Vivo X90 Pro vs Samsung Galaxy S23 Ultra vs Xiaomi 13 Pro இந்த 3 போன்ல எது பெஸ்ட்?

Vivo X90 Pro vs Samsung Galaxy S23 Ultra vs Xiaomi 13 Pro இந்த 3 போன்ல எது பெஸ்ட்?
HIGHLIGHTS

Vivo X90 இந்தியாவில் ஏப்ரல் 26 அறிமுகமாகியது.

Samsung Galaxy S23 Ultra மற்றும் Xiaomi 13 Pro உடன் ஒப்பிட்டு பார்க்கலாம்

இந்த 3 போன்களில் என்ன வித்தியாசம் என்று ப்பார்க்கலாம்.

Vivo X90 இந்தியாவில் ஏப்ரல் 26 அறிமுகமாகியது.இங்கே இதை ஆண்ட்ராய்டு ப்ளாக்ஷிப் போனான Samsung Galaxy S23 Ultra மற்றும் Xiaomi 13 Pro உடன் ஒப்பிட்டு பார்க்கலாம் இதில் எது மிக சிறந்த அம்சங்களை வழங்குகிறது  இந்த 3 போன்களில் என்ன வித்தியாசம் என்று ப்பார்க்கலாம்.

Vivo X90 Pro vs Xiaomi 13 Pro vs Samsung Galaxy S23 Ultra  கம்பேரிசன்.

1 சம்சங் கேலக்சி S23 அல்ட்ராவில் பிரகாசமான டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இது 1750 நீட்ஸ் இருக்கிறது இதில் கொரில்லா க்ளாஸ் Victus 2 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது , அதுவே Xiaomi 13 Pro வில் வெறும் கொரில்லா க்ளாஸ் Victusகொடுக்கப்பட்டுள்ளது, இந்த மூன்று போன்களிலும் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட்  ஸ்கெனர்  கொடுக்கப்பட்டுள்ளது  ஆனால் சாம்சங் மட்டுமே அல்ட்ராசோனிக் சொலுஷன் உள்ளது, இது Vivo மற்றும் Xiaomi போன்களில் உள்ள ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் ரீடரை விட பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

சாம்சங் ஃபோன் அதன் USP என அழைக்கப்படும் ஸ்டைலஸ் இன்புட் கொண்டுள்ளது.

 2. Samsung Galaxy S23 Ultra மற்றும் Xiaomi 13 Pro யின் இந்த இரண்டு போனிலும் குவால்கம் ஸ்னாப்ட்ரகன் 8 Gen 2 SoC யில் வேலை செய்கிறது அதுவே Vivo X90 Pro போன் 9200 SoC. உடன் வருகிறது. இந்த எல்லா ஃபோன்களின் 256ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டோரேஜ் வேரியண்ட் UFS 4.0 அடிப்படையிலானது.

இதில் சாப்டவெர் பற்றி பேசினால் மூன்று போன்களும்  ஆண்ட்ராய்டு 13 மட்டுமே என்றாலும், மேலே உள்ள ஸ்கின் அடிப்படையில் அனுபவம் வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, Samsung One UI 5.1ஐ வழங்குகிறது, Vivo Funtouch 13ஐ வழங்குகிறது மற்றும் Xiaomi MIUI 14 ஸ்கின் வழங்குகிறது.

3 சாம்சங்கின் இந்த போனின் , 200MP ப்ரைம் கேமரா காரணமாக தனித்து நிற்கிறது. இதனுடன் 10MP (10x பெரிஸ்கோப் ஜூம்), 10MP (3x) ஜூம் லென்ஸ் மற்றும் 12MP (120-டிகிரி) அல்ட்ராவைட் ஸ்னாப்பர் உள்ளது.

 Vivo X90 Pro மற்றும் Xiaomi 13 Pro  50.3MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.

Vivo X90 Pro ஆனது 50.3 (CIPA-சான்றளிக்கப்பட்ட லெவல் 4 நிலையான OIS உடன்) +50+12MP டிரிப்லெட் மற்றும் Xiaomi 13 Pro ஆனது 50.3+50+50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

Samsung Galaxy S23 Ultra முன் கேமரா 12MP சென்சார் வழங்கப்படுகிறது. அதுவே Vivo X90 Pro மற்றும் Xiaomi 13 Pro  இரண்டு போனிலும்  32MP  செல்பி கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது.

S23 அல்ட்ராவின் பின்பக்க கேமராவிலிருந்து 8K 24/30 fps வேகத்தில் நீங்கள் போட்டோ எடுக்கலாம் , அதே நேரத்தில் முன் கேமராவில் இருந்து 4K 60 fps வேகத்தில் போட்டோ எடுக்கலாம். Vivo மற்றும் Xiaomi பின்பக்க கேமராவிலிருந்து 8K 24 fps இல் பதிவு செய்ய உங்களை அனுமதிக்கின்றன. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, Vivo X90 Pro யின் வெளியீடு 1080p 60 fps யில் அதிகபட்சமாக இருக்கும், Xiaomi 13 Pro 1080p 30 fps வரை ரெக்கார்ட் செய்யலாம்..

4 Samsung Galaxy S23 Ultra மற்றும் Xiaomi 13 Pro இரண்டு போனிலும்  WiFi 6E உடன் பொருத்தப்பட்டுள்ளன, Vivo X90 Pro ஆனது WiFi 6 ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது. சாம்சங் மற்றும் விவோ போன்களில் USB-C 3.2 உள்ளது, அதேசமயம் Xiaomi ஃபோனில் USB-C v2.0 உள்ளது.

5 சாம்சங்கின் இந்த போன் 5000mAh பேட்டரியுடன் வருகிறது Vivo X90 Pro வில்  4870mAh பேட்டரி மற்றும்  Xiaomi 13 Pro போனில் 4820mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பாஸ்ட் சார்ஜிங்க்கு Xiaomi மற்றும் Vivo  இரு போனிலும் 120W வாயர்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது, ஆனால் சாம்சங் 25W சார்ஜிங் வாயர்ட் போர்ட்  உடன் வருகிறது இது 15W  வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்குகிறது.

இப்போது, ​​​​இது மூன்று போனிலும் ஸ்பெக்-பை-ஸ்பெக் ஒப்பீடு மட்டுமே. இருப்பினும், Digit.in இல், மூன்று ஃபோன்களிலும் எங்களிடம் கூடுதல் கவரேஜ் உள்ளது, அதை நீங்கள் ஒரு விரிவான புரிதலுக்காக படிக்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo