர்களுக்கு ரோல்ஓவர் உட்பட 75 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டம் உங்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அன்லிமிடெட் கால்கள் அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் விங்க் மியூசிக்கிற்கான இலவச சந்தாவுடன் இலவச ஆட்-ஆன் கனேக்சனையும் வழங்குகிறது
இந்த இரு திட்டங்களையும் ஒப்பிடும்பிஒது ஏர்டெல் யின் இந்த திட்டத்தில் மிக பெரிய OTT நன்மைகளை வழங்குகிறது, இந்த நன்மை ஜியோவில் இல்லை இதேபோல், ஆட்-ஆன் கனெக்சன் விஷயத்தில், நீங்கள் ஏர்டெல்லுடன் இலவச பலனைப் பெறுவீர்கள், அதேசமயம் ஜியோ திட்டத்தில், ஆட்-ஆனுக்கு தனியாக ரூ.99 செலவழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, ஏர்டெல்லின் ரீசார்ஜ் ஜியோவை விட அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: ஜனவரி 2024 இந்த வாரம் உங்கள் குடுபத்துடன் OTT யில் இந்த படங்களை பார்த்து மகிழலாம்