Vivo V40 Pro vs Xiaomi 14 CIVI இந்த இரு போனில் ஆல் இன் ஆல் எது பெஸ்ட்

Updated on 09-Aug-2024
HIGHLIGHTS

Vivo அதன் புதிய போனை சமிபத்தில் அறிமுகம் செய்தது

இதில் வெண்ணிலா V40 மற்றும் V40 Pro இந்த இரு போன்கள் V40 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது

Vivo V40 Pro with the Xiaomi 14 CIVI இந்த இரு போனில் எது பெஸ்ட்

Vivo அதன் புதிய போனை சமிபத்தில் அறிமுகம் செய்தது, இதில் வெண்ணிலா V40 மற்றும் V40 Pro இந்த இரு போன்கள் V40 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனின் கீழ் Vivo V40 Pro with the Xiaomi 14 CIVI இந்த இரு போனில் எது கேமரா, டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் ஓவர் ஆல் அம்சங்களில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம் வாங்க

Vivo V40 Pro vs Xiaomi 14 CIVI எது பெஸ்ட்

டிஸ்ப்ளே :- முதலில் இதன் டிஸ்ப்லேவிலிருந்து ஆரம்பித்தால், Vivo V40 Pro ஆனது 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது மற்றும் 4500 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. அதேசமயம், Xiaomi 14 CIVI ஆனது 6.55-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் ஆதரிக்கிறது, ஆனால் 3000 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது

ப்ரோசெசர் : Vivo V40 Pro ஆனது MediaTek Dimensity 9200+ ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch 14 OS யில் இயங்குகிறது. மறுபுறம், Xiaomi 14 CIVI ஆனது Snapdragon 8s Gen 3 ப்ரோசெசருடன் நிரம்பியுள்ளது, மேலும் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS மூலம் இயங்குகிறது..

கேமரா: கேமரா பற்றி பேசினால், Vivo V40 Pro ஆனது Zeiss டிரிபிள் கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இது 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்கு, இது 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.

அதுவே இதன் மறுபக்கம் Xiaomi CIVI,யில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ். இதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

பேட்டரி:- கட்சியாக இதன் பேட்டரி பற்றி பேசினால் Vivo V40 Pro ஆனது 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இருப்பினும், Xiaomi 14 CIVI ஆனது 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 67-வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

இந்த இரு போன்களில் எது பெஸ்ட் என்பதை பார்த்து எங்களுக்கு சொல்லுங்க

Vivo V40 Pro vs Xiaomi 14 CIVI விலை மற்றும் விற்பனை

விவோ வி40 ப்ரோவை ரூ.49,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 13 முதல் நீங்கள் அதை Flipkart இலிருந்து வாங்கலாம். இப்போது Xiaomi 14 CIVI அமேசானில் ரூ.42,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

இதையும் படிங்க Vivo X100 Pro VS Honor Magic 6 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :