Vivo V40 VS Oppo Reno 12 Pro: ஆல் இன் ஆல் பெஸ்ட் யார்

Updated on 03-Sep-2024

சிறந்த டிசைனுடன் அற்புதமான அம்சங்களைக் கொண்ட ஃபோனைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், இந்த வகையில் 2 ஃபோன்கள் பொருந்தும். Vivo V40 மற்றும் Oppo Reno 12 Pro ஸ்மார்ட்போன்கள் இந்த வகையில் சிறந்த வகுப்பு போன்களாகும். 40000 ரூபாய்க்குள் நல்ல வசதிகளுடன் கூடிய இந்த போன்களை வாங்கலாம். இந்த பட்ஜெட்டில் எந்த போனை வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.

Vivo V40 VS Oppo Reno 12 Pro: டிசைன் மற்றும் டிஸ்ப்ளே

Vivo V40 மற்றும் Oppo Reno 12 Pro லுக் மற்றும் டிசைன் பற்றி பேசினால், Vivo V40 ஸ்மார்ட்போனில் கிளாஸ் பின்புறம் உள்ளது, இது பளிங்கு போன்ற டிசைனில் வருகிறது. இது தவிர, மறுபுறம், ஒப்போ ரெனோ 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல்-டோன் வடிவமைப்பைப் பெறுவீர்கள். Vivo V40 ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது தவிர, நீங்கள் Oppo போனில் IP65 ரேட்டிங்கை வழங்குகிறது இது தொலைபேசியை தூசி மற்றும் தண்ணீரை எதிர்க்கும். Vivo V40 ஸ்மார்ட்போன் உங்களுக்கு அதிக நீடித்ததாக தோன்றலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், Vivo V40 ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஹை ப்ரைட்னஸ் 4500 நிட்கள். இது தவிர, Oppo Reno 12 Pro ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் AMOLED கர்வ்ட் டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் உள்ளது. இதன் ஹை ப்ரைட்னாஸ் 1200 நிட்கள் .வழங்கப்படுகிறது

ViVO-V40-Series

Vivo V40 VS Oppo Reno 12 Pro: கேமரா அம்சம்

Vivo V40 யின் கேமராவை பற்றி பேசினால், இதில் டுயல் கேமரா செட்டப் ZEISS கேமரா லென்ஸ் வழங்கப்படுகிறது இந்த போன் இந்த போனில் 50MP OIS கேமரா அமைப்பு உள்ளது, 50MP அல்ட்ராவைடு லென்ஸும் போனில் கிடைக்கிறது. இது தவிர இந்த கேமரா ஆட்டோஃபோகஸுடன் வருகிறது. இது தவிர, இந்த போனில் எடிட்டிங் செய்ய பல AI அம்சங்களையும் பெறலாம்

அதுவே Oppo Reno 12 Pro போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இந்த போனில் 50MP Sony LYT 600 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, OIS ஆதரவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 50எம்பி போர்ட்ரெய்ட் கேமராவும் ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. இது Samsung S5KJN5 சென்சார், இது 2x ஆப்டிகல் ஜூம் கொண்டுள்ளது. 8எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் போனில் கிடைக்கிறது.

Vivo V40 VS Oppo Reno 12 Pro

Vivo V40 VS Oppo Reno 12 Pro: பர்போமான்ஸ்

இந்த இரு போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால், Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இந்த போனில் 12GB ரேம் மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதை தவிரOppo Reno 12 Pro பற்றி பேசுகையில், MediaTek Dimensity 7300 எனர்ஜி செயலி இந்த போனில் உள்ளது. இந்த செயலி ரெனோ சீரிஸுக்காக மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.

Vivo-V40-Series-Launch

Vivo V40 VS Oppo Reno 12 Pro: பேட்டரி

இந்த இரு போனின் பேட்டரி பற்றி பேசினால், Vivo V40 யில் 5500mAh பேட்டரி வழங்கப்படுகிறது இது தவிர, Oppo Reno 12 Pro ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இரண்டு போன்களிலும் இந்த பேட்டரி 80W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங்குடன் பொருத்தப்பட்டுள்ளது.

#Oppo-Reno-12-Pro-5.jpg

Vivo V40 VS Oppo Reno 12 Pro: விலை ஒப்பிடு

இதன் விலை பற்றி பேசும்போது Vivo V40 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையானது போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ.36,999 ஆகும். இருப்பினும், மறுபுறம், Oppo Reno 12 Pro ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுடன் ரூ.34,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போனின் ஆரம்ப விலை.

இதையும் படிங்க :iQOO Z9s 5G vs Moto G85 5G: இதன் ஒட்டுமொத்த அம்சங்களில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :