Vivo Y200 VS Moto Edge Neo 40 இந்த இரு பட்ஜெட் போனில் எது பெஸ்ட்?

Updated on 25-Oct-2023
HIGHLIGHTS

Vivo தனது Vivo Y200 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Y சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் ஆகும்,

Moto Edge 40 Neo, மற்றும் Vivo Y200 இரு ஸ்மார்ட்போன்களை ஒப்பிட்டு பார்க்கலாம் இந்த இரண்டு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

விவோ தனது Vivo Y200 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒய் சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் ஆகும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து ஏறத்தாள அதே பட்ஜெட் விலையில் வரும் Moto Edge 40 Neo, மற்றும் விவோ Y200 இரு ஸ்மார்ட்போன்களை ஒப்பிட்டு பார்க்கலாம் இந்த இரண்டு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Vivo Y200 VS Moto Edge 40 Neo: டிஸ்ப்ளே

விவோ Y200 ஸ்மார்ட்போனில் FHD+ ரேசளுசனுடன் வரும் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இது தவிர, இந்த போனில் 120Hz ரெப்ராஸ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மோட்டோ எட்ஜ் 40 நியோ பற்றி பேசினால், இந்த ஃபோனில் 6.55-இன்ச் பொலிட் டிஸ்ப்ளே உள்ளது, இது FHD+ தெளிவுத்திறனைத் தவிர, 144Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது.

Vivo Y200 VS Moto Edge 40 Neo: பர்போமான்ஸ்

விவோ Y200 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 1 ப்ரோசெசர் உள்ளது, இது தவிர இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. Funtouch OS 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13 யில் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டோ எட்ஜ் 40 நியோ பற்றி பேசுகையில், இந்த போனில் MediaTek Dimensity 7030 ப்ரோசெசர் உள்ளது. போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 யில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விவோ Y200 VS மோட்டோ Edge 40 Neo: கேமரா

விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் Dual Camera setup இருக்கிறது, இந்த போனில் OIS உடன் 64MP கேமரா உள்ளது, இது தவிர போனில் 2MP டெப்த் சென்சார் உள்ளது. இந்த போனின் முன்பக்கத்தில் 16MP முன்பக்க கேமராவும் உள்ளது. இது தவிர, ஆரா லைட் போனில் உள்ளது, இதில் 38 level கலர் அட்ஜெஸ்மென்ட் கிடைக்கிறது.

மோட்டோ எட்ஜ் 40 நியோ பற்றி பேசுகையில், இந்த ஃபோன் இரட்டை கேமரா செட்டிங் கொண்டுள்ளது. ஃபோனில் 50MP OIS ப்ரைம் கேமரா மற்றும் 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.

இதையும் படிங்க: BSNL யின் இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 2GB டேட்டா

விவோ Y200 VS மோட்டோ Edge 40 Neo: பேட்டரி

விவோ Y200 ஸ்மார்ட்போனில் 4800mAh பேட்டரி உள்ளது, இதில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இதில் 68வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

விவோ Y200 VS மோட்டோ Edge 40 Neo: விலை மற்றும் விற்பனை தகவல்.

விவோ Y200 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.21999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து வாங்கலாம்.

இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 40 நியோ விலை சுமார் ரூ.22999.ஆகும்.

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின்  பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :