Samsung Galaxy S24 Ultra vs Galaxy S23 Ultra vs iPhone 15 Pro Max இந்த மூன்று ப்ளக்ஷிப் போனில் எது பெஸ்ட்?

Updated on 22-Jan-2024
HIGHLIGHTS

சாம்சங் சமிபத்தில் அதன் Samsung Galaxy S24 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது,

இந்த போனில் AI மிகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

iPhone 15 Pro Max மற்றும் அதன் முந்தைய ஜெனரேசன் Samsung Galaxy S23 Ultraக்கு எதிராக நிற்க முடியுமா?

சாம்சங் சமிபத்தில் அதன் Samsung Galaxy S24 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது, நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இந்த ப்ளக்ஷிப் போனை அறிமுகம் செய்துள்ளது இந்த போனில் AI மிகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது மற்றும் இதில் சில அப்க்ரேட்கலை கொண்டு வந்துள்ளது, ஆனால் அதன் ஹை எண்டு மாடல் Samsung Galaxy S24 Ultra ஆப்பிளின் iPhone 15 Pro Max மற்றும் அதன் முந்தைய ஜெனரேசன் Samsung Galaxy S23 Ultraக்கு எதிராக நிற்க முடியுமா? இந்த மூன்றையும் ஒப்பிட்டு பார்த்து இதில் எது பெஸ்ட் என்று பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy S24 Ultra vs iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra:

டிஸ்ப்ளே

முதலில், டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், iPhone 15 Pro Max ஆனது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 2000 nits ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. மறுபுறம், S23 அல்ட்ரா மற்றும் S24 அல்ட்ரா இரண்டும் 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்க்கிறது இருப்பினும், S24 அல்ட்ரா மாடல் 2600 nits உச்ச பிரகாசத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் S23 Ultra 1750 nits ஹை ப்ரைட்னாஸ் மட்டுமே வழங்குகிறது.

பர்போமான்ஸ்

பர்போமான்ஸ் பற்றி பேசினால், இந்த போனில், இப்பொழுது ஐபோன் மாடல் ஆப்பிளின் ஏ17 ப்ரோ சிப்பில் இயங்குகிறது. சாம்சங்கின் S24 அல்ட்ரா குவால்காமின் சமீபத்திய Snapdragon 8 Gen 3 சிப்பில் இயங்குகிறது, இது Galaxy AI யின் ஜெனரேட்டிவ் AI அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், S23 அல்ட்ரா AI பவர்களை கொண்டிருக்கும் ஆனால் Snapdragon 8 Gen 2 ப்ரோசெசரை கொண்டுள்ளது.

கேமரா

மூன்று போன்களிலும் டாப்-ஆஃப்-லைன் கேமரா செட்டிங்குடன் வருகின்றன. iPhone 15 Pro Max யின் பின்புற பேனலில் மூன்று கேமரா செட்டிங் உள்ளது, இதில் 48MP ப்ரைம் கேமரா, 12MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 12MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். இதில் 12எம்பி செல்பி ஷூட்டரும் உள்ளது.

சாம்சங்கின் இந்த இரண்டு போன்களிலும் ஒரே மாதுரியான கேமராக்களை கொண்டுள்ளது, இருப்பினும், 50MP கேமரா மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ கேமராவுடன் S24 அல்ட்ராவில் மாற்றத்தைக் காணலாம். S23 அல்ட்ராவின் 10x ஆப்டிகல் ஜூம் எடுத்துச் செல்லப்படவில்லை. இதில் 200MP OIS முதன்மை, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். இது தவிர, இரண்டு ஸ்மார்ட்போன்களும் 12MP செல்ஃபி ஷூட்டருடன் வருகின்றன.

பேட்டரி

இந்த மூன்று போனின் பேட்டரி பற்றி பேசினால் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சிறிய பேட்டரியுடன் வருகிறது மற்றும் இது 4441mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மறுபுறம், இரண்டு சாம்சங் சாதனங்களிலும் 5000mAh பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆப்பிளின் போனில் 27-வாட்ஸ் மற்றும் சாம்சங்கின் போன்களில் 45-வாட்ஸ் வரை சப்போர்ட் செய்யும், இந்த மூன்று சாதனங்களும் பாஸ்ட் சார்ஜ் செய்வதை வழங்குகின்றன. சாம்சங் போன்களுடன் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டை வழங்குகிறது.

Samsung Galaxy S24 Ultra vs iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra: விலை

கடைசியாக இதன் விலை பற்றி பேசினால், iPhone யின் விலை 1,59,900 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது இதற்கிடையில், கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ 1,29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ராவின் ஆரம்ப வேரியன்ட் ரூ 1,24,999 யில் வருகிறது.

இதையும் படிங்க: WhatsApp யில் வருகிறது பைல் ஷேரிங் அம்சம் 2GB வரையிலான பைல் ஷேர் செய்ய முடியும்.

Samsung Galaxy S24 Ultra vs iPhone 15 Pro Max vs Samsung Galaxy S23 Ultra: இந்த மூன்றிலும் எது பெஸ்ட் ?

இந்த மூன்று போன்களும் டாப் ஆஃப் தி லைன் ப்லாக்ஷிப் போனகும் இது மொன்றும் ஒனுனுக்கு ஒன்னு குறைந்ததில்லை இது சரியான போட்டியை தருகிறது. மூன்று போன்களும் சிறந்த காட்சி, செயல்திறன், கேமரா திறன்கள் மற்றும் பேட்டரி ஆயுள் ஆகியவற்றை வழங்குகின்றன. இருப்பினும், இந்த மூன்று போன்களிலும் Galaxy S24 Ultra வாங்க நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஏனென்றால், இதன் மையத்தில் AI மற்றும் சமீபத்திய சாப்ட்வேர் உள்ளது, மேலும் இது மூறில் மிகவும் செலவு குறைந்த போன் என்று நான் நினைக்கிறேன்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :