Samsung Galaxy A16 5G vs Redmi Note 13 Pro 5G:இந்த இரண்டு போனில் எது வாங்கலாம்

Samsung Galaxy A16 5G vs Redmi Note 13 Pro 5G:இந்த இரண்டு போனில் எது வாங்கலாம்

Samsung இந்தியாவில் ஒரு புதிய 5G ஸ்மார்ட்போன் Samsung Galaxy A16 5G அறிமுகம் செய்தது, இதில் MediaTek Dimension 6300 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரேஷன் 2 ப்ரோசெசர் கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோவுடன் இதை ஒப்பிட்டு. Samsung Galaxy A16 5G மற்றும் Redmi Note 13 Pro இந்த இரண்டு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy A16 5G VS Redmi Note 13 Pro 5G விலை

Samsung Galaxy A16 5G யின் 8GB+ 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 18,999ரூபாய் மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 21,999ரூபாய்க் இருக்கிறது, பேங்க் ஆபராக SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 1,000ரூபாய் வரை கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது, Samsung Galaxy A16 5G ப்ளூ,ப்ளாக்,கோல்ட் மற்றும் லைட் கிரீன் ஆப்சனிலும் கொண்டுவரப்பட்டது

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜியின் 8ஜிபி + 128ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.22,999, 8ஜிபி + 256ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.24,999 மற்றும் 12ஜிபி + 256ஜிபி சேமிப்பு வேரியண்டின் விலை ரூ.25,999 ஆகும். இந்த போனின் கலர் ஆப்சன் பற்றி பேசினால், இது Midnight Black, Ocean Teal மற்றும் Aurora Purple கலரில் கிடைக்கிறது.

Samsung Galaxy A16 5G VS Redmi Note 13 Pro 5G எது பெஸ்ட்?

டிஸ்ப்ளே

Samsung Galaxy A16 5G யில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இது 1080×2340 பிக்சல் ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது

Redmi Note 13 Pro 5G யில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 1220×2712 பிக்சல் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது

ப்ரோசெசர்

Samsung Galaxy A16 5G யில் மீடியாடேக் டிமான்சிட்டி 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது அதுவே Redmi Note 13 Pro 5G யில் Qualcomm Snapdragon 7s Generation 2 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ்

Samsung Galaxy A16 5G யில் 8GB ரேம் உடன் 128GB அல்லது 256GB இன்பில்ட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, Redmi Note 13 Pro 5G யில் 8GB RAM அல்லது 12GB RAM உடன் இதில் 128GB, 256GB அல்லது 512GB வரையிலான இன்பில்ட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

ஒப்பரேட்டிங் சிஸ்டம்

Samsung Galaxy A16 5G ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 6.0 பிளாட்பார்மில் இயங்குகிறது. அதுவே Redmi Note 13 Pro 5G ஆண்ட்ராய்டு 13 யில் பெஸ்ட் MIUI 14 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.

கேமரா செட்டப்

Samsung Galaxy A16 5Gயின் பின்புறம் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 5-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Redmi Note 13 Pro 5G யின் பின்புறம் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி பேக்கப்

Samsung Galaxy A16 5G யில் 5,000mAh பேட்டரியுடன் இதில் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது, அதுவே Redmi Note 13 Pro 5G யில் 5,100mAh பேட்டரியுடன் 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது

செக்யுரிட்டி மற்றும் இடை

ச்க்யுரிட்டி பற்றி பேசுகையில் Samsung Galaxy A16 5G யில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் டைமென்சன் பற்றி பேசுகையில் இதன் நீளம் 164.4mm அகலம் 77.9mm இதன் மொத்தம் 7.9mm மற்றும் இதன் இடை 192 கிராம் இருக்கிறது

அதுவே Redmi Note 13 Pro 5G யின் இன்டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது, மேலும் இதன் டைமென்சன் பற்றி பேசினால், ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜியின் நீளம் 161.2 mm, அகலம் 74.3 mm, தடிமன் 8 mm மற்றும் எடை 187 கிராம் ஆகும்.

இதையும் படிங்க:Samsung Galaxy S25 Ultra VS iPhone 16 Pro Max: அறிமுக முன் இந்த போன் எப்படி இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo