Upcoming Smartphones:சூப்பர் அசத்தலான போன்கள் ஜூலை 2024 லிஸ்ட்

Upcoming Smartphones:சூப்பர் அசத்தலான போன்கள் ஜூலை 2024 லிஸ்ட்
HIGHLIGHTS

இந்தியாவில் இந்த வாரம் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கிறது

இந்த லிஸ்ட்டில் Samsung, மற்றும் Honor போன்ற பல பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் .

ஒன்பிளஸ் அதன் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வரும் நாட்களில் அறிமுகப்படுத்த உள்ளது.

Upcoming Smartphones:இந்தியாவில் இந்த வாரம் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த லிஸ்ட்டில் Samsung, மற்றும் Honor போன்ற பல பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் . ஒன்பிளஸ் அதன் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வரும் நாட்களில் அறிமுகப்படுத்த உள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சில சந்தைகளில் வேறு பெயரில் உள்ளன. பட்ஜெட் டிவைஸ்களில் iQOO மற்றும் சாம்சங் அறிமுகப்படுத்தலாம், அதே சமயம் பிரீமியம் ஹானர் 200 சீரிஸ் ஹானரால் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

iQOO Z9 Lite

iQOO Z9 Lite இந்தியாவில் ஜூலை 15 தேதி அறிமுகமாகும் அதாவது இந்த போன் இன்று அறிமுகமாகும். இது Vivo T3 Lite இன் ரீப்ரண்டட் வெர்சன் என்று கூறப்படுகிறது. இந்த போனில் 6.56 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட்டுடன் இருக்கும். இதில் HD+ ரெசல்யூஷன் கொடுக்கலாம். MediaTek Dimensity 6300 SoC ஐ போனில் காணலாம். போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இது IP64 ரேட்டிங்கை கொண்டிருக்கும். இது 5000mAh பேட்டரி திறன் கொண்ட 15W ஃபாஸ்ட் சார்ஜிங் பொருத்தப்பட்டிருக்கும்.

OnePlus Nord 4

OnePlus Nord 4 நிறுவனம் ஜூலை 16 அறிமுகம் செய்யும். இந்த போனின் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த போனின் பின்புறத்தில் மெட்டல் பேணல் இருப்பதை பார்க்கலாம், மேலும் இந்த போனில் Qualcomm Snapdragon 7 Plus Gen3 சிப்செட் உடன் வரலாம். இதை தவிர இதில் 1.5K OLED பேனலுடன் 6.74-இன்ச் 120Hz டிஸ்ப்ளேவுடன் வரலாம். இந்த போனில் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமராவுடன் வரலாம். இது 5500 mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படலாம்.

Samsung Galaxy M35

Samsung Galaxy M35 யில் நிறுவனம் இந்தியாவில் ஜூலை 17 அறிமுகம் செய்யப்பட்டது , போன் ஏற்கனவே மற்ற சந்தைகளில் கிடைக்கிறது. Samsung Galaxy M35 5G ஆனது 6.6-inch FHD+ (1080×2340 pixels) Super AMOLED Infinity O டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது 120Hz யின் ரெப்ராஸ் ரேட் உடன் , 1000 nits ஹை ப்ரைட்னஸ் கொடுக்கலாம். இந்த போனில் Exynos 1380 ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும். போனில் 50MP பிரதான பின்புற கேமரா இருக்கும். இது OIS சப்போர்டுடன் வரும். முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும். 6000 mAh பேட்டரியை இதில் காணலாம்.

Honor 200

Honor 200 சீரிஸ் நிறுவனம் ஜூலை 18 அறிமுகம் செய்யும், இந்த சீரிஸில் Honor 200 மற்றும் Honor 200 Pro அறிமுகம் செய்யலாம் இந்த இரண்டு போனின் சிறப்பம்சங்கள் ஒரே மாதுரியாக இருக்கும், ஆனால் சில சில இடங்களில் இதில் சில வித்தியாசம் இருக்கலாம்.. இதன் வெண்ணிலா மாடலில் Snapdragon 7 Gen 3 SoC கொடுக்கப்படலாம், அதேசமயம் Snapdragon 8s Gen 3 சிப்பை ப்ரோ மாடலில் காணலாம். இவை 6.7 இன்ச் அளவுடன் 1.5K 120Hz OLED ஸ்க்ரீன் கொண்டிருக்கும். கேமரா அமைப்பைப் பார்த்தால், இது 50MP+ 50MP+12MP சென்சார்களுடன் வரலாம். 5,200mAh பேட்டரி கொண்ட போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் காணலாம்.

இதையும் படிங்க: Oppo Reno 12 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo