Realme இன்று அதன் Realme 14x 5G போனை அறிமுகம் செய்தது மேலும் இந்த போன் Realme 12x யின் அப்க்ரேட் வெர்சன் ஆகும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Lava அதன் Lava Blaze Duo போனை அறிமுகம் செய்தது இந்த போன் Lava Agni 3 போன்ற டுயல் டிஸ்ப்ளே உடன் வரும் இப்பொழுது அந்த வகையில் Realme 14X மற்றும் Lava Blaze Duo இந்த இரு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Realme 14x 5G VS Lava Blaze Duo 5G:விலை தகவல்
Realme 14x 5G இன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999 மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. வெளியீட்டு சலுகையின் கீழ், அனைத்து வங்கிகளின் கார்டுகளிலிருந்தும் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, தொலைபேசி கிரிஸ்டல் பிளாக், கோல்ட் க்ளோ மற்றும் ஜூவல் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
Lava Blaze Duo 5G இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது , இதில் அடிப்படை 6GB + 128GB ஸ்டோரேஜ் பில்ட் ரூ.18,999. டாப்-ஆஃப்-லைன் மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இதன் விலை ரூ.20,499. ஃபோன் ஆர்க்டிக் ஒயிட் மற்றும் செலஸ்டியல் ப்ளூ கலர் விருப்பங்களைப் வழங்குகிறது, அறிமுகச் சலுகையின் கீழ், கஸ்டமர்கள் டிசம்பர் 20 முதல் Amazon India யில் Lava Blaze Duo 5G-ஐ குறைந்த விலையில் வாங்க முடியும். இதன் அடிப்படை மாடல் ரூ.16,999 ஆகவும், டாப் மாடல் ரூ.17,999 ஆகவும் விற்பனை செய்யப்படும்
Realme 14x 5G VS Lava Blaze Duo 5G : டிஸ்ப்ளே
Realme 14X யில் 6.6-இன்ச் யின் FHD+ IPS LCD இன்ச் டிஸ்ப்ளே HD+ உடன் இதில் 1604 X 720 பிக்சல் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது
Lava Blaze Duo 5G போனில் 6.67-இன்ச் FHD+ 3D கர்வ்ட் AMOLED 120hz பேனலுடன் இதன் பின்புறத்தில் 1.58-இன்ச் (228x 460 pixels) ரேசளுசனுடன் இதில் AMOLED ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது
Realme 14x 5G VS Lava Blaze Duo 5G :ப்ரோசெசர்
Realme 14x 5G போனில் , ARM Mali G57 MC2 GPU உடன் MediaTek Dimansity 6300 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 யில் வேலை செய்கிறது. நிறுவனம் இரண்டு OS அப்டேட்களை உறுதியளிக்கிறது.
அதுவே Lava Blaze Duo 5G போனில் MediaTek Dimensity 7025 6nm ப்ரோசெசருடன் IMG BXM-8-256 GPU.உடன் இதில் Android 14 அடி[படையின் கீழ் இயங்குகிறது,
Realme 14x 5G VS Lava Blaze Duo 5G: கேமரா
கேமரா செட்டப் பற்றி பேசுகையில், Realme 14x 5G யின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
அதுவே இதன் மறுபுறம் Lava Blaze Duo 5G யின் கேமரா பற்றி பேசினால், இதில் டுயல் கேமரா செட்டப் வழங்குகிறது, இதில் 64MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உடன் வருகிறது, இதன் செல்பி கேமரா பற்றி பேசினால், 16MP முன் கேமரா உடன் வருகிறது.
Realme 14x 5G VS Lava Blaze Duo 5G பேட்டரி மற்றும் சார்ஜிங்
Lava Blaze Duo 5G போனின் 5,000 mAh பேட்டரி உடன் இதில் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
Realme 14x 5G VS Lava Blaze Duo 5G: கனெக்டிவிட்டி
Realme 14x 5G போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இதில் 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். உடல் தொடுதல் இல்லாமல் ஃபோனைக் கட்டுப்படுத்தும் காற்று சைகையை இந்த ஃபோன் ஆதரிக்கிறது. பாதுகாப்பு, நீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாப்பதற்கான IP69 ரேட்டிங் , நீடித்து நிலைத்திருப்பதற்கான ArmorShell பாதுகாப்பு மற்றும் வாட்டார் மழைநீர் ஸ்மார்ட் டச் ஆகியவை அடங்கும்.
Lava Blaze Duo 5G போனில் கனேக்டிவிட்டிக்கு USB Type-C போர்ட்,இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மொஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் IP64 சர்டிபிகேசன் 5G (SA/ NSA), Dual 4G VoLTE, Wi-Fi 6E 802.11 ax, Bluetooth 5.4, Beidou, GPS, GLONASS, Galileo, மற்றும் பல இருக்கிறது
Realme 14x 5G VS Lava Blaze Duo 5G :இதில் எது பெஸ்ட் ?
நீங்கள் மிகவும் பட்ஜெட் போனை விரும்புவதோடு , நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் நீண்ட நல்ல வரை கொண்டு செல்ல விரும்பினால் , Realme 14X ஒரு சிறந்த வழி. மறுபுறம், நீங்கள் ஒரு பிரீமியம் டிஸ்ப்ளே, சிறந்த கேமரா மற்றும் அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களை விரும்பினால், Lava Blaze Duo 5G உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இரண்டு ஃபோன்களும் அந்தந்த பிரிவுகளில் சிறந்தவை, ஆனால் நீங்கள் எந்த ஃபோனை தேர்வு செய்ய வேண்டும் என்பது உங்கள் தேவையைப் பொறுத்தது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.