iQOO Z6 Lite போன் புதிய Tecno Camon 20 சரியான போட்டியை தருமா ? இதில் எது பெஸ்ட்?

iQOO Z6 Lite போன் புதிய Tecno Camon 20  சரியான போட்டியை தருமா ? இதில் எது பெஸ்ட்?
HIGHLIGHTS

Tecno Camon 20 சீரிஸ் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது,

Tecno Camon 20, Tecno Camon 20 Pro மற்றும் Tecno Camon 20 Premier மாடல் அடங்கியுள்ளது,

Tecno Camon 20 மற்றும் iQOO Z6 Lite யின் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்று பார்ப்போம்

Tecno Camon 20 சீரிஸ் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, Tecno Camon 20, Tecno Camon 20 Pro மற்றும் Tecno Camon 20 Premier மாடல் அடங்கியுள்ளது, இதன் வெண்ணிலா மாடல்  ரூ,14,999லிருந்து ஆரம்பமாகிறது. மற்றும் இஅதே விலையில் iQOO Z6 Lite சிறந்த செயல்திறனுடன் உள்ளது. சில சந்தர்ப்பங்களில், இந்த தொலைபேசி மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. எனவே இங்கே நாங்கள் Tecno Camon 20 மற்றும் iQOO Z6 Lite யின் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்று பார்ப்போம் 

Tecno Camon 20 vs iQOO Z6 Lite ஒப்பீடு 

Tecno Camon 20 யில் FHD ரெஸலுசன் அது 6.67 இன்ச்  யின் 120Hz AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிளேயில்  செக்யுரிட்டிக்காக பிங்கர்ப்ரின்ட் ரீடர் கொடுக்கப்பட்டுள்ளது, இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 உடன் HIOS 13 ஸ்கின் கிடைக்கிறது, கேமரா பற்றி பேசுகையில்  இதன் செல்பீ கேமரா 32 மெகாபிக்ஸல்  சென்சாரும் பின்புற கேமரா 64MP  மெயின் மற்றும் 2MP  டெப்த் சென்சார்  கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர Camon 20 IP53 டேஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூப் ரெஸிஸ்டண்ட்  ப்ளூடூத் 5.2 மற்றும் 33W  பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், iQOO Z6 Lite 5G பவர் கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் Camon 20 ஐ விட சிறந்த ப்ரோசெசரை கொண்டுள்ளது. iQOO Z6 Lite ஆனது 6nm Qualcomm Snapdragon 4 Gen 1 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. நல்ல செயல்திறனுக்காக, 2.0GHz க்ளோக் வேகத்தில் வேலை செய்யும் Cortex A78 கோர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

Tecno Camon 20  யின் இந்திய  விலை மற்றும் விற்பனை.

Tecno Camon 20 ஆனது 8GB+256GB மெமரி உள்ளமைவில் மட்டுமே கிடைக்கிறது, இதன் விலை ₹14,999. மே 29 முதல் அமேசானில் இந்த ஸ்மார்ட்போனை Predawn Black, Serenity Blue மற்றும் Glacier Glow வண்ண விருப்பங்களில் வாங்கலாம். மறுபுறம், கடந்த செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO Z6 Lite யின் 6+128GB மாறுபாடு தற்போது Amazon யில் ₹13,999க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது, அதே நேரத்தில் 4+64GB மாடல் Flipkart யில் ₹14,445க்கு கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo