Samsung Galaxy S25 Series சில மாதங்களுக்கு பிறகு அறிமுக செய்ய தயார் செய்து வருகிறது, இருப்பினும் Samsung Galaxy S24 Series இந்த ஆண்டு ஜனவரி மாதமே அறிமுகம் செய்யப்பட்டது இப்போது இதைப் பார்க்கும்போது, Samsung Galaxy S25 சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படலாம் என்று கூறலாம், இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. மறுபுறம், சாம்சங்கின் பரம போட்டியாளரான ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இப்ப்ழுது amsung Galaxy S25 Series பற்றிய பல லீக் தகவல் வெளிவந்துள்ளது, அந்த வகையில் இந்த இரண்டு போனையும் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம். இங்கே இன்று நாம் Samsung Galaxy S25 Ultra ஐ அறிமுகப்படுத்திய Apple iPhone 16 Pro Max உடன் ஒப்பிடப் போகிறோம். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் கசிவுகள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் சாம்சங் ஃபோனின் விவரக்குறிப்புகள் எவ்வளவு, எவ்வளவு வித்தியாசமானது என்பதை பார்க்கலாம்
இரண்டு போன்களின் டிசைநிலிருந்து ஆரம்பிக்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் நாம் பார்த்ததைப் போன்றே டைட்டானியம் ஃப்ரேமுடன் அறிமுகப்படுத்தலாம், இதை தவிர Samsung Phone யில் ஒரு 6.9இன்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யலாம்.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது இதனுடன், Samsung Galaxy S25 Ultra யில் , Samsung Galaxy S24 Ultra போலல்லாமல், இந்த முறை ஒரு ரவுண்ட் பிரேமை பெறலாம். ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் இதே போன்ற ஒன்றை நாம் பார்த்தோம்.
இதன் டிஸ்ப்ளே பற்றி பேசினால், Samsung Galaxy S25 Ultra யில் ஒரு 6.9-இன்ச் யின் Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே கிடைக்கலாம், மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வரலாம், இருப்பினும் இதன் மறுபக்கம் Apple iPhone 16 Pro Max ஏற்கனவே 6.9-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz இருக்கிறது, இங்கே கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பை Samsung Galaxy S25 Ultra டிஸ்ப்ளேவில் காணலாம். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸைப் பார்த்தால், இது செராமிக் ஷீல்டு கிளாஸுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால், Samsung Galaxy S25 Ultra யில் குவல்கமின் புதிய Snapdragon 8 Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இந்த ப்ரோசெசர் இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்படலாம், இந்த ப்ரோசெசர் பற்றி இந்த வருடம் மற்றும் அடுத்த வருடம் பல ஃபிளாக்ஷிப் போன்களில் பார்க்க போகிறது என்றும் கூறப்படுகிறது.
இதன் கேமராவை பற்றி பேசுகையில், Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் 200MP சென்சார் இருக்கலாம். இது தவிர, போனில் 12எம்பி அல்ட்ராவைட் லென்ஸ் பற்றிய பேச்சு உள்ளது, இது தவிர நீங்கள் போனில் டூயல் டெலிஃபோட்டோ லென்ஸையும் பெறலாம்.இதன் மறுபக்கம் Apple iPhone 16 Pro Max போனில் 48MP மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் ஒரு 12MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ போன்ற அம்சம் கொண்டிருக்கும் இது மட்டுமில்லாமல் இந்த போனில் 48MP யின் அல்ட்ராவைட் லென்ஸ் வழங்கப்படுகிறது இந்த போனின் கேமரா சிறப்பகவே இருக்கிறது, மேலும் Samsung யின் லேட்டஸ்ட் போன் கேமரா எப்படி இருக்கும் என்பதை போன் அறிமுகத்திற்கு பிறகு தெரியும்.
இறுதியாக, Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரியுடன் வரலாம். ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவில் உள்ள பேட்டரியைப் பார்த்தால், இது 4685mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.
இந்த இரண்டு போனுமே அந்த அந்த இடங்களில் சிறப்பக இருக்கிறது, நீங்கள் போட்டோக்ரபி,பேட்டரி பர்போமான்ஸ் Samsung மிக சிறப்பான போனாக இருக்கும் Galaxy S25 Ultra ஒரு சிறந்த ஆப்சனக இருக்கலாம். அதுவே இதன் மறுபக்கம் iPhone 16 Pro Max அதன் சிப் மற்றும் சாப்ட்வேரில் ப்ரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.இரண்டிற்கும் இடையேயான தேர்வு உங்கள் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது.
தற்போது Samsung Galaxy S25 Ultra இன் அனைத்து விவரக்குறிப்புகளும் வதந்திகள் மற்றும் கசிவுகள் போன்றவற்றின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்கிறோம். இருப்பினும், இந்த இரண்டு போன்களின் சரியான ஒப்பீட்டை நீங்கள் காண விரும்பினால், Samsung Galaxy S25 Ultra அறிமுகம் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க:iPad Mini 2024 vs iPad Air 2024: இந்த இரண்டிலும் எது பெஸ்ட்