Realme 14x 5G அதன் லேட்டஸ்ட் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனுக்கு சரியான போட்டியை தரும் வகையில் POCO M7 Pro 5G அறிமுகம் செய்யப்பட்டது இந்த இரண்டு போனின் அம்சங்களை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க இந்த இரு போனும் 2000ரூபாய் பட்ஜெட்டில் வருகிறது சரி இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G:விலை
Realme 14x 5G இன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999 மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
Poco M7 Pro வெளியீட்டு விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது. இந்த விலை அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதன் இரண்டாவது வேரியண்டில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளது. இதன் விலை ரூ.15,999 ஆக வைக்கப்பட்டுள்ளது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: டிசைன்
Realme 14x ஆனது டைமன்ட் கட் டிசைன் மற்றும் பின்புறத்தில் squircle கேமரா மாட்யுல் கொண்டுள்ளது. இந்த போன் ஜூவல் ரெட், கிரிஸ்டல் பிளாக், கோல்டன் க்ளோ ஷேட்களில் IP68 மற்றும் IP69 ரேட்டிங்குகளுடன் வருகிறது. இது 7.94 mm திக்னஸ் மற்றும் 197 கிராம் எடை கொண்டது. இந்த போனில் வாட்டர் ப்ரூப் ப்ரோடேக்சன் மற்றும் மிலிட்டரி ஷாக் ரெசிஸ்டன்ஸ் வழங்குகிறது.
மறுபுறம், Poco M7 Pro, பின்புறத்தில் இரட்டை-டோன் டிசைன் மற்றும் சதுர கேமரா மாட்யுல் வழங்குகிறது. இது Lunar Dust, Lavender Frost மற்றும் Olive Twilight கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த போன் 7.9 mm திக்னஸ் மற்றும் 190 கிராம் எடை கொண்டது. இது IR பிளாஸ்டர் மற்றும் IP64 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: டிஸ்ப்ளே
Realme 14x ஆனது 6.67-இன்ச் HD+ IPS ஸ்க்ரீனுடன் 120Hz ரெப்ரஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது. டிஸ்ப்ளே ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச், ஏர் கேஸ்ஜர் , 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 83% NTSC மற்றும் 180Hz டச் சாம்லிங் ரேட் ஆகியவற்றை வழங்குகிறது. இது கண் ஆறுதல் முறைகள், முழு பிரைட்னஸ் DC டிமிங் மற்றும் பிற அம்சங்களையும் கொண்டுள்ளது.
Poco M7 Pro ஆனது 6.67-இன்ச் FHD+ GOLD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz அடாப்டிவ் புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. இது TUV டிரிபிள் சான்றிதழுடன் கூடிய SGS ஐ கேர் டிஸ்ப்ளே மற்றும் HDR10+ மற்றும் 2100 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: பர்போமான்ஸ்
Realme 14x 5G யில் MediaTek Dimensity 6300 SoC 6nm ப்ரோசெசருடன் இதில் 2.0GHz, மற்றும் இதில் Mali G57 MP2 GPU இருக்கிறது இதில் LPDDR4X RAM மற்றும் eMMC 5.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது.
அதுவே இதன் மறுபுறம் POCO M7 Pro 5G யில் MediaTek Dimensity 7025 Ultra SoC உடன் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெர்சுவல் ரேம் அதிகரிக்க் முடியும்.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G:சாப்ட்வேர்
இந்த போனில் சாப்ட்வேர் பற்றி பேசினால் Realme 14x 5G யில் Realme UI 5.0 அடிபடையின் கீழ் Android 14 அவுட் ஆப் தி பாக்ஸ் மற்றும் இதில் இரண்டு OS அப்டேட் மற்றும் மூன்றாண்டு செக்யுரிட்டி பெட்சஸ் அப்டேட் வழங்குகிறது.
அதுவே POCO M7 Pro 5G யில் HyperOS அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது மேலும் இதில் MIUI டயலர் அப்ளிகேசன் உடன் இதில் இரடு OS அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யூரிட்டி பெட்சாஸ் அப்டேட் வழங்குகிறது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G: கேமரா
Realme 14x 5G ஆனது f/1.8 அப்ரட்ஜருடன் கூடிய 50MP OV50D AI ப்ரைமரி கேமரா, f/2.4 துளை கொண்ட இரண்டாம் நிலை 2MP கேமரா மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா செட்டிங் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, ஸ்மார்ட்போன் f/2.0 அப்ரட்ஜருடன் 8MP ஷூட்டரைக் கொண்டுள்ளது.
POCO M7 Pro 5G ஆனது f/1.5 அப்ரட்ஜர் மற்றும் OIS உடன் 50MP Sony LYT 600 ப்ரைமரி கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட செகண்டரி கேமரா 2MP மேக்ரோ கேமராவுடன் இரட்டை கேமரா செட்டிங் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, ஸ்மார்ட்போன் f/2.2 அப்ரட்ஜருடன் 20MP ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G:பேட்டரி
Realme 14x ஆனது 6000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 45W SuperVOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதனுடன், இந்த போனில் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் சப்-ஜீரோ சார்ஜிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது மற்றும் 38 லேயர் ப்ரோடேக்சன் வழங்குகிறது. இதற்கிடையில், Poco M7 Pro 5G ஆனது சற்று சிறிய 5110mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W ஹைப்பர்சார்ஜ் வேகமான சார்ஜிங்கை சப்போர்டை கொண்டுள்ளது.
Realme 14x 5G vs POCO M7 Pro 5G:இதில் எது பெஸ்ட்?
குறைந்த விலையில் நீண்ட பேட்டரி லைப் கொண்ட போனை வாங்கினால் இதை வாங்கலாம், இதில் IP69 ரேட்டிங் உடன் பெரிய 6,000mAh பேட்டரி உடன் இதில் பல AI அம்சங்களும் கொண்டுள்ளது.
ஒப்பிடுகையில், Poco M7 Pro 5G ஆனது, AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டிருப்பதால், முதன்மையாக மீடியா நுகர்வுக்காக ஃபோனைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெருமையாக் இருக்கலாம். இந்த போன் சிறந்த சிப்செட் மற்றும் பாஸ்ட்டன ஸ்டோரேஜ் வகையையும் கொண்டுள்ளது. இது தவிர, இது OIS உடன் சிறந்த சோனி கேமரா மற்றும் அதிக ஹை-ரெஸ் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.