Redmi Note 14 5G vs Realme 13 5G: இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்

Redmi Note 14 5G vs Realme 13 5G: இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்

Xiaomi சமீபத்தில் அதன் லேட்டஸ்ட் Redmi Note சீரிஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டது இதன் கீழ் Redmi Note 14 5G ,Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 Pro+ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது Redmi Note 14 5G யின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 17,999ரூபாயாகும் மேலும் இதே விலை ரேஞ்சில் தான் Realme 13 5G போன் வருகிறது இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Redmi Note 14 5G vs Realme 13 5G: விலை

ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை
Redmi Note 14 5G6GB+128GBRs 17,999
8GB+128GBRs 18,999
8GB+256GBRs 20,999
Realme 13 5G8GB+128GBRs 17,999
8GB+256GBRs 19,999

Redmi Note 14 5G vs Realme 13 5G:டிசைன்

  • Redmi Note 14 5G யின் டிசைன் பற்றி பேசினால் இது Black, Mystique White, மற்றும் Phantom Purple உடன் வருகிறது, மேலும் இந்த போன் பிளாஸ்டிக் கிளாட் ஸ்மார்ட்போன் ஆகும், மேலும் இதில் IP64 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது மேலும் இதில் 7.99mm திக்னஸ் மற்றும் 190g இடை கொண்டுள்ளது.
  • இதன் மறுபக்கம் Realme 13 5G யில் ஸ்பீடி கர்வ்ட் டிசைன் உடன் இது Dark Purple மற்றும் Speed Green உடன் வருகிறது மேலும் இதில் IP64 ரேட்டிங் அதே ரேட்டிங்கை கொண்டுள்ளது. இதை தவிர Redmi Note 14 5G யில் 7.79 mm திக்னஸ் மற்றும் 190கிராம் இடை கொண்டுள்ளது.

Redmi Note 14 5G vs Realme 13 5G: டிஸ்ப்ளே

  • Redmi Note 14 யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 6.67-inch AMOLED டிஸ்ப்ளே உடன் 2,400 x 1,080 ஸ்க்ரீன் ரெசளுசன் வழங்குகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் 2100nits பீக் ப்ரைட்னாஸ் மற்றும் 92.02% பாடி ரேசியோ உடன் இதில் HDR 10 சப்போர்ட் வழங்கப்படுகிறது.
  • அதுவே இதன் மறுபுறம் Realme 13 5G யில் சிறிது பெரிய 6.72 இன்ச் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே உடன் இதில் 2,400 x 1,080 பிக்சல் ரேசளுசன் மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் 580 nits ப்ரைட்னாஸ் உடன் இதில் 91.4% ஸ்க்ரீன் பாடி ரேசியோ வழங்குகிறது.

Redmi Note 14 5G vs Realme 13 5G:ப்ரோசெசர்

  • Redmi Note 14 5G யின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் உலகளவில் முதல் முறையாக இந்த போனில் MediaTek Dimensity 7025-Ultra ப்ரோசெஸர் வழங்கப்படுகிறது மேலும் இது 6GB+128GB, 8GB+128GB மற்றும் 8GB+256GB ஸ்டோரேஜ் யில் வருகிறது
  • அதுவே Realme 13 5G யில் MediaTek Dimensity 6300,6nm ப்ரோசெசர் உடன் இந்த போன் 8GB+128GB மற்றும் 8GB+256GB ரேம் ஸ்டோரேஜ் யில் வருகிறது.

Redmi Note 14 5G vs Realme 13 5G:சாப்ட்வேர்

  • இப்பொழுது இந்த போனின் சாப்ட்வேர் பற்றி பேசினால், Redmi Note 14 5G யில் Android 14 அடிபடையின் கீழ் HyperOS இன்டர்பேஸ் மற்றும் இதில் இரண்டு முக்கிய அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யூரிட்டி பெட்சஸ் வழங்குகிறது.
  • அதுவே Realme 13 5G யில் Android 14 அடிபடையின் கீழ் இது Realme UI 5.0, யில் இயங்குகிறது மேலும் இந்த போனில் இரண்டு ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்க்ரேட்ஸ் மற்றும் மூன்றாண்டு செக்யூரிட்டி பெட்சாஸ் வழங்கப்படுகிறது.

Redmi Note 14 5G vs Realme 13 5G: கேமரா

  • Redmi Note 14 5G போனின் கேமரா பற்றி பேசினால் இந்த போனில் 50MP Sony LYT-600 ப்ரைமரி கேமரா உடன் இதில் OIS மற்றும் EIS சப்போர்ட் இதனுடன் செகண்டரி கேமரா 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர செல்பி கேமரா பற்றி பேசினால் இதில் 20MP முன் கேமரா வழங்கப்படுகிறது
  • அதுவே Realme 13 5G யில் இரட்டை கேமரா செட்டப் உடன் 50MP ப்ரைமரி கேமரா உடன் OIS வருகிறது மற்றும் இதில் 2MP போர்ட்ரைட் கேமரா உடன் வருகிறது இதன் செல்பி கேமரா பற்றி பேசினால், 16MP முன் கேமரா கொண்டுள்ளது.

Redmi Note 14 5G vs Realme 13 5G: பேட்டரி மற்றும் சார்ஜிங்

  • Note 14 5G போனில் 5,110mAh பேட்டரி உடன் இதில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
  • அதுவே Realme 13 5G யில் சற்று சிறிய 5,000mAh பேட்டரி மற்றும் அதே 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது

Redmi Note 14 5G vs Realme 13 5G: இதில் எது பெஸ்ட்

Redmi Note 14 5G ஆனது Realme 13 5G ஐ விட சற்று விலை அதிகம், ஆனால் அதன் அப்டேட் மார்க்அப்பை நியாயப்படுத்துகின்றன. HDR சப்போர்டுடன் கூடிய அற்புதமான AMOLED டிஸ்ப்ளே, மிக லேட்டஸ்ட் ப்ரோசெசர் , நீட்டிக்கப்பட்ட சாப்ட்வேர் சப்போர்ட் , சிறந்த கேமரா செட்டிங் மற்றும் பெரிய பேட்டரி ஆகியவற்றைப் வழங்குகிறது.

இதையும் படிங்க:TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold: இந்த இரு போனில் என்ன வித்தியாசம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo