Samsung Galaxy S23 FE Vs OnePlus 11:60ஆயிரம் விலையில் வரும் இந்த இரு போனில் எது பெஸ்ட்?
சாம்சங் அதன் ப்ளக்ஷிப்போனனானன Samsung Galaxy S23 FE அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
. 60 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்த போன் வருகிறது.
Galaxy S23 FE Vs OnePlus 11 எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
சாம்சங் அதன் ப்ளக்ஷிப்போனனானன Samsung Galaxy S23 FE அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 6.4 இன்ச் டைனமிக் முழு HDபிளஸ் AMOLED 2X டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. IP68 ரேட்டிங்கும் போனில் கிடைக்கிறது. 60 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்த போன் வருகிறது. OnePlus 11 அதே விலையில் வருகிறது, இது முதன்மை செயலி, கேமரா மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நீங்களும் மிட் ரேன்ஜ் ஃபிளாக்ஷிப் போனை வாங்க நினைத்தால், இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Samsung Galaxy S23 FE Vs OnePlus 11: டிஸ்ப்ளே
Galaxy S23 FE ஆனது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.4 இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஃபோனில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 120 ரெப்ராஸ் ரேட் உள்ளது. இதன் மூலம், 1,450 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ்கிடைக்கிறது.
OnePlus 11 5G ஆனது 6.7 இன்ச் QHD+ 120Hz Fluid AMOLED LTPO 3.0 டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1300 நிட்ஸ், 5000000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, 20.1:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 92.7% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, டால்பி விஷன் சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 ப்ரோடேக்சன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy S23 FE Vs OnePlus 11: ப்ரோசெசர் மற்றும் ஸ்டோரேஜ்
Galaxy S23 FE ஆனது சாம்சங் இன்-ஹவுஸ் Exynos 2200 மூலம் இயக்கப்படுகிறது, 8GB ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான One UI 5.1 உடன் வருகிறது. OnePlus 11 ஆனது Snapdragon 8 Gen 2 உடன் 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான OxygenOS 13 யில் இயங்குகிறது. இரண்டு போன்களும் 4 வருட முக்கிய ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்களுடன் 5 வருட செக்யூரிட்டி லிங்க்கலை வழங்குகிறது.
Galaxy S23 FE Vs OnePlus 11: கேமரா
Galaxy S23 FE ஆனது டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் (f/1.8 துளை) ப்ரைமரி சென்சார், 12 மெகாபிக்சல் (f/2.2அப்ரட்ஜர் ) அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் (f/2.4) ஆகியவை அடங்கும். அப்ரட்ஜர் டெலிஃபோட்டோ சென்சார். முன் கேமராவில் 10 மெகாபிக்சல் (f/2.4 அப்ரட்ஜர் சென்சார் உள்ளது.
OnePlus 11 5G ஆனது டிரிபிள் கேமரா அமைப்பைப் பெறுகிறது, இதில் OIS உடன் 50MP Sony IMX890 முதன்மை சென்சார், 48MP Sony IMX581 150-டிகிரி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 32MP Sony IMX709 2x டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16MP (f/2.4 aperture) சென்சார் உள்ளது.
Galaxy S23 FE Vs OnePlus 11: பேட்டரி
பேட்டரியைப் பற்றி பேசுகையில், ஒன்ப்ளஸ் 11 5G ஆனது பெரிய 5000mAh பேட்டரி மற்றும் 100 வாட்களில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் வருகிறது. Galaxy S23 FE ஆனது 4500mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஒன்ப்ளஸ் 11 பேட்டரி பவர் பாஸ்ட் சார்ஜ் செய்தல், செயலாக்கம் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றில் வெற்றி பெறுகிறது. அதேசமயம் சாம்சங்கின் போன் கச்சிதமானது மற்றும் டிசைன் அடிப்படையில் பிரீமியம் லுக்கை தருகிறது
இதையும் படிங்க: Google Pixel 8 Vs iPhone 15: இந்த 2 ப்ளக்ஷிப் போனில் எது பக்கா மாஸ் ?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile