Samsung Galaxy M14 5G VS Galaxy M13 5G என்ன வித்தியாசம் இருக்கிறது.

Updated on 26-Apr-2023
HIGHLIGHTS

சாம்சங் இந்தியாவில் ஒரு புதிய பட்ஜெட் போனான Galaxy M14 5G அறிமுகம் செய்துள்ளது

Galaxy M13 5G பற்றி பேசினால் இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது

Galaxy M14 5G மற்றும் Galaxy M13 5G இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கலாம்.

சாம்சங் இந்தியாவில் ஒரு புதிய பட்ஜெட் போனான Galaxy M14 5G அறிமுகம் செய்துள்ளது. அதையே மறுபுறம் Galaxy M13 5G  பற்றி பேசினால் இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, அந்த வகையில் இந்த Galaxy M14 5G மற்றும் Galaxy M13 5G இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கலாம்.

Samsung Galaxy M14 5G vs Galaxy M13 5G: டிஸ்பிளே

Samsung Galaxy M14 5G யில் 6.6 இன்ச்சின் FHD+ Infinity-V LCD ஸ்க்ரீனுடன் வருகிறது. அதன் ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது. Galaxy M13 5G யில் 6.5 இன்ச் HD+ Infinity-V LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது. 90Hz   ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது.

Samsung Galaxy M14 5G vs Galaxy M13 5G: பார்போமான்ஸ்

Galaxy M14 5G ஆனது Mali-G68 MP2 GPU உடன் இணைக்கப்பட்ட octa-core Exynos 1330 5nm சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Galaxy M13 5G ஆனது Mali2-GPUG57 உடன் இணைக்கப்பட்ட octa-core MediaTek Dimensity 700 7nm ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. Galaxy M14 5G ஆனது 4GB/6GB LPDDR4x ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது, இது மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை அதிகரிக்க முடியும்..

Samsung Galaxy M14 5G vs Galaxy M13 5G:கேமரா.

இந்த இரண்டு போன்களிலும் f/1.8 aperture மற்றும் LED ப்ளாஷ் கொண்ட 50MP பின்புற கேமரா உள்ளது. இருப்பினும், Galaxy M14 5G ஆனது f/2.4 அப்ரட்ஜருடன் கூடிய 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. Galaxy M14 5G முன்பக்கத்தில் 13MP கேமராவையும், Galaxy M13 5G ஆனது 5MP பிரான்ட் கேமராவுடன் வருகிறது.

Samsung Galaxy M14 5G vs Galaxy M13 5G: பேட்டரி

இந்த இரண்டு போனிலும் பேட்டரி பற்றி பேசுகையில் Galaxy M14 5G ஆனது 6000mAh பேட்டரியுடன் வருகிறது, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, அதே நேரத்தில் Galaxy M13 5G, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy M14 5G vs Galaxy M13 5G: விலை

Samsung Galaxy M14 5G ஆரம்ப விலை ரூ.13,490. இது தவிர, Galaxy M13 5G ஆரம்ப விலை ரூ.11,999 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :