Realme GT 6 vs Realme GT 6T: எது பக்கா மாஸ் ஸ்மார்ட்போன்

Updated on 21-Jun-2024
HIGHLIGHTS

Realme GT 6 ஜூன் 20 அன்று இந்தியாவில் அறிமுகமானது

Realme GT 6T வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு இது வருகிறது.

இந்த இரு Realme GT 6 vs Realme GT 6T போனை ஒப்பிட்டு பார்த்து இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Realme GT 6 ஜூன் 20 அன்று இந்தியாவில் அறிமுகமானது இது குறைந்த விலையில் அறிமுகமான லேட்டஸ்ட் ப்ளாக்ஷிப் போன் ஆகும் Realme GT 6T வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு இது வருகிறது. இந்த இரு போன்களும் ஒரே வரிசையின் தான் இருக்கிறது ஆனாலும் இதில் ஒரு சில வித்தியாசமும் இருக்கிறது இந்த இரு Realme GT 6 vs Realme GT 6T போனை ஒப்பிட்டு பார்த்து இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Realme GT 6 vs Realme GT 6T எது பெஸ்ட் கில்லர் போன்

டிசைன் மற்றும் டிஸ்ப்ளே

இந்த இரு போன்களும் முன்னும் பின்னும் ஏறக்குறைய ஒரே மாதுரியாகவே இருக்கிறது இந்த இரு போனிலும் 6.78-இன்ச் கொண்ட LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ரேச்களுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது இந்த பேனலில் HDR சப்போர்டுடன் இதில் 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் பேணல் வழங்கப்படுகிறது

போனின் டிசைன் பற்றி பேசிகையில் இந்த போனின் பேணலையும் சுற்றி ப்ளாஸ்டிக் பிரேம் வழங்குகிறது மற்றும் இந்த இரு போன்களில் பின்புறத்தில் ப்ளாஸ்டிக் மோதலில் வருகிறது, பின் பேனலில் மூன்று வட்ட தொகுதிகள் கொண்ட இரட்டை டோன் பினிஷ் உள்ளது மேலும் இந்த GT 6T யில் மூன்றாவது சென்சார் இல்லாதது மட்டுமே குறிப்பிடத்தக்க வித்தியாசமாகும்

கேமரா

Realme GT 6 ய்ஹில் ஒரு மூன்று கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்படுகிறது இதில் 50-மேகபிக்சல் ப்ரைமரி கேமரா 50-மெகாபிக்சல் டெலிபோட்டோ ஷூட்டார் மற்றும் 8-மேகபிக்சல் அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர முன் பக்கத்தில் 32மெகாபிக்சல் செல்பிக்கு வழங்கப்படுகிறது அதேபோல் Realme GT 6T யில் 50-மேகபிக்ச்ல் ப்ரைமரி கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா, இருப்பினும் இதில் டெலிபோட்டோ சென்சார் தவிர்க்கப்பட்டது மற்றும் இதில் வீடியோ காலிங்க்கு 32-மேகபிக்சல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

பர்போமான்ஸ்

இந்த இரு போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் GT 6 யில் Qualcomm Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மற்றும் இது ஒரு ஹை எண்டு சிப்செட் ஆகும் அதுவே GT 6T யில் Snapdragon 7+ Gen 3 SoC வழங்கப்படுகிறது

ரேம் ஸ்டோரேஜ்

Realme GT 6 யில் அதிகபட்சமாக 16GB + 512GB, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது அதுவே இதன் மறுபுறம் GT 6T யில் 12GB + 512GB வரையிலான ரேம் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

பேட்டரி

இந்த இரு போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இந்த இரு போனிலும் ஒரு பெரிய 5,500mAh பேட்டரியுடன் 120W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Realme GT 6 vs Realme GT 6T விலை தகவல்

இந்த இரு போனின் விலை பற்றி பேசினால் Realme GT 6T யின் ஆரம்ப விலை 30,999 ரூபாயாகும் மற்றும் GT 6 யின் இதன் அடிப்படை வேரியன்ட்டின் விலை 40,999ரூபாயாகும் இருக்கிறது அதாவது இந்த இரு போன்களுக்கு நடுவில் 10,000ரூபாய் வித்தியாசம் இருக்கிறது

Realme GT 6 vs Realme GT 6T எது சிறந்தது

GT 6 யில் அட்வான்ஸ்ட் ப்ரோசெசர் இருப்பதால் இது கேமிங்க்க்கு மிக சிறந்ததாக இருக்கும் மேலும் இதன் இதன் பர்போன்சை சிறந்ததாக மாற்றும் அதுவே உங்கள் பட்ஜெட்டுக்கு மீறியது என்று என்ன்னால் நீங்கள் மிட் ரேன்ஜ் போனன Realme GT 6T வாங்கலாம் , இருப்பினும் உங்கள் பட்ஜெட்டில் பிரச்சனை இல்லை என்றால் ப்ளாக்ஷிப் லெவல் பர்போமன்ச்க்கு Realme GT 6 மிக சிறந்த போனாக இருக்கும்.

இதையும் படிங்க Honor 200 vs Honor 100: எது மிக சிறந்த வெற்றியை தருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :