Vivo T3 Ultra vs Realme GT 6T:35ஆயிரம் பட்ஜெட்டில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?
Vivo T3 Ultra இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனில் FHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் MediaTek Dimensity 9200 சிப்செட் இருக்கிறது மேலும் இது மிட் ரேஞ்சில் வரும் Vivo போனில் பவர்புல் கேமரா வழங்கப்படுகிறது இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Realme GT 6T அறிமுகம் செய்தது மேலும் Realme கேமிங்-சென்ட்ரிக் ஸ்மார்ட்போனில் அதன் விலைக்கு ஏற்ப சரியான அம்சங்களை வழங்குகிறது மேலும் இந்த இரு போனின் அம்சங்கள் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Vivo T3 Ultra vs Realme GT 6T: டிசைன்
Vivo T3 Ultra லிருந்து ஆரம்பித்தால், இது கஸ்டமர்களுக்கு ப்ரீமியம் க்ளாஸ் பேக் பேணல் வழங்கப்படுகிறது, அதுவே Realme GT யில் பிளாஸ்டிக் பிரேம் மற்றும் பின்பெனளின் ப்ரீமியம் அனுபவத்தை தருகிறது மேலும் இதன் திக்னஸ் 7.6 mm உடன் ஒப்பிடும்போது Vivo T3 Ultra போன் Realme போனை விட மிக மெல்லியதாக இருக்கிறது. இதன் திக்னஸ் 8.7 இருக்கிறது. ஆனால் இதன் இடை பற்றி பேசினால் அவ்வளவு ஒன்னும் வித்தியாசம் இல்லை கிட்டத்தட்ட ஒரே மாதுரியாக இருக்கிறது (விவோ: 192 கிராம், ரியல்மி: 191 கிராம்) இதை தவிர வாட்டார் மற்று டஸ்ட் ரெசிஸ்டன்ட்டிர்க்காக விவோ போன் சிறப்பாக இருக்கிறது இதில் IP68 ரேட்டிங் உடன் வருகிறது அதுவே Realme போனில் IP65 ரேட் கொண்டுள்ளது.
Vivo T3 Ultra vs Realme GT 6T: டிஸ்ப்ளே
Vivo T3 Ultra யில் 6.78-इंच FHD+ (1260 x 2800 பிக்சல்)AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் 4500 nits யின் மிக சிறந்த பீக் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது மற்றும் இதில் HDR10+ சப்போர்ட் செய்கிறது. அதுவே Realme GT 6T போனை பார்த்தால் சைசில் எந்த மாற்றமும் இல்லை மற்றும் இதன் (1264 x 2780 பிக்சல்கள்) LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளது. அதன் பேனல் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் HDR சப்போர்ட் செய்கிறது இருப்பினும், 6000 nits என்ற அதிக ஹை ப்ரைட்னாஸ் உள்ளது.
Vivo T3 Ultra vs Realme GT 6T: பர்போமான்ஸ்
Vivo T3 Ultra யில் Mediatek Dimensity 9200+ சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் ஒரு ஒகட்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது இதன் கிளாக் ஸ்பீட் 3.35GHz இருக்கிறது, சிப்செட்டில் Immortalis-G715 MC11 GPU, 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது, அதுவே Realme GT 6T யில் 4nm ப்ரோசெசர் சிப்செட் இருக்கிறது, ஆனால் இது Qualcomm இன் Snapdragon 7+ Gen 3 SoC ஆகும், இது 2.8GHz ஸ்பீடில் இயங்கும் ஆக்டா கோர் ப்ரோசெசர் ஆகும். சிறந்த கேமிங் பர்போமன்சுக்கு இது Adreno 732 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.
இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான UI யில் இயங்குகின்றன. தற்போது, Vivo T3 Ultra ஆனது Funtouch OS 14 மற்றும் Realme GT 6T உடன் Realme UI 5.0 உடன் அனுப்பப்படுகிறது.
Vivo T3 Ultra vs Realme GT 6T: கேமரா
Vivo T3 Ultra யில் மிக சிறந்த கேமரா சிஸ்டம் உடன் வருகிறது, இந்த போனில் டுயல் பின்புற கேமரா சிஸ்டம் இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் (OIS) மற்றும் f/1.9 அப்ரட்ஜர் லென்ஸ் 1/1.56-இன்ச் , 24mm இருக்கிறது மேலும் இதில் 50-மெகாபிக்சல் PDAF மெயின் சென்சார் இருக்கிறது, செகண்டரி கேமரா f/2.2 அப்ரட்ஜர் லென்ஸ் 8-மேகபிக்சல் 120 டிகிரி அல்ட்ராவைட் சென்சார் வழங்கப்படுகிறது, மேலும் இதன் முன் கேமரா f/2.0 அப்ரட்ஜர் கொண்டுள்ளது, மேலும் இதில் 50-மேகபிக்சல் 21mm வைட் AF ஷூட்டார் இருக்கிறது. பின்புற மற்றும் முன் கேமராவும் 4K இல் வீடியோக்களை எடுக்க முடியும்.
அதே நேரத்தில், Realme GT 6T ஆனது Vivo T3 Ultra போன்ற அதே 50MP (26mm) + 8MP (112 டிகிரி) கேமரா செட்டிங் கொண்டுள்ளது. இருப்பினும், முன்புறத்தில் எஃப்/2.5 அப்ரட்ஜர் கூடிய 32-மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. இதன் பின்புற கேமரா 120fps ஸ்பீடில் 1080p வீடியோவை ரெக்கார்டிங் செய்யும் திறன் கொண்டது.
Vivo T3 Ultra vs Realme GT 6T: பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி
Vivo மற்றும் Realme போன்களில் 5,500mAh பேட்டரி உள்ளது. சார்ஜிங் திறன் வேறுபட்டாலும். T3 அல்ட்ரா 80W வயர்டு PD சார்ஜிங்கைக் கொண்டுள்ளது மற்றும் GT 6T 120W வயர்டு சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. Vivo தனது போனை 56 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று கூறுகிறது, அதே நேரத்தில் அதன் போன் 10 நிமிடங்களில் 0-50% ஐ எட்டும் என்று Realme கூறியுள்ளது.
இரண்டு போன்களும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்களுடன் வருகின்றன. புளூடூத் பதிப்பு 5.3 T3 அல்ட்ராவில் கிடைக்கிறது, புளூடூத் பதிப்பு 5.4 GT 6T யில் கிடைக்கிறது. Vivo உடன் ஒப்பிடும்போது, Realme ஸ்மார்ட்போன் IR சென்சார் மற்றும் NFC ஐ ஆதரிக்கிறது. அதே நேரத்தில், Realme ஃபோன் 24-பிட்/192kHz ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்டை கொண்டுள்ளது.
Vivo T3 Ultra vs Realme GT 6T: விலை
Vivo T3 Ultra யின் 8GB/128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 31,999ரூபாயாகும், அதுவே 8GB/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 33,999ரூபாய் மற்றும் 12GB/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 35,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அதுவே Realme GT 6T யின் 8ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.30,999க்கும், 8ஜிபி/256ஜிபி வேரியன்ட் ரூ.32,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியன்ட் ரூ.35,999க்கும், 12ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் டாப்-ஆஃப்-லைன் வேரியண்ட் ரூ.399க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டு ஸ்மார்ட்போன்களும் தற்போது நடைபெற்று வரும் பண்டிகை கால விற்பனையில் அவற்றின் வெளியீட்டு விலையை விட குறைந்த விலையில் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் கிடைக்கும்.
இதையும் படிங்க:Motorola G85 5G vs Realme P1 Speed 5G:இந்த இரண்டு போனில் எது பக்கா மாஸ்?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile