Realme GT 7 Pro vs Oppo Find X8 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Updated on 27-Nov-2024

Realme GT 7 Pro இந்திய சந்தையில் ஒரு வழியாக அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனில் இருக்கும் மிக சிறந்த அம்சம் இதில் Snapdragon 8 Elite சிப்செட் வழங்குகிறது, இந்த போனில் AI டூல்ஸ் மற்றும் பல சுவாரஸ்ய அம்சங்கள் இருக்கிறது இதுக்கு சரியான போட்டியை தரும் வகையில் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Oppo Find X8 Pro இந்த போனை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் அதாவது இதில் MediaTek Dimesity 9400 சிப்செட் வழங்கப்படுகிறது, Realme GT 7 Pro மற்றும் Oppo Find X8 Pro இந்த இரு போனின் கேமரா,விலை மற்றும் இதன் அம்சங்களை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Realme GT 7 Pro vs Oppo Find X8 Pro: டிஸ்ப்ளே

இந்த போனில் டிஸ்ப்ளே பற்றி பேசினால், Realme GT 7 Pro யில் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 6,500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i, ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது, மற்றும் இதன் மறுபக்கம் Oppo Find X8 Pro யில் 6.78-inch LTPO AMOLED டிஸ்ப்ளே பேணல் உடன் 120 hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இந்த இரு போனிலும் டால்பி விஷன் மற்றும் HDR10+.சப்போர்ட் வழங்குகிறது

Realme GT 7 Pro vs Oppo Find X8 Pro: பர்போமான்ஸ்

இப்பொழுது ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Realme GT 7 Proயில் Snapdragon 8 Elite சிப்செட் மற்றும் இதன் மறுபக்கம் Oppo Find X8 Pro யில் MediaTek Dimensity 9400 ப்ரோசெசர் வழங்குகிறது மேலும் இந்த இரு போனிலும் 16GB ரேம் கொண்ட வேரியண்டில் வருகிறது, அதாவது இதில் 16GB RAM + 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடல் உடன் வருகிறது ஆனால் Realme பல வேரியன்ட் ஆப்சன் 12GB/256GB மற்றும் 16GB/512GB ஸ்டோரேஜ் ஆப்சனில் வருகிறது.

Realme GT 7 Pro vs Oppo Find X8 Pro: கேமரா

Realme GT 7 Pro மூன்று கேமரா வேரியண்டில் வருகிறது, இதில் 50 MP OIS ப்ரைமரி கேமரா ஷூட்டார் மற்றும் 50 MP டெலிபோட்டோ லென்ஸ் உடன் இதில் 3x ஆப்டிகல் ஜூம் இதனுடன் இதில் 8 MP அல்ட்ராவைட் சென்சார் உடன் வருகிறது மாற்றுகள் இதில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது. அதுவே இதன் மறுபக்கம் OPPO Find X8 Pro யில் 50MP வைட் கேமராவுடன், 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவுடன் (73mm), உடன் இதில் 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உடன் (135mm) கொண்டுள்ளது மற்றும் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமராவுடன் உடன் வருகிறது, இந்த போனில் 32MP செல்பி கேமராவுடன் முன் பக்கத்தில் வருகிறது.

Realme GT 7 Pro vs Oppo Find X8 Pro: பேட்டரி

Realme GT 7 Pro யில் 6,500mAh பேட்டரியுடன் இதில் 120W HyperCharge வசதியுடன் வருகிறது ஆனால், இதில் வயர்லஸ் சார்ஜிங் வசதி கிடையாது, OPPO Find X8 Pro யில் 5910mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

Realme GT 7 Pro vs Oppo Find X8 Pro: விலை

Realme GT 7 Pro யின் ஆரம்ப விலை 56,999ரூபாயாகும் மற்றும் அதன் டாப் வேரியன்ட் 16GB ரேம் விலை 62,999ரூபாயாகும், அதுவே இதன் மறுபக்கம் Oppo Find X8 Pro யில் 99,999ரூபாய்க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro: ஒட்டு மொத்த அம்சங்களில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :