ஸ்மார்ட்போன் நிறுவனமான Vivo V29 Pro ஸ்மார்ட்போன, இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போனில் Dimensity 8200 ப்ரோசெசர் மற்றும் 12 GB ரேம் சப்போர்ட் உள்ளது. ரெனோ 10 ப்ரோவும் இந்த போனின் அதே விலையில் வருகிறது. இந்த போனில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி ப்ரோசெசர் உள்ளது. இரண்டு போன்களிலும் ரூ.40 ஆயிரம் பட்ஜெட்டில் வரக்கூடிய சிறந்த கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு போனிலும் அப்படி என்ன வித்யாசம் இருக்கிறது என்று பார்க்கலாம்.
Vivo V29 Pro 1.5K ரேசளுசன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்ப்ளே பேனல் 3D கர்வ்ட் AMOLED ஆகும், அதன் இதன் அப்டேட் விகிதம் 120Hz ஆகும். டிஸ்ப்லேவின் ஹை ப்ரைட்னாஸ் 1,300 நிட்ஸ் ஆகும்.
Oppo Reno 10 Pro: யில் 6.7 இன்ச் முழு HD+ OLED 3D கர்வ்ட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 950 nits யின் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
Vivo V29 pro யில் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் கூடிய டிமான்சிட்டி 8200 ப்ரோசெசர் கொண்டுள்ளது.
Reno 10 Pro போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி ப்ரோசெசர் உள்ளது. இதனுடன், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது.
Vivo V29 Pro மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் ப்ரைமரி கேமரா லென்ஸ் 50 மெகாபிக்சல்கள், இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடன் வருகிறது. இரண்டாவது லென்ஸ் 12 மெகாபிக்சல்கள் மற்றும் மூன்றாவது லென்ஸ் 8 மெகாபிக்சல்கள். முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் உள்ளது. மைக்ரோ மூவ், சூப்பர் மூன், டூயல் வியூ, லைவ் போட்டோ போன்ற அம்சங்கள் கேமராவுடன் கிடைக்கும்.
OppoReno 10 Pro போனில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன, இதில் ப்ரைமரி கேமரா 50 மெகாபிக்சல்களுடன் வருகிறது (OIS மற்றும் Sony IMX890 சென்சார்). போனில் உள்ள செகண்டரி கேமரா 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் மூன்றாவது 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா. செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
Vivo V29 Pro யில் 4600mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
Oppo Reno 10 Pro 5G யில் 4,600mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்தமாக, இரண்டு போன்களும் பல பவர்புல் அம்சங்கள் மற்றும் சிறந்த அம்சங்களுடன் வருகிறது ரெனோ 10 ப்ரோ டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் பிரைமரி சென்சார் அடிப்படையில் முன்னணியில் உள்ளது. அதேசமயம் செல்பி சென்சார் அடிப்படையில் Vivo V29 pro சிறப்பாக உள்ளது. ஃபோன்கள் செயலாக்கம், பேட்டரி திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜ் செய்தல் ஆகியவற்றில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.