Realme Narzo N65 5G vs Realme Narzo N55: இந்த போனில் எது பெஸ்ட்?

Updated on 29-May-2024

Realme குறைந்த விலையில் Realme Narzo N65 5G சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Narzo N65 உடன் Narzo N55 ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம் இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் ரேஞ்சில் சிறந்த அம்சங்களை வழங்குகின்றன. Narzo N65 மற்றும் Narzo N55 விலை மற்றும் அம்சங்களில் எது சிறந்தது என்பதை பார்ப்போம்.

Realme Narzo N65 5G vs Narzo N55:விலை

Realme Narzo N65 யின் 4GB+128GB வேரியன்ட் யின் விலை 11,499ரூபாய் மற்றும் 6GB+128GB யின் விலை 12,499ரோஓபை ஆகும், இருப்பினும், ரூ.1,000 சிறப்பு வெளியீட்டு சலுகையுடன், இந்த மாடல்கள் ரூ.10,499 மற்றும் ரூ.11,499க்கு கிடைக்கின்றன. மறுபுறம், முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட Narzo N55 இன் 4GB + 64GB வேரியண்டின் விலை ரூ.10,999 மற்றும் 6GB + 128GB வேரியண்டின் விலை ரூ.12,999 ஆகும்.

Realme Narzo N65 5G vs Narzo N55 டிசைன்

டிசைனை பொறுத்தவரை, இரண்டு போன்களும் பிளாஸ்டிக் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்ட ஒரே டிசைனை கொண்டுள்ளன. Narzo N65 ஒரு லைட் பெதர் டிசைனுடன் வருகிறது, இது லைட்வெயிட் மற்றும் டேக்ச்ஜர்ட் பினிஷ் அதேசமயம் N55 ப்ரிஸம் டிசைன் மற்றும் பினிஷுடன் வருகிறது.

#Narzo N65

Realme Narzo N65 5G vs Narzo N55: டிஸ்ப்ளே

இந்த இரு போன்களின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் Narzo N65 5G யில் 6.72 இன்ச் கொண்ட FHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, அதுவே இதன் Narzo N55 யில் 6.67 இன்ச் யின் HD+ டிஸ்ப்ளே இருக்கிறது, இருப்பினும், N65 மென்மையான 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது, இது N55 யின் 90Hz ரெப்ராஸ் ரெட்டை விட அதிகமாகும். N55 அதன் முழு HD ரேசளுசனுடன் ஷார்ப்பான டிஸ்ப்லேவை வழங்குகிறது. N65 யின் HD+ ரேசளுசன் பெரும்பாலான பயனர்களுக்கு நன்றாக இருக்க இருக்கும்.

Realme Narzo N65 5G vs Narzo N55: ப்ரோசெசர்

Narzo N65 5G யில் MediaTek Dimensity 6300 6nm சிப்செட் வழங்கப்படுகிறது அதுவே இதன் மறுபக்கம் Narzo N55 யில் MediaTek Helio G88 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு போனிலும் LPDDR4x ரேம் கொண்டுள்ளது , இதை தவிர அதிகபட்சமாக 6GB வெர்சுவல் ரேம் இருக்கிறது, N65 யில் 128GB UFS 2.2 மற்றும் N55 யில் 128GB eMMC 5.1 ஆகிய இரண்டு ஃபோன்களிலும் ஸ்டோரேஜ் விருப்பங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். N55 ஆனது 1TB வெளிப்புற ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்யும் போது N65 யில் உள்ள ஸ்டோரேஜ microSD ஐப் பயன்படுத்தி 2TB வரை அதிகரிக்க முடியும்.

Realme Narzo N55

Realme Narzo N65 5G vs Narzo N55: கேமரா

Narzo N65 மற்றும் Narzo N55 கேமரா செட்டப் பற்றி பேசினால், Narzo N65 யில் சாம்சங் JN1 சென்சார் உடன் 50 மெகபிக்சல்பின் கேமரா இருக்கிறது இது குறைந்த வெளிச்சத்தில் சிறந்த செயல்திறன் மற்றும் சிறந்த காட்சிகளை வழங்குகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இது தவிர, Narzo N55 ஆனது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. இது நார்சோ என்65 போன்ற 8 மெகாபிக்சல் முன் பெசிங் கேமராவையும் கொண்டுள்ளது.

Realme Narzo N65 5G vs Narzo N55 பேட்டரி மற்றும் ஒப்பரேட்டிங் சிஸ்டம்

Realme Narzo N65 ஆண்ட்ரோய்ட் 14 யில் Realme UI 5.0 யில் வேலை செய்கிறது N55 ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 இல் வேலை செய்கிறது. ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்டு N55ஐ Realme UI 5.0க்கு மேம்படுத்தலாம். எனவே இருவரும் மென்பொருளின் அடிப்படையில் ஒரே மாதிரியான அனுபவங்களை வழங்குகிறார்கள். இரண்டு போன்களிலும் 5000mAh பேட்டரி உள்ளது. இருப்பினும், Narzo N55 ஃபோன் 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் N65 ஃபோன் 15W ஸ்லோ சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

இரண்டு போன்களும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் Wi-Fi மற்றும் Bluetooth போன்ற கனெக்சன் விருப்பங்களுடன் வருகின்றன. N65 5G ஆனது IP54 ரெட்டிங்குடன் வருகிறது, இது டஸ்ட் மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாக்கிறது.

இதையும் படிங்க POCO F6 5G VS Realme GT 6T: இதில் எந்த போன் நமக்கு மன திருப்தியை தரும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :