Realme P1 Speed vs POCO X6: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

Realme P1 Speed vs POCO X6: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

Realme யின் P1 Speed அதன் லேட்டஸ்ட் போன் ரூ,20,000 செக்மண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனில் MediaTek Dimensity 7300 Energy ப்ரோசெசர் இருக்கும், அதே போல் POCO X6 யில் வித்தியாசமான ப்ரோசெசர் வழங்கப்படுகிறது Realme P1 Speed vs POCO X6 இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Realme P1 Speed vs POCO X6: இந்திய விலை

ஸ்மார்ட்போன் ரேம் ஸ்டோரேஜ் விலை
Realme P1 Speed8GB+128GBRs 17,999
12GB+25GBRs 20,999
POCO X68GB+256GBRs 16,999
12GB+256GBRs 17,999
12GB+512GBRs 18,999

Realme P1 Speed vs POCO X6:டிசைன்

  • Realme P1 Speed l யின் பட்ஜெட் போனில் இருக்கும் டிசைன் பல போனில் இருக்காது, இதில் சர்க்குலர் கேமரா மற்றும் இது இரண்டு கலர்களில் வருகிறது Brushed Blue மற்றும் Textured Titanium ஆகியவை ஆகும். மேலும் இந்த போனின் இடை 185 கிராம் மற்றும் இதில் திக்னஸ் 7.6mm இருக்கிறது. இதை தவிர இதில் IP65 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ஸ் இருக்கிறது.
  • இதன் மறுபக்கம் POCO X6 யில் கிளாசிக் poco யின் டுயல் டிசைன் அம்சத்துடன் வருகிறது, மேலும் இதன் கேமரா பகுதியில் கேமரா கேசிங் போல் இருக்கிறது மேலும் இந்த போன் பிளாட் டிசைன் மற்றும் இதன் இடை 181.2 கிராம் மற்றும் 8.25mm திக்னஸ் இருக்கிறது மற்றும் இது Mirror Black, Skyline Blue, மற்றும் Snowstorm White என மூன்று கலர் விருப்பங்களில் வருகிறது

Realme P1 Speed vs POCO X6:டிஸ்ப்ளே

  • Realme P1 Speed யில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1080 x 2400 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது.
  • அதுவே இதன் மறுபக்கம் POCO X6 யில் 6.67-inch AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் அதிக பிக்சல் டென்சிட்டி உடன் 1220 x 2712 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது

Realme P1 Speed vs POCO X6: ப்ரோசெசர்

  • Realme P1 Speed யில் MediaTek Dimensity 7300 எனர்ஜி சிப்செட் இதில் 4nm ஒகட்டா கோர் சிப்செட்டுடன் அதிகபட்சமாக கிளாக் ஸ்பீட் 2.5 GHz மற்றும் Mali-G615 MC2 கிராபிக்ஸ் இருக்கிறது.
  • இதை தவிர இதன் மறுபக்கம் POCO X6 யில் Snapdragon 7s Gen 2 SoC.4 nm octa-core சிப்செட்டுடன் அதிகபட்ச கிளாக் ஸ்பீட் 2.40 GHz உடன் Adreno 710 GPU உடன் வருகிறது

Realme P1 Speed vs POCO X6: கேமரா

  • Realme P1 Speed யின் கீழ் டுயல் கேமரா பின்புறத்தில் வழங்கப்படுகிறது, இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இதன் முன் பக்கத்தில் செல்பிக்கு 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
  • மேலும் இதன் மறுபக்கம் POCO X6 மூன்று கேமரா செட்டபுடன் வருகிறது, இதில் 64MP ப்ரைமரி கேமரா உடன் 8MP யின் அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் முன் கேமரா செல்பிக்கு 16MP கேமரா வழங்கப்படுகிறது.

Realme P1 Speed vs POCO X6: சாப்ட்வேர்

  • Realme P1 Speed அவுட் ஆப் தி பாக்ஸ் Realme UI 5.0 அடிபடையின் கீழ் Android 14 மற்றும் Realme 2 மற்றும் 3 ஆண்டின் செக்யூரிட்டி பேட்ச் இந்த போனில் வழங்கப்படுகிறது.
  • மேலும் POCO X6 யில் MIUI 14 அடிபடையின் கீழ் Android 13 அவுட் ஆப் தி பாக்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இதில் Android 14-அடிபடையின் கீழ் HyperOS வழங்கப்படும் என POCO உருதி செய்கிறது இதை தவிர 3 ஆண்டு ஆண்ட்ரோய்ட் வெர்சன் அப்டேட் மற்றும் 4 ஆண்டு செக்யுரிட்டி பேட்ச் இந்த போனில் வழங்கப்படுகிறது.

Realme P1 Speed vs POCO X6:பேட்டரி மற்றும் சார்ஜிங்

  • Realme P1 Speed யில் 5,000mAh பேட்டரி உடன் இதில் 45W பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது
  • அதுவே POCO X6 யில் பெரிய 5,100mAh பேட்டரி உடன் இது அதிகபட்சமாக 67W சார்ஜர் பாக்ஸில் வருகிறது.

Realme P1 Speed vs POCO X6:எது பெஸ்ட்?

Realme P1 ஸ்பீடு மற்றும் POCO X6 இரண்டும் பட்ஜெட்டில் சிறந்த பர்போமான்ஸ் வழங்குகின்றன. ஆனால் POCO X6 ஆனது அதன் ஹை ரெசளுசன் ஸ்க்ரீன் , பயன்படுத்தக்கூடிய கேமராக்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றுடன் Realme P1 வேகத்தை விட முன்னணியில் உள்ளது, இது சிறந்த தேர்வாக அமைகிறது.

இதையும் படிங்க:Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G: பாக்க ஒரே மாதுரி இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo