Samsung Galaxy Z Fold 6 vs Vivo X Fold 3 Pro: எது பக்கா மாஸ்
Galaxy Z Flip 6 மற்றும் Galaxy Z Fold 6 பாரிசில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த அடுத்த ஜெனரேசன் போல்டபில் போனில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசருடன் இதில் AI அம்சம் கொண்டிருக்கும்
இதில் Galaxy Z Fold 6 உடன் Vivo X Fold 3 Pro ஒப்பிட்டு இந்த இருபோனிலும் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்
Samsung அதன் அடுத்த ஜெனரேசன் போல்டபில் போன் Galaxy Z Flip 6 மற்றும் Galaxy Z Fold 6 பாரிசில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அடுத்த ஜெனரேசன் போல்டபில் போனில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசருடன் இதில் AI அம்சம் கொண்டிருக்கும். மேலும் இதில் Galaxy Z Fold 6 உடன் Vivo X Fold 3 Pro ஒப்பிட்டு இந்த இருபோனிலும் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Samsung Galaxy Z Fold 6 vs Vivo X Fold 3 Pro: டிசைன்
இதன் டிசைன் பற்றி பேசினால், சாம்சங் Galaxy Z Fold 6 யில் Gorilla Glass Victus 2-ப்ரோடேக்சன் இதன் பாடி முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது இதன் இடை 239 கிராம் மற்றும் 5.6mm மெலிதாக இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி பேசினால், இதில் IP48 ரேட்டிங் மற்றும் சாம்சங் அதில் அலுமினியம் கவசத்தையும் வழங்குகிறது மேலும் அதன் பின்புறத்தில் அதே பழைய Galaxy Z Folds, போல மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, ஆனால் இதில் கேமரா ரிங் சிது பெரியதாக இருக்கிறது, Galaxy Z Fold 6 மூன்று கலர் விருப்பங்களில் வருகிறது அவை Silver Shadow, Navy, மற்றும் Pink ஆகும்.
இதன் மறுபுறம் Vivo X Fold 3 Pro ஒரு ஸ்லிம்மான போல்டபில் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் இடை 236 கிராம் இருக்கிறது மற்றும் இதில் 5.2mm மெல்லியதாக இருக்கிறது. இருப்பினும் இது Galaxy Z Flip 6 விட ஸ்ட்ரோங் இல்லை மேலும் இதில் IPX8 ரேட்டிங் மற்றும் Vivo X Fold 3 Proயில் இது போன்ற எந்த பாதுகாப்பும் இல்லை இதை தவிர இது ஒரே ஒரு கலரில் வருகிறது இது Celestial Black ஆகும்.
Samsung Galaxy Z Fold 6 vs Vivo X Fold 3 Pro: எது சிறந்த டிஸ்ப்ளே
சாம்சங் Galaxy Z Fold 6 யில் 7.6-இன்ச் போல்டபில் LTPO AMOLED டிஸ்ப்ளே சப்போர்ட் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 2600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது பீக் மற்றும் இதன் வெளிப்புற டிஸ்ப்ளேவில் 6.3-inch LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் உடன் இதில் 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.
அதுவே Vivo X Fold 3 Pro யில் ஒரு தெளிவான டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதில் 8.03-இன்ச் போல்டபில் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் டால்பி விஷன் 10-பிட் சப்போர்ட் வழங்குகிறது. மற்றும் இதில் HDR10+, மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது மேலும் 6.53-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் HDR10+, 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது மற்றும் டால்பி விஷன் இருக்கிறது இந்த இரு டிச்ப்லேவிலும் Vivo X Fold 3 Pro பார்க்கும்போது இதில் 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது.
Samsung Galaxy Z Fold 6 vs Vivo X Fold 3 Pro யில் எது பெஸ்ட் ப்ரோசெசர்
இந்த இரு சாம்சங் Galaxy Z Flip 6 மற்றும் Vivo X Fold 3 Pro போனில் அதன் லேட்டஸ்ட் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் Vivo இதில் டாப் எண்டு வேரியன்ட் இருக்கிறது அதுவே X Fold 3 Pro யில் 1TB வரையிலான ஸ்டோரேஜ் மற்றும் 16GB ரேம் வேரியன்ட் இருக்கிறது, அதுவே இதன் டாப் வேரியன்ட் சாம்சங் Galaxy Z Flip 6 யில் 1TB வரையிலான ஸ்டோரேஜ் உடன் 12GB ரேம் கொண்டுள்ளது
அவற்றின் OS க்கு வரும்போது, இரண்டு ஸ்மார்ட்போன்களும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையாகக் கொண்ட UI ஐக் கொண்டுள்ளது. சாம்சங் அதன் பிரபலமான Galaxy AI உடன் இங்கு மேலிடம் உள்ளது, இது பல சிறந்த AI அம்சங்களை வழங்குகிறது.
Samsung Galaxy Z Fold 6 vs Vivo X Fold 3 Pro கேமரா
இந்த போன்களின் கேமரா பற்றி பேசுகையில் Vivo X Fold 3 Pro யில் Vivo அதன் கேமராவில் நீண்ட காலமாக வேலை செய்து வருகிறதுமற்றும் இதில் ஏற்கனவே கூறியபடி X Fold 3 pro யில் Zeiss மூன்று கேமரா செட்டப் கொண்டுள்ளது இதில் 50-மெகாபிக்சல் மெயின் கேமரா, 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இதில் இரண்டு 32 மெகாபிக்சல் சென்சார்களைக் கொண்டுள்ளது, ஒன்று மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் வெளிப்புற டிஸ்ப்ளேவில் ஒன்று.
அதுவே சாம்சங் Galaxy Z Fold 6 யில் இதிலும் நல்ல கேமராதான் இருக்கிறது ஆனால் Vivo விட சிறப்பனதாக இல்லை , 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா, 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் கேமரா செட்டிங் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, அதன் வெளிப்புற டிஸ்ப்ளே 10 மெகாபிக்சல் ஷூட்டரைக் கொண்டுள்ளது மற்றும் போல்டபில் டிஸ்ப்ளே 4 மெகாபிக்சல் ஷூட்டரைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy Z Fold 6 vs Vivo X Fold 3 Pro பேட்டரி எது பெஸ்ட்
பேட்டரி பற்றி பேசுகையில் Vivo X Fold 3 Pro யில் 5000mAh பேட்டரி உடன் இதில் 100வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது மற்றும் இதில் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது, இதன் மறுபுறம் சாம்சங் Galaxy Z Fold 6 ஆனது 25-வாட் வேகமான சார்ஜிங் ஆதரவு, 15-வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 4.5-வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்டுடன் 4400mAh பேட்டரியில் இயங்குகிறது.
இதில் எது பெஸ்ட் ?
Samsung Galaxy Z Fold 6 விட Vivo X Fold 3 Pro அனைத்திலும் சிறந்ததாக இருக்கிறது இதில் சிறந்த கேமரா, டிஸ்ப்ளே, பேட்டரி,, பேட்டரி குவாலிட்டி மற்றும் சாப்ட்வேர் போன்றவை ஆகும் இதுவும் மிகவும் முக்கியமானது. இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் X Fold 3 Pro விலை ரூ,1,59,999 மற்றும் Galaxy Z Fold 6 ஆரம்ப விலை ரூ, 1,64,999 ஆகும் இதிலிருந்தே தெரிந்து இருக்கும் விவோ தான் பெஸ்ட்
இதையும் படிங்க:Samsung யின் புதிய போன் அறிமுக செய்த கையோடு Galaxy Z Flip 5 யில் சூப்பர் டிஸ்கவுன்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile