Vivo V40 VS Vivo V40e: இந்த இரு போனில் என்ன வித்தியாசம் மற்றும் இதில் எது பெஸ்ட்?

Updated on 30-Sep-2024

Vivo சீரிஸ் கீழ் இரண்டு புதிய Vivo V40 மற்றும் Vivo V40e போனை அறிமுகம் செய்யப்பட்டது, இந்த இரு போனையும் பட்ஜெட் செக்மண்டில் கொண்டு வரப்பட்டது 34,999 ரூபாய் மற்றும் 28,999ரூபாய் பட்ஜெட்டில் இருக்கிறது இந்த இரு போனுக்கு கிட்டத்தட்ட 6 ஆயிரம் விலை வித்தியாசம் இருக்கிறது ஓவர் ஆல் டிஸ்ப்ளே,கேமரா, பர்போமான்ஸ் மற்றும் பேட்டரி Vivo V40 VS Vivo V40e யின் இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Vivo V40 VS Vivo V40e : விலை

Vivo V40 5G போன் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படை மாடல் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை ரூ.34,999. இதேபோல், போனின் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 36,999 மற்றும் மிகப்பெரிய 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.41,999 ஆகும். இந்த போனை லோட்டஸ் பர்பிள், கங்கை நீலம் மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் வாங்கலாம்.

Vivo V40E 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் வெளியிடப்பட்டுள்ளது, அதை இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வாங்கலாம். இதன் 128 ஜிபி விலை ரூ.28,999 மற்றும் 256 ஜிபி விலை ரூ.30,999. புதிய Vivo போனை Mint Green மற்றும் Royal Bronze கலர்களில் வாங்கலாம்.

Vivo V40 VS Vivo V40e: டிஸ்ப்ளே

Vivo V40 5G ஃபோன் 2800 × 1260 பிக்சல் ரெசளுசன் கொண்ட 6.78-இன்ச் 1.5K பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது AMOLED பேனலில் உருவாக்கப்பட்ட 3D கர்வ்ட் ஸ்க்ரீன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 4500nits ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது.

Vivo-V40-.jpg

Vivo V40e ஸ்மார்ட்போன் 2392 × 1080 பிக்சல்கள் ரெசளுசன் கொண்ட 6.77 இன்ச் FullHD+ டிஸ்ப்ளேவை சப்போர்ட் செய்கிறது. இது 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே ஆகும், இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 1300nits ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது.

Vivo V40e:

Vivo V40 VS Vivo V40e: கேமரா

Vivo V40 யில் போட்டோக்ரபிக்கு மிக சிறந்த கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இதில் ZEISS லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது இது பின் மற்றும் முன் கேமராக்களில் உள்ளது. இந்த போன் 50 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவை F/2.0 அபெர்ச்சர் மூலம் செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ கால் செய்வதற்கும் சப்போர்ட் செய்கிறது . இரட்டை பின்புற கேமரா அமைப்பு F/1.88 அபெர்ச்சர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா சென்சார் மற்றும் F/2.0 அபெர்ச்சர் கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ரா-ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது.

Vivo-V40-VS-Vivo-V40e-camera.jpg

Vivo V40e கேமராவை பற்றி பேசுகையில் ஃபோனின் இரட்டை பின்புற கேமரா அமைப்பு F/1.79 அபெர்ச்சர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் Sony IMX882 சென்சார் கொண்டது, இது F/2.2 அபெர்ச்சர் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸுடன் இணைந்து செயல்படுகிறது. செல்பிக்கு முன் பக்கத்தில் F/2.0 அபெர்ச்சரில் வேலை செய்யும் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கிடைக்கிறது.

Vivo V40 VS Vivo V40e:ப்ரோசெசர்

Vivo V40 மற்றும் Vivo V40e ஆகியவை Funtouch OS 14 உடன் இணைந்து செயல்படும் Android 14 யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Vivo V40 யில் Mediatek Dimensity 7300 ப்ரோசெசரில் மற்றும் V40E Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

Vivo V40 VS Vivo V40e: ரேம் ஸ்டோரேஜ்

ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், Vivo V40 ஆனது 12 ஜிபி ரேம் மெமரி கொண்ட மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் Vivo 40E ஆனது 8 ஜிபி ரேம் கொண்ட இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Vivo V40 12GB நீட்டிக்கப்பட்ட RAM ஐ ஆதரிக்கிறது மற்றும் Vivo V40e 8GB நீட்டிக்கப்பட்ட ரேமை ஆதரிக்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, Vivo V40 இல் ஒரே நேரத்தில் 40 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் பின்னணியில் செயலில் இருக்கும். அதேசமயம் V40e 27 ஆப் உள்ள பேக்ரவுண்ட் ஆப்களை கையாள முடியும்.

Vivo V40 VS Vivo V40e: பேட்டரி

Vivo V40 மற்றும் Vivo V40e இந்த இரண்டு போனிலும் 5,500Mah பேட்டரி சப்போர்ட் வழங்கப்படுகிறது. பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய, 80W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது. ஒரே மாதிரியான பேட்டரி மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பம் இருந்தாலும், இரண்டு போன்களிலும் வித்தியாசமாக செயல்படுகின்றன.

Vivo-V40-VS-Vivo-V40e-.j

Vivo V40 VS Vivo V40e இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Vivo V40 யின் டிஸ்ப்ளே ரேசளுசன் மிக சிறப்பக இருக்கிறது ஏன் என்றால் Vivo V40e ப்ரைட்னஸ் சிறப்பக இருக்கிறது. கேமராவை பொறுத்தவரை Vivo V40 யின் கேமரா V40E விட சிறந்தது. லென்ஸில் அபெர்ச்சர் அதிக பவர் உள்ளது, இது நல்ல போட்டோ கொடுக்க முடியும். இதேபோல், V40 யில் வியுவ் அதிகமாக உள்ளது. இதை தவிர பேட்டரி V40 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது Vivo V40e சிறந்த பேக்கப் இங்கு வழங்குகிறது. அதன் PCMark பேட்டரி ஸ்கோர் ஒப்பீட்டளவில் நன்றாக உள்ளது. மறுபுறம், ஃபோன் பேட்டரி 20 சதவீதத்திலிருந்து முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், V40 பாஸ்டாக சார்ஜ் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Motorola Edge 50 VS Realme P2 Pro: ஓவரால் இதில்  எது பக்கா மாஸ்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :