Airtel யில் ரூ 299 VS ரூ, 2999 வருடாந்திர மற்றும் மாதாந்திர திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?
Airtel 2999 ரூபாய் கொண்ட வருடாந்திர திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மையையும் கிடைக்கிறது
Airtel ரூ,2999 மற்றும் ரூ,299 க்கும் மாதாந்திர, வருடாந்திர திட்டத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்
டெலிகாம் நிறுவனங்கள் பல புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது, தற்பொழுது 2999 ரூபாய் கொண்ட வருடாந்திர திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மையையும் கிடைக்கிறது, இந்த திட்டத்தின் ரூ,2999 மற்றும் ரூ,299 க்கும் மாதாந்திர, வருடாந்திர திட்டத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம் இதில் அதிக நன்மை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ, 2999 திட்டம்.
இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது 2999 ரூபாயில் வருகிறது இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, நாம் இதை 12 மாதங்களுக்கு கணக்கு போட்டு பார்த்தால் ஏறத்தாள மாதம் 299 ரூபாய்க்கு வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் காலிங்க்கு அன்லிமிடெட் நன்மை வழங்குகிறது, இதை தவிர தினமும் 100SMS நன்மை வழங்கப்படுகிறது
ஏர்டெல் ரூ 299 திட்டம்.
ரூ 299 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங், தினமும் 2GB டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 29 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தை 12 முறை ரீசார்ஜ் செய்தால், உங்கள் மொத்த செலவு ரூ.3,588 ஆக இருக்கும். மொத்த வேலிடிட்டி 336 நாட்களாக இருக்கும். அதாவது 12 முறை ரீசார்ஜ் செய்த பிறகும், ஒரு வருட வேலிடிட்டி கிடைக்காது.
இந்த இரண்டு போனிலும் எது பெஸ்ட்?
2999 ரூபாய் கொண்ட வருடாந்திர திட்டம் மற்றும் 299 ரூபாயின் மாதாந்திர திட்டத்தை பற்றி பேசினால் இரண்டிலுமே அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100SMS வழங்கப்படுகிறது, ஆனால் 2999 ரூபாய் வருடாந்திர திட்டத்தில் அதிக பணத்தை மிட்ச் படுத்தலாம் இதனுடன் கூடுதலாக 29 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது இந்த திட்டத்தை ஒப்பிட்டு பார்த்ததில் இதில் எது சிறந்தது என்று உங்களுக்கே தெரிந்தே இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile