Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G: பாக்க ஒரே மாதுரி இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்?

Updated on 16-Oct-2024

இந்தியாவில் Realme P1 Speed 5G வெற்றிகரனாக அறிமுகம் செய்யப்பட்டது இது ஒரு 15 ஆயிரம் பட்ஜெட்டில் வருகிறது, இந்த முறை இந்த போன் Realme இன் Narzo 70 Pro 5G உடன் போட்டியிடுகிறது. இந்த இரண்டு போன்களும் மிட் செக்மென்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு இதில் டிஸ்ப்ளே, கேமரா, பர்போமான்ஸ் மற்றும் மற்ற அம்சங்கள் அனைத்தும் எப்படி இருக்கு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்

Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G: டிசைன்

இதன் டிசைன் பற்றி பேசினால் இந்த இரண்டு போனின் டிசைன் ஒரே மாதுரியாக இருக்கிறது அதாவது இதில் இருக்கும் கேமரா மாட்யுல் கூட ஒரே மாதுரியாக இருக்கிறது, இருப்பினும் ஒரு சில மாற்றம் இருக்கிறது.

P1 Speed கலர் கூட ஒரே மாதுரியான டெக்ஸ்ஜர் பார்ப்பதற்கு கிடைக்கும், இருப்பினும் இதன் டெக்ஸ்ஜர் கலர் பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும், நார்சோ 70 ப்ரோவின் வடிவமைப்பு கொஞ்சம் சிறப்பாக இருக்கும். நிறுவனம் இரண்டு கலர் கலவைகளை மிக அழகாக பயன்படுத்தியுள்ளது. மீதமுள்ள பட்டனில் போன்றவற்றின் நிலை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது.

Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G டிஸ்ப்ளே

இதன் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதன் டிஸ்ப்ளே கூட ஒரே மாதுரியாக தான் இருக்கிறது அதாவது இந்த இரண்டு போனிலும் 6.67-இன்ச் FHD+ ரேசளுசன் வழங்கப்படுகிறது மற்றும் இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz வரை இருக்கிறது, இந்த இரண்டு போனிலும் 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது, இருப்பினும் கற்றோல் ரேசியோ P1 Speed யில் அதிகம் இருக்கிறது, இந்த போன் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் சப்போர்ட் செய்வதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஈரமான கைகளாலும் பயன்படுத்தலாம். இந்த விஷயத்தில் இது மற்ற போன்களை மிஞ்சும்.

Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G: கேமரா

இப்பொழு கேமரா பற்றி பேசுகையில் Realme Narzo 70 Pro யின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டிங் இருக்கிறது, Realme Narzo 70 Pro யில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைட் மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது மேலும் செல்பிக்கு அதே 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது. அதுவே P1 Speed 5G யில் பின்புறத்தில் இரண்டு கேமரா செட்டப் இருக்கிறது realme யின் போனில் 50MP ப்ரைமரி கேமரா உடன் f/1.8 அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் 2MP போர்ட்ரைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதே இதன் செல்பி பற்றி பேசுகையில் அது 16MP முன் கேமரா இருக்கிறது

Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G: பர்போமான்ஸ்

இதன் பர்போமான்ஸ் பற்றி பேசுகையில் Realme P1 Speed 5G யில் Dimensity 7300 Energy 5G வழங்கப்படுகிறது, அதுவே Realme Narzo 70 Pro 5G யில் Dimensity 7050 5G சிப்செட்டுடன் வருகிறது, இந்த இரண்டு போனின் ரியல் லைப் பயன்பாடு மிகவும் வித்தியசம் இருக்கிறது, அதாவது Narzo 70 Pro 5G யில் Mali-G68 GPU வழங்கப்படுள்ளது, அதுவே இதன் P1 Speed 5G யில் Mali-G615 பார்ப்பதற்க்கு கிடைக்கும்

ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், Realme P1 Speed யில் உங்களுக்கு 12GB வரையிலான ரேம் ஆப்சன் பார்ப்பதற்கு கிடைக்கும் இதை தவிர இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 256GB வரை இருக்கிறது, அதுவே Narzo 70 Pro யில் 8GB ரேம் ஆப்சனும் கிடைக்கும் இருப்பினும் இதன் ஸ்டோரேஜ் ஆப்சனில் 256GB வரை வழங்கப்படுகிறது அதாவது ரேம் விசயத்தில் Realme P1 Speed முன்னே செல்கிறது.

ஓவர் ஆல் பர்ப்மான்ஸ் பற்றி பேசினால் அதிகம் வித்தியாசம் இல்லை மேலும் தினசரி பயன்படுக்கு 8GB ரேம் ஆப்சன் போதுமானது, ஆனால் நீங்கள் அதிக மல்ட்டி டாஸ்கிங் வேலை செய்கிறிர்கள் என்றால் அதிக ரேம் உள்ள போன் தேவைப்படும்.

Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G: பேட்டரி

பேட்டரி பற்றி பேசுகையில் Narzo 70 Pro யில் 5000mAh பேட்டரி SUPERVOOC சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, அதுவே Realme P1 Speed யில் 5000mAh பேட்டரி உடன் 45W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது இந்த இரண்டு போனின் பேட்டரி ஒரே மாதுரியாக இருந்தத்ளும்ன் சார்ஜிங்கில் வித்தியாசம் இருக்கிறது எனவே இங்கு Narzo 70 Pro வின்னராக இருக்கிறது.

Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G: விலை

இதன் விலையை பற்றி பேசும்போது கூப்பன் மூலம் Narzo 70 Pro ஐ சுமார் ரூ.16,000க்கு வாங்கலாம். அதேசமயம் Realme P1 Speed ​​ஆனது ரூ.16 ஆயிரத்திற்கு தள்ளுபடி சலுகையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Realme P1 Speed 5G vs Realme Narzo 70 Pro 5G இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்

இந்த இரண்டு போனின் விலை ஒரே மாதுரியாக தான் இருக்கிறது Realme Narzo 70 Pro 5G யில் மிக சிறந்த கேமரா, சார்ஜிங் மற்றும் பர்போமான்ஸ் வழங்கப்படுகிறது இந்த அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில் தெரியும் Realme Narzo 70 Pro 5G இங்கு அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: Infinix Zero 40 VS POCO F6: ரூ,30,000 பட்ஜெட்டில் வரும் போனில் வித்தியாசம் என்ன?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :