Motorola Edge 50 Neo vs realme 13 Plus 5G: 25000 பட்ஜெட்டில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Motorola Edge 50 Neo vs realme 13 Plus 5G: 25000 பட்ஜெட்டில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

நீங்கள் ரூ.25,000க்குள் சக்திவாய்ந்த போன் வாங்க திட்டமிட்டால், உங்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Motorola Edge 50 Neo மற்றும் Realme 13+ 5G ஆகியவை இந்த பிரிவில் கிடைக்கும் சமீபத்திய போன்கள் ஆகும். மேலும் இந்த இரண்டு போனையும் விலை அம்சம் ஒப்பிட்டு பார்த்து இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Motorola Edge 50 Neo vs realme 13 Plus 5G: விலை

Motorola Edge 50 Neo வெறும் சிங்கிள் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் விலை 23,999ரூபாயாகும். நீங்க இதை PANTONE Poinciana, PANTONE Grisaille, PANTONE Lattè மற்றும் PANTONE Nautical Blue ப[ஒன்ற கலரில் வாங்கலாம்.

அதுவே realme 13 Plus பற்றி பேசினால் இது மூன்று வேரியண்டில் வருகிறது இதன் 8 ஜிபி ரேம் மாடலை 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.22,999க்கும், 256 ஜிபி ரூ.24,999க்கும் வாங்கலாம். மிகப்பெரிய 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ.26,999.யில் வாங்கலாம். மேலும் இந்த போனை Victory Gold, Speed Green மற்றும் Dark Purple கலரில் வாங்கலாம்.

Motorola Edge 50 Neo vs realme 13 Plus 5G: டிஸ்ப்ளே

Motorola Edge 50 Neo 6.4-இன்ச் டிஸ்ப்ளே உடன் 1256 × 2760 பிக்சல் ரெசல்யூசன் வழங்கப்படுகிறது இந்த ஸ்க்ரீனில் 120Hz ரெப்ரஸ் ரேட்டில் வேலை செய்யும் LTPO OPLOD பேனலில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கொரில்லா கிளாஸ் 3 செக்யுரிட்டியுடன் வருகிறது 3000நிட்ஸ் ப்ரைட்னாஸ் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்களுடன் உள்ளது.

அதுவே Realme 13 Plus 5G ஃபோன் 2400 × 1080 பிக்சல் ரேசளுசன் கொண்ட 6.67 இன்ச் FullHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது Samsung E4 AMOLED டிஸ்ப்ளே ஆகும், இது 120Hz ரெப்ரஸ் ரேட் 180Hz டச் வேரியன்ட் வீதம் மற்றும் 2000nits ப்ரைட்னாஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

Motorola Edge 50 Neo vs realme 13 Plus 5G:ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்

Motorola Edge 50 Neo மீடியாடேக் டிமான்சிட்டி 7300 ஒகட்டா கோர் ப்ரோசெசர் யில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த 8-கோர் ப்ரோசெசர் 2 GHz முதல் 2.5 GHz வரையிலான கிளாக் வேகத்தில் இயங்கும். இந்த ஃபோனில் கிராபிக்ஸ் செய்ய Mali-G615 GPU உள்ளது. மேலும் இந்த போன் சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது அவை 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆகும்

இதன் மறு பக்கம் Realme 13+ 5G பற்றி பேசினால் மீடியாடேக் டிமான்சிட்டி 7300 NG ஒகட்டா கோர் ப்ரோசெசர் யில் அறிமுகம் செய்யப்பட்டது, இது 2.5GHZ க்ளாக் ஸ்பீடில் இயங்குகிறது மேலும் கிராபிக்ஸ்க்கு இந்த போனில் Mali-G615 GPUசப்போர்ட் செய்கிறது, மேலும் இதில் மூன்று ரேம் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது

8GB RAM + 128GB Storage
8GB RAM + 256GB Storage
12GB RAM + 256GB Storage

Motorola Edge 50 Neo vs realme 13 Plus 5G: கேமரா

இதன் கேமராவை பற்றி பேசினால், Edge 50 Neo பின்புற பேனலில் மூன்று கேமரா வழங்கப்படுகிறது இதில் F/1.8 அப்ரட்ஜருடன் கூடிய 50 மெகாபிக்சல் Sony LYT 700C சென்சார், F/2.2 அப்ரட்ஜருடன் கூடிய 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் F/2.0 அப்ரட்ஜருடன் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை இதில் அடங்கும். F/2.4 அப்ரட்ஜருடன் கொண்ட 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா முன் பேனலில் கிடைக்கிறது.

மேலும் போட்டோக்ரபிக்கு realme 13 Plus 5G போனில் டுயல் கேமரா சப்போர்ட் வழங்கப்படுகிறது இதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் Sony LYT 600 சென்சார் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதில் 1.8 அப்ரட்ஜர் உடன் வருகிறது மேலும் இதில் செகண்டரி கேமரா 2 மெகாபிக்சல் மோனோ சென்சார் உடன் வருகிறது இதன் செல்பி கேமரா பற்றி பேசினால் இதில் 16மெகாபிக்சல் முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Motorola Edge 50 Neo vs realme 13 Plus 5G: பேட்டரி

பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில் Motorola Edge 50 Neo 4,310 பேட்டரி சப்போர்ட் கொண்டுள்ளது இதை தவிர இந்த போனில் பாஸ்ட் சார்ங்கக்கு 68W தர்போபவர் சர்ஜருடன் வருகிறது இதனுடன் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

Realme 13 Plus 5G போனில் 5,000Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இதில் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது

இந்த இரு போனில் எது பெஸ்ட்?

சிறப்பம்சம்Motorola Edge 50 NeoRealme 13+ 5G
டிஸ்ப்ளே6.4″ 1.2K 120Hz pOLED6.67″ FHD+ 120Hz OLED
ப்ரோசெசர்MediaTek Dimensity 7300MediaTek Dimensity 7300 Energy
ரேம் /ஸ்டோரேஜ்8GB RAM + 256GB Storage12GB RAM + 256GB Storage
OSAndroid 14 + My UXAndroid 14 + realme UI
பின் கேமரா50MP LYT 700C + 13MP Ultrawide + 10MP Telephoto50MP Sony LYT 600 + 2MP Mono
முன் கேமரா32MP Selfie16MP Selfie
பேட்டரி4,310mAh Battery5,000mAh Battery
பாஸ்ட் சார்ஜிங்68W TurboPower + 15W Wireless Charging80W Ultra Charge
டிஸ்ப்ளே ப்ரோடேக்சன்IP68 + MIL-STD 810HIP65
இதையும் படிங்க :Infinix Hot 50 VS Moto G45 5G: ரூ,10,000 இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்?
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo