Vivo X100 VS Xiaomi 14: இந்த இரண்டு போனுக்கும் இருக்கும் போட்டியில் எது பெஸ்ட்

Updated on 15-Nov-2023

Vivo இறுதியாக அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Vivo X100 சீரிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபோன் சீரிஸின் கீழ் Vivo X100 மற்றும் Vivo X100 Pro ஸ்மார்ட்போன்கள் உள்ளன. சமீபத்திய ப்ளக்ஷிப் ப்ரோசெசரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆகும்.

சமீபத்தில் Xiaomi 14 சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் சீனாவில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசரில் அறிமுகப்படுத்தப்பட்டது, இருப்பினும் Vivo X100 சீரிஸ் MediaTek யின் சமீபத்திய ப்ரோசெச்சர் அதாவது Dimensity 9300 யில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கே இன்று நான் Xiaomi 14 ஐ Vivo X100 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடப் போகிறேன், எந்த ஃபோன் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். இவை இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த இரண்டு போன்களில் எந்த வருட ஃபோன் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

Vivo X100 Design

Vivo X100 VS Xiaomi 14: டிஸ்ப்ளே

Vivo X100 ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளது, மேலும் இது 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இது மட்டுமின்றி, ஃபோன் 3000 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது..

இது தவிர, Xiaomi 14 ஸ்மார்ட்போன் பற்றி பேசினால், இந்த ஃபோனில் 6.36 இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த காட்சி சுமார் 68 பில்லியன் நிறங்கள் சப்போர்ட் செய்கிறது இந்த போனின் டிஸ்ப்ளேவில் 120Hz ரெப்ராஸ் ரேட் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி இதில் டால்பி விஷனும் உள்ளது. இந்த டிஸ்ப்ளேவுடன் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸும் கிடைக்கிறது.

Vivo X100 VS Xiaomi 14: பர்போமான்ஸ்

Vivo X100 ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 9300 செயலி கிடைக்கிறது. இந்த ஃபோனில் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி சேமிப்பு உள்ளது. OriginOS 4 ஐ அடிப்படையாகக் கொண்ட Android 14 இல் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர, நாம் Xiaomi 14 பற்றி பேசினால், அது சமீபத்திய ப்ரோசெசர் அதாவது Snapdragon 8 Gen 3 ப்ரோசெசறை கொண்டுள்ளது. இந்த போனில் 16ஜிபி ரேம் வரை 1TB ஸ் டோரேஜ் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Jio AirFiber நாட்டில் 115 நகரங்கள் வரை சென்றுள்ளது

Vivo X100 VS Xiaomi 14: கேமரா

Vivo X Series அதன் கேமராவிற்கு பெயர் பெற்றது. இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா உள்ளது, இது தவிர போனில் 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. போனில் 50MP அல்ட்ராவைட் சென்சார் உள்ளது.

Xiaomi 14 பற்றி பேசுகையில், இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ராவைடு சென்சார் உள்ளது. இரண்டு போன்களிலும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.

Xiaomi 14

Vivo X100 VS Xiaomi 14:பேட்டரி

Vivo X100 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இருப்பினும், Xiaomi 14 பற்றி பேசுகையில், இந்த ஃபோன் 4610mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போனில், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இது தவிர, இந்த போனில் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கும் கிடைக்கிறது.

Vivo X100 VS Xiaomi 14: விலை தகவல்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தற்போது சீன சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரண்டு போன்களின் ஆரம்ப விலை சுமார் CNY 3999 ஆகும், அதாவது இந்தியாவில் இந்த போன்களின் விலை சுமார் ரூ.45,500?இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :