Realme 5S VS Redmi Note 8 பட்ஜெட் விலையில் நான்கு கேமரா எது பெஸ்ட்
இந்த இரண்டு போன்களின் விவரக்குறிப்புகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான Realme நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் Realme X2 Pro உடன் Realme 5s அறிமுகம் செய்துள்ளது. Realme 5s பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் போனக இருந்தாலும், அதில் பிரீமியம் செய்யும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த போன் குவாட் (4) பின்புற கேமரா அமைப்பு உள்ளது. Realme 5S போட்டியிட ஷியோமியின் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஏற்கனவே உள்ளது. இது 4 பின்புற கேமராக்களுடன் வருகிறது. எனவே இந்த இரண்டு போன்களின் விவரக்குறிப்புகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
டிஸ்பிளே
Realme 5S யில் ஒரு 6.5 இன்ச் மினி ட்ரோப் டிஸ்பிளே உடன் வருகிறது.இந்த போனின் ஸ்க்ரீன் டு- பாடி ரேஷியோ 89% இருக்கிறது.அதுவே ரெட்மி நோட் 8 பற்றி பேசினால்,இதில் 19.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன் இதில் 6.3 இன்ச் முழு HD+ டாட் நோட்ச் உடன் வருகிறது.மேலும் இந்த போனின் ஸ்க்ரீன் டு-பாடி ரேஷியோ 90% இருக்கிறது.
ப்ரோசெசர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
ரெட்மி 5s ஆண்ட்ராய்டு 9பை யின் கீழ் ColorOS 6 யில் வேலை செய்கிறது. ப்ரோசெசர் பற்றி நாம் பேசினால், உங்களுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ஆக்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 8 குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ஆக்டா கோர் ப்ரோசெசருடன் வருகிறது, மேலும் ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான MIUI 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
Realme 5s யில் 4 ஜிபி ரேம் கொண்ட 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரெட்மி நோட் 8 ஐப் பற்றி பேசும்போது, இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது.
பின் கேமரா
பட்ஜெட் ஸ்மார்ட்போனக இருந்த பின்னும் இந்த இரண்டு போன்களும் நான்கு கேமராக்களுடன் வருகிறது. Realme 5s யில் உங்களுக்கு 48 மெகாபிக்சல் யின் பிரைமரி சென்சாருடன் 8மெகாபிக்ஸல் யின் அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் கொண்டுள்ளது.மேலும் இதில் 2 மெகாபிக்ஸல் மைக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்ஸல் போர்ட்ரைட் லென்ஸ் கொண்டுள்ளது.அதே நேரத்தில், ரெட்மி நோட் 8 இன் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் இரண்டு மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் செல்ஃபி எடுக்க 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
பேட்டரி
Realme 5s யில் 5000mAh பேட்டரி உடன் வருகிறது மேலும் இது 10வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.அதுவே ரெட்மி 8 யில் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது ஆனால் இதில் 4000mAh பேட்டரி தன் இருக்கிறது.
விலை
Realme 5S 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ .9,999 ஆகவும், 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .10,999 ஆகவும் உள்ளது. ரெட்மி நோட் 8 பற்றி பேசினால், அதன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டை ரூ .9,999 க்கும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டை ரூ .12,999 க்கும் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile