Vivo சமீபத்தில் இந்தியாவில் Vivo T2 போனை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.20,000க்குள் வைக்கப்பட்டுள்ளது. OnePlus Nord CE 3 Lite சமீபத்தில் அதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நாம் OnePlus Nord CE 3 Lite மற்றும் Vivo T2 யின் இந்த இரண்டு ஸ்மார்ட்போனாயும் ஒப்பிட்டு பார்த்ததில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Vivo T2 யின் 6GBரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 18,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, இந்த டிவைஸின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை 20,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.
இதன் மறுபக்கம் OnePlus Nord CE 3 Lite பற்றி பேசினால்,, இதன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியாண்டின் விலை ரூ.19,999. இது தவிர 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வகைகள் ரூ.21,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Vivo T2 ஸ்மார்ட்போனில் 6.38-இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz அப்டேட் வீதம் மற்றும் 360Hz டச் சாம்லிங் ரேட் ஆகியவற்றைப் வழங்கப்படுகிறது. டிஸ்பிளேக்கு 2,400 x 1,080 பிக்சல்கள் ரெஸலுசன் கொடுக்கப்பட்டுள்ளது.
OnePlus Nord CE 3 Lite போனில் 6.72 இன்ச் FHD+டிஸ்பிளே வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் LCD டிஸ்பிளே உடன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 680 nits பிரைட்னஸ் இருக்கிறது, மேலும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படுகிறது, UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் Adreno 619 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. Vivo T2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS இல் இயங்குகிறது. OnePlus Nord CE 3 Lite ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OxygenOS 13.1 ஐப் வழங்குகிறது.
கேமராவை பற்றி பேசினால் Vivo T2 யில் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதில் 64எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 2எம்பி பொக்கே சென்சார் கிடைக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 16எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
OnePlus Nord CE 3 Lite யில் மூன்று பின் கமெரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 108MP Samsung HM6 பிரைமரி கேமரா சென்சார், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை உள்ளன. சாதனத்தின் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
பேட்டரி பற்றி பேசுகையில் Vivo T2 யில் 4,500mAh பேட்டரி வழங்கப்படுகிறது, இது 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. அதுவே OnePlus Nord CE 3 Lite போனில் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது அது 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.