Xiaomi அதன் 13T series உலகளவில் அறிமுகம் செய்தது, இதில் Xiaomi 13T மற்றும் 13T Pro ஆகியவை அடங்கியுள்ளது, இந்தத் சீரிஸின் முந்தைய ஜெனரேசன் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. முந்தைய போன்களைப் போலவே, Xiaomi 13T சீரிஸும் லைக்கா கேமராக்களுடன் வருகிறது, இது போட்டோ எடுப்பதில் மிகச் சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது இந்த ஆண்டு, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சீரிச்ன் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களில் என்ன புதியது மற்றும் Xiaomi 13T Pro மற்றும் Xiaomi 12T Pro ஆகியவை ஆகும் இந்த இரு போன்களில் இருக்கும் வித்தியசம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
Xiaomi 13T Pro டிஸ்ப்ளேவை அப்டேட் செய்துள்ளது இந்த ஃபோனில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 12-பிட் நிறங்கள் HDR10+,டால்பி விஷன் மற்றும் 144Hz வரை அப்டேட் வீதத்தை வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளே 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸையும் ஆதரிக்கிறது. அதேசமயம் Xiaomi 12T Pro ஆனது 120Hz அப்டேட் வீதக் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 900 nits ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
Xiaomi 13T Pro போனில் மீடியாடேக் டிமான்சிட்டி 9200 ப்ரோசெசர் கொண்டுள்ளது இது 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் MIUI 14 ஸ்கின் மீது வேலை செய்கிறது. இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒப்பிடுகையில், Xiaomi 12T Pro ஆனது Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 12GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டது.
போட்டோ எடுப்பதற்கு, Xiaomi 13T Pro ஆனது 50 மெகாபிக்சல் OIS ப்ரைம் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு நிறுவனம் 200 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸை அகற்றியுள்ளது. இது தவிர, இம்முறை போனின் முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரும் சேர்க்கப்பட்டுள்ளது.
விலை பற்றி பேசுகையில், Xiaomi 13T Pro ஆனது உலக சந்தையில் 799 யூரோவின் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முந்தைய ஜெனரேசன் போனன Xiaomi 12T Pro ஆனது உலகளவில் €749 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது Xiaomi சில மேம்படுத்தல்களுடன் 13T ப்ரோவை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், அதன் விலையையும் அதிகரித்தது.