Realme C65 5G VS Vivo T3x 5G: பார்க்க ஒரே மாதுரி இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்

Realme C65 5G VS Vivo T3x 5G: பார்க்க ஒரே மாதுரி இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்
HIGHLIGHTS

Realme சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme C65 5G இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

, Realme C65 5G இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo T3x 5G உடன் போட்டியிடுகிறது

இந்த இரண்டு புதிய பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசமானது என்பதைப் பார்ப்போம்.

Realme சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme C65 5G இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது, இதன் விலை ரூ.10,499 முதல் தொடங்குகிறது. இந்த புதிய மலிவு விலையில் HD+ டிஸ்ப்ளே, MediaTek சிப்செட், 50MP கேமரா செட்டிங் மற்றும் 5000mAh பேட்டரி யூனிட் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த போனில் மூன்று வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வெர்சன் மற்றும் இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கின்றன. இந்த விலை பிரிவில், Realme C65 5G இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo T3x 5G உடன் போட்டியிடுகிறது. இந்த இரண்டு புதிய பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசமானது என்பதைப் பார்ப்போம்.

Realme C65 5G Vs Vivo T3x 5G: டிஸ்ப்ளே

Realme C65 யில் ஒரு 6.67இன்ச் LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது, இது மிகவும் ஸ்மூத் ஸ்க்ரோலிங்க்கு 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் இதில் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் வசதியும் உள்ளது அதாவது இந்த போனை உங்களின் ஈர கைகளாலும் பயன்படுத்தலாம் மறுபுறம், லேட்டஸ்ட் Vivo T3x ஆனது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்யும் 6.72-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 1000 நைட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.

Realme C65 5G Vs Vivo T3x 5G: பர்போமான்ஸ்

லேட்டஸ்ட் Realme இந்த போனில் MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இரண்டு ரேம் விருப்பங்கள் (4GB அல்லது 6GB) மற்றும் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்கள் (64GB அல்லது 128GB) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, டைனமிக் ரேம் டேக்நோலாஜி மூலம் 6ஜிபி ரேம் மாடலில் ரேமை 12ஜிபி வரை அதிகரிக்க முடியும். T3x ஐப் பொறுத்தவரை, இது Qualcomm Snapdragon 6 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 8GB வரை ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Realme C65 Vs Vivo T3x சாப்ட்வேர்

Realme டிவைஸ் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் இயங்குகிறது. Realme இந்த போனை அதன் சிறப்பு UI அதாவது realme UI 5.0 உடன் கொண்டு வந்துள்ளது. இதற்கிடையில், Vivo போனில் நீங்கள் Funtouch 14 OS ஐப் பெறலாம் மேலும் இது Android 14 ஐ அடிப்படையாகக் கொண்டது.

Realme C65 Vs Vivo T3x கேமரா

Realme C65 யின் பின்புறத்தில் 50மேகபிக்சல் மெயின் கேமரா கொண்டுள்ளது மற்றும் 2 மெகபிக்ஸல் செகண்டரி கேமரா கொண்டிருக்கும் அதாவது இந்த போனில் டுயல் கேமரா செட்டப் கொண்டிருக்கும்., செல்பிக்கு இந்த போனில் 8 மேகபிக்சல் கேமரா இருக்கும் அதுவே இதன் மறுபக்கம் Vivo T3x பற்றி பேசினால், இந்த போனில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் செகண்டரி கேமரா இதில் 2MP டெப்த் சென்சார் கொண்டுள்ளது இதை தவிர இந்த போனில் T3x யின் 8MP முன் கேமரா கொண்டிருக்கும்.

Realme C65 Vs Vivo T3x: பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் ரியல்மியின் இந்த போனில் 5000mAh யின் அசத்தலான பேட்டரி வழங்கப்படுகிறது இது ஒரு நாள் முழுவது எளிதாக் இயங்கும். மேலும், இது 15W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஒப்பிடுகையில், T3x 5G ஸ்மார்ட்போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டை கொண்டுள்ளது. இதில் 6000mAh பெரிய பேட்டரி உள்ளது.

Realme C65 Vs Vivo T3x: கனெக்டிவிட்டி மற்றும் பல

Realme C65 ஆனது சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரேசிச்டன்ட் IP54 ரேட்டிங்கை வழங்குகிறது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த ஃபோன் 5G கனேக்சனையும் சப்போர்ட் செய்கிறது இது தவிர, Wi-Fi, Bluetooth போன்ற அனைத்து வழக்கமான கனெக்சன் அம்சங்களும் போனில் உள்ளன. விவோவின் ஸ்மார்ட்போன் புளூடூத் 5.1 மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் அதிக பாதுகாப்பிற்காக சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரை வழங்குகிறது.

இதையும் படிங்க:Vivo T3x 5G இந்தியாவில் அறிமுகம் மேலும் இது Vivo T3 5G விட எவ்வளவு வித்தியாசம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo