Vivo T2 Pro VS Moto Edge 40 Neo இரண்டுமே ஒரே விலை ரேன்ஜ் இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

Updated on 23-Sep-2023
HIGHLIGHTS

Motorola மற்றும் Vivo அதன் புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 25,000 பட்ஜெட்டில் இருக்கிறது

இந்த இரு ஸ்மார்ட்போன்களில் என்ன வித்தியாசம் இருக்கு என்பதை பார்க்கலாம்.

Motorola மற்றும் Vivo அதன் புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 25,000 பட்ஜெட்டில் இருக்கிறது,மோட்டோரோலாவின்  இந்த  போனில்  இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதே Vivo T2 போனில் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே இருக்கும். இந்த இரு ஸ்மார்ட்போன்களில்  என்ன  வித்தியாசம் இருக்கு என்பதை  பார்க்கலாம்.

Vivo T2 Pro VS  Moto Edge 40 Neo  டிஸ்ப்ளே

Vivo T2 Pro 5G ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் FHD+ 3D வளைந்த 10-பிட் AMOLED டிஸ்ப்ளே பேனலுடன் 120Hz அப்டேட் வீதம் மற்றும் 1300 nits ஹை ப்ரைட்னாஸ் ஆதரவுடன் வருகிறது

Motorola Edge 40 Neo டிஸ்ப்ளேவை பற்றி பேசினால், 6.55-இன்ச் full-HD+ (1,080×2,400பிக்சல்கள் ) poLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது.

Vivo T2 Pro VS  Moto Edge 40 Neo  ப்ரோசெசர்

Vivo T2 Pro ப்ரோசெசர்  பற்றி பேசினால், ஆக்டா-கோர் 4nm டிமான்சிட்டி 7200 சிப் மூலம் இயக்கப்படுகிறது, இது கிட்டத்தட்ட 7 லட்சம் AnTuTu மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. சிப்செட் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 8ஜிபி வரை அதிகரிக்கலாம்

Motorola Edge 40 Neo ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில்  octa-core 6nm MediaTek Dimensity 7030 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது., இதை தவிர இந்த போன் Android 13 அடிபடையில் இயங்கும். மேலும் இதில்   12GB யின்  LPDDR4X ரேம் மற்றும்  256GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது , 

Vivo T2 Pro VS  Moto Edge 40 Neo கேமரா

Motorola Edge 40 Neo போனின் கேமராவை பற்றி பேசினால்  இதில்  டுயல் பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் f/1.8 அப்ரட்ஜருடன் 50 மெகாபிக்சல்கள் ஆகும். அதன் இரண்டாவது சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 13 மெகாபிக்சல்கள். போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Vivo T2 Pro போனில் பின்புறத்தில் இரண்டு  கேமரா கொடுக்கப்பட்டுள்ளது ஆரா லைட்டுடன் 64MP OIS ப்ரைம்  கேமரா லென்ஸ் மற்றும் 2MP செகண்டரி கேமரா  சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 16MP செல்ஃபிக்கு கொடுக்கப்பட்டுள்ளது 

Vivo T2 Pro VS  Moto Edge 40 Neo பேட்டரி

Motorola Edge 40 Neo போனின் பேட்டரி  பற்றி பேசினால், 5000mAh பேட்டரி  உடன் 68W வயர்ட் பாஸ்ட்  சார்ஜிங் சப்போர்டுடன்  வருகிறது,, மேலும் நீங்கள் ஒருமுறை சார்ஜ் முழுமையாக செய்தால் 36 மணிநேரம் வரை பிளேபேக் டைம் கிடைக்கும்

Vivo T2 Pro போனில் 4600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 66W ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் 22 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்யப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :