Xiaomi 15 vs Vivo X200 Pro Mini: இந்த ப்ரீமியம் போனில் எது பெஸ்ட்?

Updated on 06-Nov-2024

Xiaomi 15 அக்டோபர் இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனில் Snapdragon 8 Elite SoC யில் வேலை செய்யும் matrum idhil 1.5K 8T LTPO AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த போனில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் Leica-டியூன்ட் பின் கேமரா செட்டப் இருக்கிறது இதில் Summilux லென்ஸ் உடன் 50-மேகபிக்சல் கொண்ட மூன்று கேமரா இருக்கிறது.

மேலும் இதே போன்ற விலையில் சீனாவில் மற்றொரு போனை மார்கெட்டில் அக்டோபரில் அறிமுகம் செய்தது, அதன் பெயர் Vivo X200 Pro Mini ஆகும். Vivo இந்த மாடலில் பல சுவாரஸ்யமான விவரக்குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டின் அம்சங்களின் இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளைப் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க

Xiaomi 15 vs Vivo X200 Pro Mini: டிசைன்

Xiaomi 15 மற்றும் Vivo X200 Pro Mini இரண்டும் ப்ரீமியம் டிசைன் உடன் வருகிறது. Xiaomi 15 ஸ்டேண்டர்ட் கிளாஸ் பேக் மற்றும் 20கலர் ஆப்சன் உடன் கஸ்டமைசபில் எடிசன் உடன் அறிமுகம் செய்தது, இதை தவிர இது லிமிடெட் எடிசன் சேர்க்கப்பட்டுள்ளது, சிங்கிள் டைமென்ட் பதிக்கப்பட்ட சிறப்பு க்ரோகடைல்-கிரேன் லெதருடன் வருகிறது.

அதுவே Vivo X200 Pro Mini யில் நான்கு கலர் விருப்பங்களில் வருகிறது இந்த ஆப்சனின் கீழ் 8.2 mm திக்னஸ் உடன் வருகிறது Vivo போனை விட xiaomi போன் சற்று மெல்லியதாக இருக்கிறது,அதாவது அது 8.5mm திக்னஸ் இருக்கிறது. இதன் இடை ஒப்பிடும்போது Xiaomi போன் வேரியன்ட் 189 லிருந்து 192 கிராமாக இருக்கும், அதுவே vivo போனில் 187 கிராம் இருக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டார் ரேஸிஸ்டண்டிர்க்கு விவோ போனில் மிக சிறப்பாக இருக்கிறது IP68/IP69 ரேட்டிங் இருக்கும் என கூறப்படுகிறது, அதுவே xiaomi யில் IP68 ரேட்டிங் வழங்கப்படுகிறது.

Xiaomi 15 vs Vivo X200 Pro Mini:டிஸ்ப்ளே

Xiaomi 15 யில் 6.36 இன்ச் (1200 x 2670 பிக்சல்) LTPO OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன்3200 நிட்ஸ் மிக சிறந்த பீக் ப்ரைட்னாஸ் லெவல் Dolby Vision மற்றும் HDR10+ சப்போர்ட் வழங்கப்படுகிறது, அதுவே Vivo X200 Pro Mini யில் 6.31 இன்ச் (1216 x 2640 பிக்சல்)LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இந்த பேனலில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் வழங்குகிறது மற்றும் இதில் 4500 nits யின் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.

Xiaomi 15 vs Vivo X200 Pro Mini: பர்போமான்ஸ்

Xiaomi 15யில் Snapdragon 8 Elite (3 nm) சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இதில் ஒகட்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது. சிப்செட் Adreno 830 GPU, 16GB RAM மற்றும் 1TB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Vivo X200 Pro Mini ஆனது மீடியாடெக் டிமான்சிட்டி 9400 (3 nm) சிப்செட் 3nm செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இது ஆக்டா-கோர் ப்ரோசெசர் ஆகும். இது மேம்படுத்தப்பட்ட Immortalis-G925 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபோனில் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.

இந்த இரண்டு போனிலும் Android 15 யில் பெஸ்ட் UI இயங்குகிறது மேலும் இதில் Xiaomi 15 HyperOS 2 மற்றும் Vivo X200 Pro Mini OriginOS 5 உடன் வருகிறது.

Xiaomi 15 vs Vivo X200 Pro Mini: கேமரா

Xiaomi 15 யில் Leica-டியூன்ட் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இந்த சிஸ்டமில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் (OIS) மற்றும் f/1.6 அப்ரட்ஜர் கொண்டுள்ளது இதனுடன் இதில் 1/1.31-இன்ச் , 23mm வைட் 50மேகபிக்சல் PDAF சென்சார் வழங்கப்படுகிறது, இதில் மற்றொரு கேமரா f/2.0 அப்ரட்ஜர் லென்ஸ் உடன் 50-மெகாபிக்சல் 60mm டெலிபோட்டோ லென்ஸ் இருக்கிறது.இது OIS உடன் 3x ஆப்டிகல் ஜூமை ஆதரிக்கிறது. மூன்றாவது 50 மெகாபிக்சல் 115 டிகிரி அல்ட்ராவைட் சென்சார். அதே நேரத்தில், முன் கேமரா f/2.0 துளை பொருத்தப்பட்ட 50 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகும். பின்புற அமைப்பானது 8K வரை வீடியோக்களை பதிவு செய்ய முடியும், HDR10+, 10-பிட் டால்பி விஷன் HDR, 10-பிட் LOG மூலம் 4K இல் வீடியோக்களை எடுக்க முடியும். அதே நேரத்தில், முன் கேமராவும் 4K பதிவை சப்போர்ட் செய்கிறது.

அதுவே Vivo X200 Pro Mini யில் இதிலும் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதில் 50-மெகாபிக்சல் Zeiss-ட்யூன் பின் கேமரா வழங்கப்படுகிறது. முதலாவது OIS, f/1.6 அப்ரட்ஜருடன் கூடிய 23mm (வைட் ) முக்கிய சென்சார், இரண்டாவது 3x ஆப்டிகல் ஜூம், f/2.6 அப்ரட்ஜர் கொண்ட 70mm பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் மூன்றாவது f/2.0 அப்ரட்ஜர், 119 டிகிரி அல்ட்ராவைடு 15mm லென்ஸ்கள். முன்பக்கத்தில் f/2.0 அப்ரட்ஜருடன் கூடிய 32-மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. அதன் பின்புற மற்றும் முன் கேமராக்கள் இரண்டும் அதிகபட்சமாக 4K யில் வீடியோவை ரெக்கார்ட் செய்ய முடியும்.

Xiaomi 15 vs Vivo X200 Pro Mini:பேட்டரி

Xiaomi மற்றும் Vivo போன்கள் இரண்டும் 90W வயர்டு சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளன. Xiaomi 15 ஆனது 50W வயர்லெஸ் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் Vivo X200 Pro Mini ஆனது 30W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸிற்கான சப்போர்டுடன் 5,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது (பவர் வெளியிடப்படவில்லை).

Xiaomi 15 vs Vivo X200 Pro Mini கனெக்டிவிட்டி மற்றும் மற்ற அம்சம்.

இரண்டு போனிலும் இன் -டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்களுடன் வருகின்றன. Xiaomi போனில் அல்ட்ராசோனிக் அடங்கும், அதே நேரத்தில் Vivo போன்களில் ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் சென்சார்கள் உள்ளன. இரண்டும் ப்ளூடூத் பதிப்பு 5.4 டூயல்-பேண்ட் Wi-Fi உடன் உள்ளது. இரண்டிலும் ஐஆர் சென்சார்கள் மற்றும் NFC சப்போர்ட் ஆகியவை அடங்கும். இருப்பினும், Xiaomi போனில் 24-பிட்/192kHz Hi-Res & Hi-Res வயர்லெஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது.

Xiaomi 15 vs Vivo X200 Pro Mini: விலை

Xiaomi 15 யின் 12GB/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் CNY 4,499 (கிட்டத்தட்ட 52,000 ரூபாயாகும்) 2ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் CNY 4,799 (தோராயமாக ரூ. 56,000), 16ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் CNY 4,999 (தோராயமாக ரூ. 58,000) மற்றும் 16 ஜிபி/1T-வரிசை ஸ்டோரேஜ் வேரியண்டில் வெளியிடப்படும். CNY 5,499 (தோராயமாக ரூ. 65,000) அறிமுகம் செய்யப்பட்டது.

Vivo X200 Pro Mini யின் 12GB/256GB வேரியண்டின் CNY 4,600 (கிட்டத்தட்ட 56,000 ரூபாயாகும்), 16GB/512GB வேரியன்ட் யின் CNY 5,299 (ஏறத்தாள 62,600 ரூபாய்) மற்றும் 16GB/1TB கான்பிக்ரேசன் யின் CNY 5,799 (ஏறத்தாள 68,500 ரூபாயாகும்) அறிமுக செய்யப்பட்டது.

இதையும் படிங்க:Realme GT 7 Pro VS iQOO 13:அதிரடியான பர்போமான்ஸ் கொண்ட இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :