Redmi 13C 5G VS Redmi 14C 5G: இந்த இரு போனில் என்ன பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது ?

Redmi 13C 5G VS Redmi 14C 5G: இந்த இரு போனில் என்ன பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது ?

Redmi 13C போன் இந்தியாவில் டிசம்பர் 2023 யில் அறிமுகம் செய்யப்பட்டது, அதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் இன்று அதன் அப்க்ரேட் வெர்சனாக Redmi 14C 5G போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த இருபோனில் இருக்கும் அம்சங்களையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் மேலும் இந்த Redmi 13C 5G மற்றும் Redmi 14C 5G இந்த இரு போனில் என்ன வித்தியசம் இதன் விலை போன்ற பல தகவல்களை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Redmi 13C 5G VS Redmi 14C 5G: டிசைன்

  • இந்த போனின் டிசைன் பற்றி பேசினால் Redmi 13C 5G யில் ஸ்டார் ட்ரையால் டிசைன் உடன் வருகிறது இது ஒரு ஸ்டைலிஷ் பிளாட் பிரேம் உடன் வருகிறது ஹைட் : 168.05mm,Width: 77.91mm திக்னஸ் : 8.19mm மற்றும் இதன் இடை : 195g ஆகும்.
  • அதுவே Redmi 14C 5G டிசைன் பற்றி பேசுகையில் இதில் ப்ரீமியம் ஸ்டார்லைட் அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது அதாவது இதில் ஸ்டைலிஷ் பிளாட் பிரேம் பின்புறம் பேக் பேணல் கிளாஸ் டிசைனுடன் இருக்கும் ஆனால் பார்க்கவே மேட் பினிஷ் பீல் கொடுக்கும் ஹைட்: 171.88mm விடத்: 77.8mm திக்னஸ் : 8.22mm ஆனால் இதன் இடை மூன்றும் வெவ்வேராக இருக்கிறது Midnight Black, Dreamy Purple: 211g, Starry Blue:204g, Sage Green: 207g ஆகிய இடைகளில் இருக்கிறது.

Redmi 13C 5G VS Redmi 14C 5G டிஸ்ப்ளே :

  • Redmi 13C 5G போனை பற்றி பேசினால் இதில் 6.74 இன்ச் உடன் அல்ட்ரா பெரிய டிஸ்ப்ளே உடன் கண் ப்ரோடேக்சன் அம்சம் கொண்டுள்ளது இதனுடன் இதில் 1600 x 720 ரெசளுசனுடன் இதில் 90Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 20:09 எஸ்பெக்ட் ரேசியோ உடன் இதில் 600 ப்ரைட்னாஸ் வழங்குகிறது, மேலும் இந்த போனில் சன்லைட் மோட் இருக்கிறது
  • அதுவே இதன் மறுபக்கம் Redmi 14C யில் 6.88 இன்ச் டாட் ட்ரோப் டிஸ்ப்ளே உடன் கண் பாதுகாப்பிற்காக TuV Rheinland-சர்டிபிகேட் பேனலுடன் வருகிறது, மேலும் இதில் 1640×720 பிக்சல் ரெசளுசனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதில் 600 nits ப்ரைட்னஸ் வழங்குகிறது,89.7 ரேசியோ வழங்குகிறது TÜV Rheinland Low Blue Light மற்றும் TÜV Rheinland Flicker Free அம்சம் இருக்கிறது

Redmi 13C 5G VS Redmi 14C 5G ப்ரோசெசர் :

  • Redmi 13C 5G ப்ரோசெசர் பற்றி பேசினால், Dimensity 6100+ octa-core ப்ரோசெசருடன் Mali-G57 MC2 GPU கிராபிக்ஸ கொண்டுள்ளது.
  • Redmi 14C 5G போனில் MediaTek Helio G81-Ultra ப்ரோசெசருடன் GPU: Mali-G52 MC2 க்ராபிக்சுடன் வருகிறது

Redmi 13C 5G VS Redmi 14C 5G: ரேம் ஸ்டோரேஜ்:

  • ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், Redmi 13C 5G யில் 4GB + 128GB மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது
  • அதுவே Redmi 14C போனில் 4GB + 128GB, 4GB + 256GB, 6GB + 128GB மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது

Redmi 13C 5G VS Redmi 14C 5G: கேமரா :

  • Redmi 13C 5G போனின் பின்புற கேமரா பற்றி பேசினால் இதன் பின்புற கேமரா 50MP AI camera HDR Ai போர்ட்ரைட் மோட மற்றும் நைட் மாட் எடுக்க முடியும் மற்றும் செல்பிக்கு முன் பக்கத்தில் 5MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதில் HDR மோட்,பேசியல் ரேகோக்னேசன் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது
  • அதுவே இதன் மறுபக்கம் Redmi 14C போனில் இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் 50 MP ப்ரைமரி கேமராவுடன் 2 MP டெப்த் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் filmCamera, HDR mode, Night mode ஆகியவற்றை வழங்குகிறது மற்றும் இதில் செல்பிக்கு 8MP முன் கேமரா இருக்கிறது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்:-

  • Redmi 13C 5G போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5000mAh பேட்டரி உடன் இதில் 8W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
  • அதுவே Redmi 14C போனில் 5160Mah பேட்டரியுடன் இதில் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இதை தவிர 33W 1999 மதிப்புள்ள சார்ஜர் இந்த பாக்ஸில் வரும்

Redmi 13C 5G VS Redmi 14C 5G: விலை

  • Redmi 13C 5G இந்தியாவில் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.9,099 ஆரம்ப விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 6ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.11,299 அதேசமயம் 8ஜிபி + 256ஜிபி விலை ரூ.13,299. மேலும் இந்த அனைத்து ஸ்டோரேஜ் வகையின் அறிமுக விலையை விட 1000 ரூபாய் குறைக்கப்பட் விலை ஆகும் இது ஸ்டார்ட்ரெயில் சில்வர், ஸ்டார்ட்ரெயில் கிரீன் மற்றும் ஸ்டார்லைட் பிளாக் உள்ளிட்ட மூன்று கலர்களில் விற்பனை செய்யப்படும்.
  • Redmi 14C விலையானது அடிப்படை 4GB+64GB வேரியன்ட் ரூ.9,999 முதல் தொடங்குகிறது. 4ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,999 மற்றும் டாப்-எண்ட் 6ஜிபி+128ஜிபி வகையின் விலை ரூ.11,999. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஜனவரி 10, மதியம் 12 மணி முதல் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ஸ்டார்கேஸ் பிளாக், ஸ்டார்டஸ்ட் பர்பிள் மற்றும் ஸ்டார்லைட் ப்ளூ கலர்களில் தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க: Lava Yuva 2 5G vs POCO C75 5G:இந்த ரூ,10,000 ரேஞ்சில் வரும் இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo